India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜகவால் INDIA கூட்டணியை உடைக்க முடியாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மோடி காட்டிய அத்தனை வித்தைகளுக்கு பின்பும் பாஜக பெரும்பான்மை பெறாததது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர், ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் உதவியை பாஜக நாட வேண்டியுள்ளதாகக் கூறினார். அத்துடன், அனைத்து INDIA கூட்டணி தலைவர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியுள்ளது. போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் வென்றுள்ளனர். பித்தாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் வெற்றி பெற்றுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 1 தொகுதியில் வென்றிருந்த ஜன சேனா கட்சி இப்போது முதல் முறையாக இரட்டை இலக்கத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தேனி தொகுதியில் டிடிவி தினகரனை வீழ்த்தி, திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்த டிடிவிக்கு, ஓபிஎஸ்ஸின் ஆதரவும் இருந்தது. மேலும், ஓபிஎஸ்ஸின் சொந்தத் தொகுதியான தேனியில் போட்டியிட்டதால் அவர் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. ஆனால், தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்று பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதன்படி, 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், தனது வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.
உ.பி.,யின் நகினா தொகுதியில் ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவர் ‘பீம் ஆர்மி’ சந்திரசேகர் ஆசாத் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 5,12,552 வாக்குகளைப் பெற்ற அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஓம் குமாரைவிட 1,51,473 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார். அம்பேத்கர், கன்ஷிராம் ஆகியோரை வழிகாட்டியாக ஏற்ற ஆசாத், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்க களப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. இந்நிலையில், எந்த பிரதிபலனும் பாராமல் அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு இபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அல்லும் பகலும் அயராத உழைத்த தொண்டர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என கண் கலங்குகிறேன் எனக் கூறினார். மேலும், தேர்தல் முடிவு சோர்வடைய செய்யாது. 2026இல் மகத்தான வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென்காசி திமுக வேட்பாளர் ராணி, சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேல், தென்காசியில் ஆதிக்கம் செலுத்தி வந்த கிருஷ்ணசாமிக்கு 2ஆவது இடமே கிடைத்துள்ளது. அரசியல் பின்புலம் இல்லாத சாதாரண தொண்டரான ராணி, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது பலரும் ஆச்சரியமடைந்தனர். ஆனால், தென்காசி திமுக நிர்வாகிகளின் கடின உழைப்பு, இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது.
கேரளாவின் மலப்புரம் தொகுதியில் பாஜக சார்பில் அப்துல் சலாம் போட்டியிட்டார். பாஜகவின் ஒட்டுமொத்த வேட்பாளர்களில் இவர் ஒருவர் தான் முஸ்லிம் ஆவார். தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அவர் 85,361 வாக்குகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலிலும், பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளருக்குக் கூட வாய்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக நட்சத்திர வேட்பாளர் தமிழிசை 2ஆவது இடத்தையும், அதிமுகவின் முகமாக இருந்த ஜெயவர்தன் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் கட்சியின் தமிழ்செல்வி 4ஆவது இடத்தியும் பிடித்துள்ளனர்.
தூத்துக்குடியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் சிவசாமி வேலுமணி, தமாகாவின் விஜயசீலன் உள்ளிட்ட 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இதன் மூலம், நடப்பு தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்த வேட்பாளர் என்ற பெருமையை கனிமொழி பெற்றுள்ளார்.
Sorry, no posts matched your criteria.