India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2ஆவது இடத்தையும், தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபால் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக அமைத்த வியூகம், முடிவுகளில் எதிரொலித்துள்ளது. நாடு முழுவதும் மோடியை முன்னிறுத்தி பாஜக பிரசாரம் செய்த நிலையில், மோடி எதிர்ப்பை முன்வைத்து திமுக பிரசாரம் செய்தது. நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக மக்களிடம் தெளிவான விவாதத்தை திமுக உருவாக்கியது. இவை அனைத்தும் திமுகவின் அபார வெற்றிக்கு கைக்கொடுத்துள்ளது.
திமுக 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவையில் வெற்றி பெற்றுள்ளது. 1996இல் திமுகவை சேர்ந்த மணிமாறன் கடைசியாக அந்த தொகுதியில் வென்றார். அதனை தொடர்ந்து 1999, 2004, 2009, 2019 ஆகிய ஆண்டுகளில், திமுக கூட்டணி கட்சிகளே அந்த தொகுதியில் வென்றன. நீண்ட நாட்களாக அந்த தொகுதியில் போட்டியிடாமல் இருந்த திமுக, தற்போது 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஒடிஷா சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக அம்மாநில ஆளுநர் ரகுபர்தாஸ் அறிவித்துள்ளார். ஒடிஷா அமைச்சரவை கூட்டம் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் சற்றுமுன் கூடியது. அக்கூட்டத்தில், சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையை கலைக்கும் பரிந்துரை கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டது. ஒடிஷாவில் 77 இடங்களை வென்ற பாஜக, விரைவில் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரசார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு தேர்தல் முடிவு சாதகமாக வந்திருப்பதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது எனக் கூறி, “சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா” என்ற நீலமலைத் திருடன் திரைப்படத்தின் பாடல் வரியை சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் சிலரும் தோல்வி முகம் கண்டுள்ளனர். ஸ்மிருதி இரானி, ராஜிவ் சந்திரசேகர், அஜய் மிஸ்ரா, அர்ஜுன் முண்டா உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். அமேதியில் கடந்த முறை ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இரானி, இம்முறை அதே தொகுதியில், நேரு குடும்பத்திற்கு நெருக்கமானவரான காங்கிரசின் கிஷோரி லாலிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.
இந்த முறை தமிழ்நாட்டில் தாமரை நிச்சயம் மலரும் என்று மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் தொடர்ந்து கூறி வந்த நிலையில், 29 இடங்களில் அக்கட்சி மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளது. திமுகவை வீழ்த்துவோம் என்ற அண்ணாமலை 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி முகத்தில் உள்ளார். குறிப்பாக, திமுகவை எதிர்த்து பாஜக போட்டியிட்ட 9 தொகுதிகளில் பின்னடைவே சந்தித்து வருகிறது.
கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வீழ்த்தியுள்ளார். இதுவரை கோவையில் நேரடியாக களமிறங்காத திமுக, இந்த முறை தைரியமாக தனது வேட்பாளரை களமிறங்கியது. பாஜக, அதிமுக, கம்யூ., கட்சிகள் அங்கு வெற்றிக்கொடியை நாட்டிய நிலையில், சுமார் 28 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக திமுக வெற்றியை பதிவு செய்துள்ளது.
2024 தேர்தலில் சீமானின் நாதக தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் கிடைத்தது. இத்தேர்தலில் ஒரு இடத்திலும் வெற்றி கிடைக்கவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாதக 3வது பெரிய கட்சியாக வாக்குகளை அறுவடை செய்தது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ், அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.