India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆட்சியை மக்கள் ஆதரிப்பதற்கு இந்த தேர்தலே சாட்சி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கமல், முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இந்த வெற்றி இந்தியாவுக்கு வழியும், ஒளியும் காட்டக்கூடியவை. இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க எனக் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியை வெற்றிக்கொண்ட ஸ்மிருதி ரானி, ராகுலின் குடும்ப நண்பரான கிஷன் லாலிடம் தோல்வியை தழுவியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில், அமேதி தொகுதியில் ராகுலை வென்று, மத்திய அமைச்சரானார் ஸ்மிருதி. இம்முறையும் அவர், அதே தொகுதியில் களம் கண்ட நிலையில், அவரை எதிர்த்து கிஷன் லால் சர்மா போட்டியிட்டார். இதில், கிஷன் லால் 1 லட்சத்து 67 ஆயிரத்து 196 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு, நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தீர்க்கமான வெற்றியை தெலுங்கு தேசம் கட்சி பதிவு செய்துள்ளதாக வாழ்த்தியுள்ளார். மேலும், சந்திரபாபு நாயுடு தலைமையின் கீழ் ஆந்திர மக்கள் பெரும் முன்னேற்றத்தை அடைய வேண்டும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரஹாசன் 2ஆவது இடத்தையும், பாஜக வேட்பாளர் கார்த்திகாயினி 3ஆவது இடத்தையும் பிடித்தனர். சிதம்பரம் தொகுதியில், தொடர்ந்து 2ஆவது முறையாக திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்று, எதிர்க்கட்சிகளை கலங்கடித்துள்ளது. அதுமட்டுமின்றி, பெரும்பாலான வேட்பாளர்கள் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறங்கவுள்ள தவெக, ஆலமரமாக வளர்ந்து நிற்கும் திமுகவை வீழ்த்த எந்த மாதிரியான வியூகத்தை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேர்தல் சிறப்பாக நடைபெற உதவியவர்களுக்கும், பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைமையகத்தில் பேசிய அவர், இது 140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். அத்துடன், மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் தான் 3ஆவது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்காலிக தடைகளைத் தாண்டி, லட்சிய பயணம் தொடரும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பணம், பரிசுப் பொருட்கள், அதிகார துஷ்பிரயோகம், அவதூறுகளை கடந்து அமமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தேனி மக்கள் மீதான அன்பு சாம்ராஜ்ஜியம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளர்கள்: T.R.பாலு, ஆ.ராசா, கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, கனிமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கார்த்தி சிதம்பரம், நவாஸ் கனி, சு.வெங்கடேசன், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ரவிக்குமார், சுப்பராயன், திருமாவளவன், வசந்தகுமார், விஷ்ணு பிரசாத் ஆகியோர் 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றுள்ளனர்.
இந்திய சுதந்திர வரலாற்றில் மூன்று தேர்தல்களில் தொடர் வெற்றிகண்டு மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர் நேரு. 1951, 1957, 1962 என தொடர்ச்சியாக மக்களவைத் தேர்தல்களில் அவர் வெற்றிபெற்றார். இந்நிலையில், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி இந்த சாதனையை சமன் செய்துள்ளார். 2014, 2019 மற்றும் 2024 என மூன்று தேர்தல்களில் தொடர் வெற்றிகண்டுள்ளார் மோடி.
மகாராஷ்டிராவில் சிவசேனா ஷிண்டே அணியை பின்னுக்குத் தள்ளி உத்தவ் தாக்கரே அணியினர் தங்களது பலத்தை நிரூபித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தில் போட்டியிட்ட ஏக்நாத் ஷிண்டே அணியினர் 6 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளனர். அதே நேரத்தில், மத்திய பாஜக அரசு கொடுத்த நெருக்கடிக்கு மத்தியில் உத்தவ் அணி மும்பையில் 3 தொகுதிகள் உள்பட 10 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது.
Sorry, no posts matched your criteria.