India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திராவின் கடப்பா மக்களவைத் தொகுதியில் காங்., வேட்பாளர் YS ஷர்மிளா, பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி YSR கட்சியின் அவினாஷ் ரெட்டி முன்னிலையில் உள்ள நிலையில், தெலுங்கு தேசம் வேட்பாளர் சுப்புராம ரெட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார். ஷர்மிளா மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சொந்த அண்ணனான ஜெகனுக்கு எதிராக, காங்கிரசில் இணைந்து அவர் அரசியலில் களமாடி வருவது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 93,821 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் தமிழ் மணி 90,660 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 18,511 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் கனிமொழி 18,229 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 9 தொகுதிகளில் 3ஆம் இடத்தில் உள்ளது. தருமபுரியில் போட்டியிட்ட சவுமியா அன்புமணி மட்டும் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். காஞ்சிபுரம், அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை மற்றும் கடலூர் தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் முதல் & இரண்டாம் இடங்களில் உள்ளனர்.
தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி 2,12,876 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
சிவநேசன் (தேமுதிக) – 88,338 வாக்குகள்
முருகானந்தம் (பாஜக) – 72,909 வாக்குகள்
ஹுமாயின் கபீர்(நாதக) – 54,889 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
கடும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தின் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக குக்கி இன மக்களுக்கும் மெய்தி இன மக்களுக்கும் இடையே நடைபெறும் பிரச்சனைகளில் பாஜக அரசு பாராமுகமாக இருப்பதாகவும் மேலும், பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்றும் காங்கிரஸ் பிரசாரம் செய்தது. அதனைத் தொடர்ந்து மணிப்பூரில் 2 தொகுதிகளை காங்கிரஸ் வெல்லவுள்ளது.
ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரகாஷ் 1.42 லட்சம் வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 93,833 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகம் 25,784 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தமாக வேட்பாளர் விஜயகுமார் 20,726 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மலையரசன் 2.84 லட்சம் வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் குமரகுரு 2.54 லட்சம் வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தேவதாஸ் உடையார் 35,897 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் ஜெகதீசன் 35,897 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் 1,81,228 வாக்குகளைப் பெற்று ‘நோட்டா’ இரண்டாம் இடம்பிடித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி இறுதிநேரத்தில் போட்டியிலிருந்து வாபஸ் பெற்றிருந்தார். இதன் காரணமாக அங்கு பாஜக வேட்பாளர் முன்னாள் எம்.பி.,சங்கர் லால்வானி எதிராக நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், அமைச்சர் கே.என்.நேருவின் மகனுமான அருண் நேரு, 1,99,207 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 71,163 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக சின்னத்தில் போட்டியிட்ட பாரிவேந்தர் 57,295 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழி 38,262 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் கடும் இழுபறிக்கு பின் முன்னிலைக்கு வந்துள்ளார். அதுவரை, முன்னிலையில் இருந்த தேமுதிக வேட்பாளரும், அக்கட்சியின் மறைந்த தலைவர் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரன் 466 வாக்குகள் பின் தங்கியுள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதால், குறைந்த வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.