News April 24, 2024

குண்டர் சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும்

image

சென்னை பள்ளிக்கரணையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி சர்மிளா தற்கொலை செய்துகொண்டது வேதனையளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பெற்றோர்களே அனைத்துக்கும் காரணம் என சர்மிளா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதால், அவர்களை உடனே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும், ஆணவக்கொலைத் தடுப்புச் சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News April 24, 2024

7 முறை டாஸில் தோற்ற ருதுராஜ்

image

ஐபிஎல் தொடரில் சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான 39ஆவது லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு டாஸ் போடப்பட்ட நிலையில், லக்னோ அணி டாஸை வென்றதுடன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த நிலையில், நடப்பு சீசனில் சென்னை அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வரும் ருதுராஜ், தொடர்ந்து 7 போட்டிகளிலும் டாஸில் தோல்வியடைந்த கேப்டன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார்.

News April 24, 2024

மேலும் 20 பேரைப் பணி நீக்கம் செய்தது கூகுள்

image

இஸ்ரேல் அரசுக்கு ஏஐ மற்றும் கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்குவது தொடர்பாக கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் 120 கோடி டாலர் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், பாலஸ்தீனத்தைத் தாக்கும் இஸ்ரேலுக்குத் தொழில்நுட்ப ரீதியாக உதவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மேலும் 20 ஊழியர்களை கூகுள் பணி நீக்கம் செய்துள்ளது. முன்னதாக, 30 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 24, 2024

பிரதமர் மோடி உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும்

image

இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடி உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார். ராஜஸ்தானில் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்துப் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்த அவர், மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் சமத்துவம் ஒழிக்கப்படும் என்றார். மேலும், ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையில் பேசும் பாஜகவுக்குத் தேசபக்தி குறித்துப் பேச எந்தத் தகுதியும் இல்லை எனக் கூறியுள்ளார்.

News April 24, 2024

இங்கிலாந்து செல்ல முயன்ற 5 பேர் பலி

image

ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். அவர்களைத் தடுக்க இங்கிலாந்து அரசு முயன்று வருகிறது. இந்நிலையில், பிரான்சில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட அகதிகள் ஒரு படகில் ஆங்கிலக் கால்வாய் வழியாக இங்கிலாந்து செல்ல முயன்றனர். அப்போது மணல் திட்டில் படகு மோதியதில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News April 24, 2024

பயங்கரவாதிகளை ஒழித்தவர் பிரதமர் மோடி

image

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாகிஸ்தான் நாள்தோறும் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதாக அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் பிரசாரம் செய்த அவர், வாக்கு வங்கிக்காகப் பாகிஸ்தான் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். பாஜக ஆட்சியில் புல்வாமா, உரி தாக்குதல்களுக்கு 10 நாளுக்குள் பதிலடி கொடுத்ததாகக் கூறிய அவர், மோடி பயங்கரவாதிகளையும், நக்சல்களையும் ஒழித்துள்ளதாகத் தெரிவித்தார்.

News April 24, 2024

திருமணக் கொண்டாட்டத்தில் அபர்ணா தாஸ்

image

‘டாடா’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்து இளைஞர்களின் மனம் கவர்ந்தவர் அபர்ணா தாஸ். இவருக்கும், ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் நடித்த தீபக் பரம்போல் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்த நிலையில், நாளை திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில், திருமணத்திற்கு முன்பு நலங்கு கொண்டாட்டங்கள் களைகட்டின. இந்தப் படங்களை அபர்ணா தாஸ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

News April 24, 2024

பாண்டியாவின் திறமை குறைந்துவிட்டது

image

அதிரடியாக ஆடும் ஹர்திக் பாண்டியாவின் திறமை குறைந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். நேற்று RR அணிக்கு எதிரான IPL போட்டியில் MI அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாண்டியா அதிரடியாக விளையாடாததே அதிக ரன்கள் எடுக்க முடியாததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதே காரணத்தைக் கூறி விமர்சித்துள்ள இர்பான் பதான், இது அணிக்குப் பாதகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

News April 24, 2024

எத்தனை சதிகள் நடந்தாலும் பயமில்லை

image

தனக்கு எதிராக எத்தனை சதிகள் நடந்தாலும் பயமில்லை என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, விசாகப்பட்டினம் மாவட்டம் பெடிபாலத்தில் பிரசாரம் செய்த அவர், 25 எம்பி தொகுதிகள் மற்றும் 175 எம்எல்ஏ தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றார். ஒரு இடத்தில் கூடத் தோற்கக் கூடாது எனக் கூறிய அவர், தனக்கு மேலும் கீழும் கடவுள் துணை இருப்பதாகத் தெரிவித்தார்.

News April 24, 2024

பள்ளத்தில் சிக்கிய தேர்

image

கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவிலில், சித்ரா பெளர்ணமியை ஒட்டித் தேரோட்டம் நடைபெற்றது. “சாரங்கா சாரங்கா” என முழக்கமிட்ட பக்தர்கள் வடத்தைப் பிடித்துத் தேரை இழுத்துச் சென்றனர். தெற்கு வீதியில் சென்றபோது அங்கிருந்த சாலையில் இருந்த பள்ளத்தில் தேரின் சக்கரம் சிக்கிக் கொண்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இயந்திரங்களின் உதவியுடன் தேர் மீட்கப்பட்டது.

error: Content is protected !!