India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
8 வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம், மிஸோரம், மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் அம்மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன. சிக்கிமில் உள்ள ஒரு தொகுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், மிசோரமில் உள்ள ஒரு தொகுதியில் ஜோரம் மக்கள் இயக்கமும் முன்னிலை வகித்து வருகின்றன. மேகாலயாவில் உள்ள இரு தொகுதிகளில் ஒன்றில் மக்கள் குரல் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
பிஹார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமாருக்கு துணை பிரதமர் பதவியை வழங்க INDIA கூட்டணி முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரது தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 14 எம்பிக்களை வென்றுள்ளது. ஆகையால், அவரையும் சந்திரபாபு நாயுடுவையும் கூட்டணிக்குள் இழுக்க INDIA திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்பிக்கள் உள்ளனர்.
காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்ட உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதல்முறையாக போட்டியிட்டார். அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்தார். முடிவில் 6.60 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் தோல்வியடைந்தார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் 3,91,636 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால், மதுரை எம்.பியாக அவர் தொடர்ந்து 2ஆவது முறையாக பதவி ஏற்கவுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் 2,01,682 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சரவணன் 1,84,971 வாக்குகளும் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளனர்.
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காந்தி குடும்பத்தின் விசுவாசியான காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் ஷர்மா 50,758 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் ராகுலை வீழ்த்தி ஸ்மிருதி இரானி வெற்றி வாகை சூடியிருந்தார். இந்நிலையில், தற்போது ஷர்மாவின் வெற்றியின் மூலம் அமேதியில் இழந்த செல்வாக்கை காங்கிரஸ் மீட்டுள்ளது.
INDIA கூட்டணி சார்பில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமாருடன், மூத்த தலைவர் சரத் பவார் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது துணை பிரதமர் பதவியை தர முன் வந்ததாகவும் பரவலாக தகவல் வெளி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தாம் நிதிஷ் குமார் உள்ளிட்ட யாருடனும் இதுவரை பேசவில்லை என்று பதிலளித்தார்.
வெற்றி பெறாவிட்டாலும், நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்துள்ளதால், அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பல இடங்களில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தை பிடித்திருப்பது அக்கட்சியின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. அதே நேரம், வெற்றி என்ற இலக்கை நோக்கி நகர, கூட்டணி என்ற யோசனையை சீமான் பரிசீலிக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிமுகவின் வீழ்ச்சியே என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஜெயலலிதாவின் வாக்கு வங்கியை பாஜக சிறுக சிறுக அறுவடை செய்து வருவதாகவும், அதிமுகவின் பலவீனம் பாஜகவின் பலமாக மாறுவதாகவும் கூறுகின்றனர். அதிமுக மீண்டும் பலம் பெறாவிட்டால், பாஜகவின் எழுச்சியைத் தடுப்பது கடினம் என கூறப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3ஆவது முறையாக வெற்றி வாகை சூடினார். அங்கு அவரை எதிர்த்து களம் கண்ட அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்யை விட 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்து வந்த மோடி, இடையே 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் ரஜோரி தொகுதியில் பிடிபி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி போட்டியிட்டார். அங்கு அவர், தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் மியான் அல்டாப் அகமதிடம் தோல்வியடைந்தார். அத்தொகுதியில் அல்டாப் அகமது 5.14 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மெஹபூபா முப்தி கட்சி போட்டியிட்ட 4 மக்களவைத் தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.