India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மக்களவைத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில், 974 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 3000 தபால் வாக்குகளில், காங்கிரஸ் 913 வாக்குகளும், பாஜக 600 வாக்குகளும் பெற்றிருந்தன. இந்த நிலையில், கையெழுத்து சரியில்லை போன்ற பல்வேறு காரணங்களுக்காக 974 தபால் வாக்குகள் செல்லாது என வாக்கு எண்ணும் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியிலும், ஆளுநர் பதவியை துறந்து தென்சென்னையில் போட்டியிட்ட தமிழிசையும் பின்னடைவை சந்தித்துள்ளனர். கிட்டத்தட்ட, அந்த இரு தொகுதிகளிலும் திமுக வெற்றி முகத்தில் இருக்கிறது. அண்ணாமலையின் பிறந்தநாளான இன்று “வெற்றி” பரிசாக கிடைக்கும் என எதிர்பார்த்த பாஜக தொண்டர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர் நிதிஷ்குமாருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தொலைப்பேசி வாயிலாக உரையாடியிருக்கிறார். அப்போது, INDIA கூட்டணியில் இணைந்துகொள்ள நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் சரத் பவார். சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரையும் இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்க INDIA கூட்டணி திட்டமிடுக்கிறது.
தேசிய அளவில் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ள கட்சிகள் பட்டியலில், திமுக 5ஆவது இடத்தை பிடித்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில், பாஜக 243, காங்கிரஸ் 94, சமாஜ்வாதி 36, திரிணாமுல் காங்கிரஸ் 31, திமுக 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. இதன் மூலம் அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் கட்சிகள் பட்டியலில் திமுக 5ஆவது இடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியாது என்று திராவிட கட்சிகள் முழங்கிய நிலையில், அனைத்தும் தவிடுபொடி ஆக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தொகுதியில் 23 இடங்களில் போட்டியிட்ட பாஜக ஒருமணி நிலவரப்படி 10% வாக்கு வாங்கியுள்ளது. கடந்த காலங்களில், 3%ஆக இருந்த வாக்கு சதவிதம் தற்போது 10%ஆக உயர்ந்துள்ளது. இதனால், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகித விவரம் வெளியாகியுள்ளது. திமுக 25.28%, அதிமுக 20.67%, காங்., 10.89%, பாஜக 10.89%, சிபிஎம் 3.56%, தேமுதிக 3.26%, சிபிஐ(எம்) 2.42% வாக்குகள் பெற்றுள்ளன. நோட்டா 1.07% பெற்றுள்ள நிலையில் மற்றவை – 21.15% வாக்குகள் கிடைத்துள்ளன.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலையில், பிரதமர் மோடி அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் என அவரிடம் சந்திரபாபு உறுதி தெரிவித்ததாக, அக்கட்சியின் செய்திதொடர்பாளர் கிரீஷ்மா தெரிவித்தார். முன்னதாக காங்கிரஸ், சந்திரபாபுவுக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி – சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டணி உ.பி.யில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. விவசாய கடன் தள்ளுபடி, சாதிவாரிக் கணக்கெடுப்பு, அக்னி வீர் திட்டம் ரத்து, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் இந்த இளையோர் கூட்டணிக்கு வாக்கு வங்கியாக மாறியுள்ளது. உ.பி.யில் INDIA கூட்டணி 43 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
ஆந்திராவில் சினிமாத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டிய முதல் நபராக என்.டி.ராம ராவ் இருக்கிறார். அவருக்குப் பின் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்டோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தாலும், பெரிதாக ஜொலிக்கவில்லை. தற்போது சட்டசபை தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்டு 20 இடங்களில் முன்னிலையில் உள்ள பவன் கல்யாணுக்கு எதிர்க் கட்சித் தலைவராகும் வாய்ப்புள்ளது.
திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் நீண்ட நேரத்திற்கு பிறகு, 3,947 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அங்கு, காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சற்றுநேரம் வரை முன்னிலை வகித்து வந்த அவர், பின்னர், பின்னடைவை சந்தித்தார். தொடர்ந்து, பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் அங்கு முன்னிலை வகித்த நிலையில், தற்போது நிலவரம் மாறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.