India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் ஆகியோர் தோல்வியை தழுவினர்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் தோல்வியை தழுவினர்.
நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் NDA கூட்டணி 295 இடங்களிலும், INDIA கூட்டணி 231 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பொய்யாக்கும் வகையில், பாஜக கூட்டணிக்கு INDIA கூட்டணி கடும் போட்டியை அளித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, NDA கூட்டணிக்கு 46%, INDIA கூட்டணிக்கு 42% வெற்றி வாய்ப்புள்ளதாக NDTV கணித்துள்ளது.
ஆந்திர சட்டசபை தேர்தலில் YSR காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான அமைச்சர் ரோஜா தோல்வியடைந்துள்ளார். நகரி தொகுதியில் போட்டியிட்ட அவர் தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் காலி பானு பிரகாஷிடம் தோல்வியைத் தழுவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சொந்தக் கட்சிக்காரர்களே தனது தொகுதியில் சரியாக பணியாற்றவில்லை என்பது ரோஜாவின் குற்றச்சாட்டாக உள்ளது.
பாஜகவின் ராமர் கோயில் அரசியல் எடுபடவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில், பாஜகவின் லல்லு சிங்கைவிட, சமாஜ்வாதியின் அவதேஷ் 47,935 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், வட இந்தியாவில்மேலும், வட இந்தியாவில் மோடி அலை வீசவில்லை, மாற்றத்திற்கான அலை வீசுவதாக தெரிவித்துள்ளார்.
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை எதிர்த்து போட்டியிட்ட, பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த ஆ.ராசா, 4.50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று 2ஆவது முறையாக அந்தத் தொகுதியில் தனது வெற்றியை பதிவு செய்தார். 3ஆவது, 4ஆவது இடங்களை முறையே அதிமுக, நாதக கைப்பற்றின.
ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியிடம், பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் படுதோல்வியடைந்தார். காலையில் இருந்தே பின்னடைவை சந்தித்த ஓபிஎஸ் தோல்வியடைந்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக அதிமுக 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுதா வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, பாமக வேட்பாளர் ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் பாபு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.
தேவகவுடாவின் பேரனும், ஜேடிஎஸ் கட்சி எம்பியுமான பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வாக்குப்பதிவிற்கு சில நாள்கள் முன்பு வெளியானது. இதனால், தேர்தல் களத்தில் பரபரப்பு பற்றிக்கொள்ள பாஜக – ஜேடிஎஸ் கட்சிகளுக்கு எதிரான அலை வீசத் தொடங்கியது. அதன் தாக்கம், 2019 மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்., தற்போது 10 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
நாம் தமிழரை விட பாஜக அதிக வாக்குகள் வாங்கினால், கட்சியை கலைப்பதாக சீமான் சவால் விடுத்திருந்தார். அதற்கு அவர், பாஜக வாங்கும் வாக்கில் பாதியளவு கூட நாதகவால் வாங்க முடியாது என பதிலடி கொடுத்து இருந்தார். தற்போது முன்னிலை நிலவரமும், அவரின் கூற்றையே உறுதி செய்துள்ளது. பாஜக 11.61%, நாதக 4.24% வாக்கு பெற்றுள்ளன. இதனையடுத்து, சீமான் கட்சியை கலைப்பாரா என பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.