India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து கரூர் மாவட்டத்திலும் வெப்ப அலை வீசும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வெப்ப அலை காரணமாக நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று வேலூர், சேலம், நாமக்கல் ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
3 நாள்களுக்கு பிறகு ராகுல் காந்தி இன்று மீண்டும் பரப்புரையில் ஈடுபட உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 3 நாள்களாக ராகுல் காந்தி தேர்தல் பரப்புரைகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார். அமராவதி தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிற்பகல் 12.30 மணிக்கும், சோலாப்பூரில் நடைபெறும் கூட்டத்தில் பிற்பகல் 3.30 மணிக்கும் அவர் உரையாற்ற உள்ளார்.
பதஞ்சலி விளம்பர சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ் மீண்டும் பொதுமன்னிப்பு கோரினார். இந்திய மருத்துவ கவுன்சில் தொடர்ந்த வழக்கில், விளம்பரங்கள் வெளியிடப்பட்ட அதே பக்கத்தில் அதே அளவுக்கு மன்னிப்பு பிரசுரிக்கப்பட்டதா என உச்சநீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியது. அதனைத்தொடர்ந்து பதஞ்சலி விளம்பரத்திற்கு இணையாக பத்திரிகைகளில் பெரிய அளவில் (size) விளம்பரம் கொடுத்து பொதுமன்னிப்பு கோரியுள்ளார்.
பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், எங்கள் பவுலர்களால் திட்டமிட்டபடி பந்துவீச முடியவில்லை என CSK அணியின் கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார். தோல்விக்கான காரணம் குறித்து பேசிய அவர், 13-14 ஓவர்கள் வரை போட்டி எங்கள் கையில் தான் இருந்தது. ஆனால், லக்னோ அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் எனத் தெரிவித்தார். மேலும், கடைசி ஓவர்களில் CSK அணியின் மோசமான ஃபீல்டிங்கும் முக்கிய காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அடுத்த 5 ஆண்டுகள் மலையாள சினிமாவுக்கானது என நடிகர் ஃபஹத் ஃபாசில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், மலையாள சினிமாவில் தற்போது 40-50% வரை வருவாய் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, ஆவேஷம், ஆடு ஜீவிதம், பிரம்மயுகம் போன்ற படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன. ₹100 கோடி வசூலை நோக்கி ஓடாமல், அர்த்தமுள்ள சினிமாக்களை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விவிபேட் எனப்படும் மின்னணு ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டி தொடரப்பட்ட வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நாளை மறுநாள் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால், இந்த தீர்ப்பை எதிர்பார்த்து அனைத்து அரசியல் கட்சியினரும் உள்ளனர்.
இந்தியாவில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டு, மீண்டும் ஒரு முறை பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வதாக கூறிய அவர், இந்த நாடு அம்பேத்கரின் சட்டத்தின் படி ஆளப்பட வேண்டுமே தவிர, ஷரியத் சட்டத்தின் படி அல்ல என்று தெரிவித்தார்.
பாஜகவின் தேர்தல் அறிக்கை 2 மணி நேரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போனதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டின் கிராமப்புற மக்களையும் சென்றடைந்துள்ளது. இதை பாஜகவால் ஏற்க முடியாமல் தவறான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகிறார்கள். பாஜக தலைவர்கள் முதலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் படித்துப் பார்த்துவிட்டு அதன்பிறகு குற்றச்சாட்டுகளை கூறுங்கள் என அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தேர்தலில் சரியாக வேலை செய்யவில்லை என்றால், பதவி பறிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது தேர்தலில் வேலை செய்யாதவர்களின் லிஸ்ட்டை திமுக தலைமைக் கேட்டுள்ளதாம். இதில் சிலரின் பதவி பறிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. இதனால், திமுக நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனராம்.
Sorry, no posts matched your criteria.