India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (ஏப்ரல் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் லக்னோ அணி 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து, 4ஆவது இடத்தில் சென்னை அணி 4 வெற்றி, 4 தோல்வி உடன் 8 புள்ளிகளுடன் 5ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
*காங்கிரஸ் தன்னை ராமரை விடப் பெரியதாகக் கருதுவதாகப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார் *அடுத்த 5 ஆண்டுகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் இடம் கிடைக்குமென அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி *தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட நடிகர் சிவகார்த்திகேயன் ₹50 லட்சம் நன்கொடை *ஐபிஎல்: சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
இன்று (ஏப்ரல் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
காதில் இருக்கும் மெழுகுகள் காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதே நேரம் அந்த மெழுகினை அடிக்கடி எடுத்தால் காதில் எரிச்சலையும், வறட்சியையும் ஏற்படுத்தும். காதுகளில் அடிக்கடி இயர் பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் அல்லது சீழ் வடிதல் பிரச்சனையை உண்டாக்கும். மேலும், பட்ஸ் பயன்படுத்துவதால் காதுகளின் நடுப்பகுதியில் செல்லும் நரம்பு பாதிப்புக்குள்ளானால் உணவின் சுவையை அறிய முடியாத நிலை ஏற்படலாம்.
ஐபிஎல் தொடரில், சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 210 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 211 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு ஸ்டோனிஸ் (124*) சதமடித்து கைகொடுக்க, 19.3 ஓவரில் 213/4 ரன்கள் குவித்து வெற்றி வாகை சூடியது.
அரசியல் தலைவர்கள் குற்றச்சாட்டுகளை சுமத்தலாம். ஆனால், தவறான மற்றும் மோசமான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டுமென முன்னாள் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தி உள்ளார். நேற்று பத்ம விபூஷன் விருது பெற்றதையடுத்து தனது இல்லத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘ஒரு கட்சியில் தலைவர்களை புகழ்ந்து பேசியவர்கள், வேறு கட்சிக்கு சென்றதும் அதே தலைவரை சாடுவது மிகவும் மோசமான ஒன்று’ என்றார்.
ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார். சென்னையில் நடைபெறும் லக்னோ அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ருதுராஜ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் குவித்தார். ஐபிஎல்லில் ருதுராஜ் விளாசும் இரண்டாவது சதம் இதுவாகும். இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக எம்.எஸ்.தோனி 84 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது.
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி பல்வேறு புதிய வசதிகளைச் சோதித்து வருகிறது. அந்த வகையில், இணைய வசதி இல்லாமல் படங்கள், வீடியோக்கள், ஆவணங்களைப் பகிரும் வசதியை வாட்ஸ் அப் சோதித்து வருகிறது. ப்ளூடுத்தைப் பயன்படுத்தி உருவாகி வரும் இந்தப் புதிய வசதி விரைவில் செயல்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்த வசதியை செல்போனில் மட்டுமின்றிக் கணினிகளிலும் பயன்படுத்த முடியும்.
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிவரும் LSG வீரர் ஸ்டாய்னிஸ் அரை சதம் கடந்துள்ளார். 41 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3சிக்ஸர்களுடன் 76* ரன்கள் விளாசியுள்ளார். இவரது அதிரடியால் தற்போது வரை LSG அணி 13 வர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. CSK தரப்பில் சாஹர், முஸ்தஃபிசுர், பதீரனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
Sorry, no posts matched your criteria.