India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனது மகனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த படத்தைக் காட்டினால் ₹1 கோடி பரிசு வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். ஜெயவர்தனுக்குத் தனிப்பட்ட அறிவு, ஆற்றல், தைரியம், துணிச்சல் உள்ளதாகக் கூறிய அவர், தனது மகனை அருகில் வைத்துக் கொண்டே பெருமை பேச முடியாது என்றார். முன்னதாக ஜெயவர்தனுக்கு ஆதரவாக, அதிமுகவினர் அதிகமாகப் பிரசாரம் செய்ததாகப் புகார் எழுந்தது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், திரிஷா, ஜெயம் ரவி நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் துல்கர் சல்மானுக்குப் பதிலாக சிம்பு நடிப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடப்பதாகவும், அதில் கமலுடன் சிம்பு கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தட்டுப்பாடின்றிக் குடிநீர் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த நிலையில், மக்களுக்குத் தட்டுப்பாடின்றிக் குடிநீர் வழங்குவது குறித்து 12 மாவட்ட ஆட்சியர்கள், துறைச் செயலர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பதைத் தவிர்க்கவும், மாணவர்களின் நலன் கருதியும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், எத்தனை பேருந்துகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன? என்ற தகவலைத் தெரிவிக்க உள்துறை, போக்குவரத்துத் துறைச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் தன்னை ராமரை விடப் பெரியதாகக் கருதுவதாகப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். சத்தீஸ்கரில் பிரசாரம் செய்த அவர், வாக்கு வங்கி அரசியல் காங்கிரசின் மரபணுவிலேயே உள்ளதாகச் சாடினார். கடந்த 10 ஆண்டுகளில் நாடு சிறப்பாக முன்னேறியுள்ளதாகவும், நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். சத்தீஸ்கரின் முந்தைய அரசு முறையாகச் செயல்படவில்லை என்றார்.
பிரதமர் மோடியின் ஆட்சியில், அரசியலின் இலக்கணம், சிந்தனை, நாகரிகம் ஆகியன மாறி விட்டதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் பிரசாரம் செய்த அவர், கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் எடுத்த முடிவின் விளைவாக ஜம்மு காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டது என்றார். சீன பொம்மைகளை வாங்கி வந்த இந்தியா, தற்போது பொம்மை ஏற்றுமதியில் 3ஆவது இடம் பிடித்துள்ளதாகக் கூறினார்.
உலகப் புத்தக நாளான இன்று புத்தகங்களை வாசியுங்கள், பிறருக்குப் பரிசளித்து ஊக்கப்படுத்துங்கள் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் X பதிவில், புதிய உலகத்திற்கான திறவுகோல், கல்வியின் அடித்தளம், சிந்தனையின் தூண்டுகோல் என மனித சமுதாயத்தை தழைக்கச் செய்வதில் புத்தகத்தின் பங்கு அளப்பரியது. கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்! எனத் தெரிவித்துள்ளார்.
‘கில்லி’ படம் ரீரிலீஸாக உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. புதுப்படங்களுக்கு இணையாக இப்படம் கொண்டாடப்படுவது திரைத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அளப்பரிய அன்பை வெளிப்படுத்தும் ரசிகர்களுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்துத் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முத்துப்பாண்டி மீதான ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
முன்னணித் திரைப்பட நடிகையான கீர்த்தி சுரேஷ், கேரளத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மகனைத் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகைக்கடை உரிமையாளர் மகனும், கீர்த்தி சுரேஷும் 13 ஆண்டுகளாகப் பழகி வருவதாகவும், திருமண ஏற்பாடுகள் அமைதியாக நடந்து வருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்துக் கீர்த்தி சுரேஷ் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
வெயில் வாட்டி எடுப்பதால், வீடுகளில் கடும் புழுக்கம் நிலவுகிறது. ஏசி இருப்போர் நிம்மதியாக இருக்கும் நிலையில், ஏ.சி. இல்லாதோர் அவதிப்படுகின்றனர். ஆனால், குளிர்ந்த காற்று கிடைக்க எளிய வழி ஒன்று உள்ளது. துணியைத் தண்ணீரில் நனைத்து, அதை ஜன்னல்களில் தொங்க விடுவதாலும், பூஞ்செடி தொட்டிகளை ஜன்னல் அருகே வைப்பதாலும் ஜில்லென்ற காற்று வீசும். இது அறைகளுக்குள் நிலவும் புழுக்கம் குறைய வழிவகுக்கும்.
Sorry, no posts matched your criteria.