News April 24, 2024

அதிமுக நிர்வாகிகள் விஸ்வாசம் இல்லை

image

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் தொண்டர்களுக்கு தலைமை மீது இருந்த விஸ்வாசம் தற்போது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை மண்டல அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் பணிபுரியவில்லை” என்று நிர்வாகிகளை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

News April 24, 2024

மத்திய அரசு ஏன் இதைச் செய்யக்கூடாது?

image

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வினாத்தாள்களைச் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி மொழிமாற்றம் செய்யலாமே என மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது. 22 மொழிகளில் வினாத்தாள்களை வழங்கக்கோரிய வழக்கில், AI மூலம் மிக எளிதாக மொழிமாற்றம் செய்யலாம். அது 100% சரியாக இல்லையென்றால், மனிதர்களைக் கொண்டு திருத்தலாம் எனக்கூறிய நீதிபதிகள் வழக்கை ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

News April 24, 2024

தேனின் மருத்துவப் பயன்கள்…

image

*இரைப்பை அழற்சி, வயிற்றுப் புண், பித்தப்பை நோய்களுக்குத் தேன் மருந்தாக உள்ளது. *எலுமிச்சம்பழச் சாறுடன் தேனைக் கலந்து பருகினால் குமட்டல், வாந்தி, மற்றும் தலைவலி சரியாகும். *கண்பார்வை தெளிவாகத் தெரியத் தேனுடன் வெங்காயச் சாரைக் கலந்து அருந்தலாம். *சாப்பாட்டிற்கு முன் 2 ஸ்பூன் தேனைத் தொடர்ந்து உட்கொண்டால் வயிற்றுப் புண் குணமாகும். *தேனோடு பால் கலந்து குடித்தால் பித்த நீர் தொந்தரவுகள் குறையும்.

News April 24, 2024

தமிழக எல்லைகளில் தீவிரச் சோதனை

image

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதால் தமிழகத்தில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, கேரளாவில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள், லாரிகள் போன்றவற்றை எல்லைப் பகுதியிலேயே தீவிரமாகச் சோதிக்கும் அதிகாரிகள், அவற்றின் மீது கிருமி நாசினியும் தெளித்து வருகின்றனர். மேலும், என்னென்ன பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன என்பதையும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 24, 2024

இதைச் செய்தால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல முடியும்

image

டெல்லி அணி வெற்றிபெற பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை என DC அணி வீரர் வார்னர் கூறியுள்ளார். நடப்பு IPL தொடரில் 3 வெற்றி மட்டுமே பெற்றுள்ள DC அணி 8ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், நாங்கள் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என நினைத்தோமோ அங்கு இல்லை. பிளே ஆஃப்க்கு செல்ல இனிவரும் அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்பதால், வெற்றிபெறக் கடினமாக முயல்வோம் என அவர் கூறியுள்ளார்.

News April 24, 2024

பி.இ. படிக்க மே மாதம் ஆன்லைனில் விண்ணப்பம்

image

2024-25 கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு, மே மாதம் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், மே 6ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், தேர்வு முடிவு வெளியான பிறகு பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

சீனாவை முந்தியது இந்தியா

image

மூன்று சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது. கடந்த ஆண்டு 5.8 இலட்சத்திற்கும் அதிகமான மூன்று சக்கர மின்சார வாகனங்களை இந்தியா விற்பனை செய்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 65% அதிகம். அதே நேரம், சீனாவில் 8% விற்பனை சரிந்து 3.2 இலட்சம் வாகனங்களே விற்பனையாகியுள்ளது. மின்சார வாகனங்களுக்கு அரசு அளித்த மானியம் விற்பனையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News April 24, 2024

வெளியேறினார் ஆஸ்திரேலிய செய்தியாளர்

image

மோடி அரசு தரும் நெருக்கடிகளால் இந்திய நாட்டில் இருந்து வெளியேறுவதாக ஆஸ்திரேலிய செய்தியாளர் அவனி தெரிவித்துள்ளார். அந்நாட்டு வானொலிக்காக டெல்லியில் தங்கிப் பணியாற்றி வந்த அவனி தியாஸ், X தளத்தில் குற்றச் சாட்டுகளை அடுக்கியுள்ளார். ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்று கூறிக்கொள்ளும் மோடி அரசு, தேர்தலுக்கு முன் தன்னை இந்தியாவில் இருந்து வெளியேறச் செய்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 24, 2024

நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்

image

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. தேர்தல் பரப்புரை நேரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ₹4 கோடி பணம் சிக்கியது. இதனை நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எடுத்துச் செல்வதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அதன்பேரில் நயினாரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

News April 24, 2024

தங்கப் பத்திரங்களைத் திருப்பி அளிக்கலாம்

image

2017 – 18 சீரிஸ் IV மற்றும் 2018 – 19 சீரிஸ் II ஆகிய தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே திரும்ப பெறுவதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 5 ஆண்டுகள் நிறைவடைந்த இந்தப் பத்திரங்களை முன் கூட்டியே திருப்பி அளிக்கலாம். கடந்த 18, 19 மற்றும் 22 தேதிகளில் தங்கத்தின் சராசரி விலை அடிப்படையில் ஒரு யூனிட் SGB-க்கு ரூ.7,325ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!