News April 25, 2024

‘ரெட்ட தல’ முதலில் யார் படம் தெரியுமா?

image

அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு, ‘ரெட்ட தல’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘ரெட்ட தல’ என்ற தலைப்பில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க இருந்தார். அதற்காக, சுமார் 10 ஆண்டுகளாக இந்தத் தலைப்பின் உரிமையை வைத்திருந்தார். ஆனால், அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை அமையாததால், அவரது உதவி இயக்குநரான திருகுமரனுக்கு அப்படத்தின் பெயரை கொடுத்ததாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

காங்கிரஸ் அழிவுக்கு காரணம் இதுதான்

image

காங்கிரசின் மோசமான நிர்வாகத் திறமையே அவர்களது அழிவுக்கு காரணம் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். சத்தீஸ்கரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், தீவிரவாதம் மற்றும் நக்சல்களுக்கு எதிராக பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தீவிரவாதிகள் கொல்லப்படும்போது காங்கிரசார் கண்ணீர் விடுகின்றனர் என குற்றம் சாட்டினார். இது போன்ற காங்கிரஸ் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது எனக் கூறியுள்ளார்.

News April 25, 2024

பிரதமர் மோடிக்கு எதிராகப் போட்டி என அறிவிப்பு

image

டெல்லியில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக ஏராளமான விவசாயிகளைப் போட்டியிட வைக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த முறையும் தேர்தலுக்கு முன்பு இதே போன்று அறிவித்து, பின் அமித்ஷாவை நேரில் சந்தித்து தனது முடிவை வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2024

100ஆவது போட்டியில் களமிறங்கும் ஷுப்மன் கில்

image

டெல்லி-குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. குஜராத் கேப்டன் ஷுப்மன் கில், இன்று தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் களமிறங்க உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்ற அவர், குஜராத் அணிக்கு இதுவரை 4 வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். முன்னணி கேப்டன்களுடன் போட்டி போடும் அவர், இன்று தனது அணியை வெற்றி பெறச் செய்வாரா?

News April 25, 2024

மோடிக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும்

image

அவதூறு கருத்துக்களைப் பரப்பும் மோடி தண்டிக்கப்பட வேண்டியவர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் சொல்லாததைக் கூறி, மக்களிடம் பொய்களை பரப்பி வரும் மோடியைத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து பரப்புரை செய்ய அனுமதிக்கக்கூடாது. தேச ஒற்றுமையில் எப்போதும் அக்கறையில்லாத மோடியிடம் இந்த வார்த்தைகளை தவிர வேறு எதுவும் வராது என்றும் அவர் தெரிவித்தார்.

News April 25, 2024

BREAKING: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

image

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

வடமாநிலங்களில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்

image

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், வடமாநிலங்களில் இன்னும் 6 கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வடமாநிலங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், முதல்வரின் முழு சுற்றுப்பயண விவரம் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News April 25, 2024

டெல்லியில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு

image

கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது டெல்லியில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அங்கு நடிகர்கள் சிம்பு, கமல்ஹாசன், அரவிந்த்சாமி மற்றும் த்ரிஷா பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லியைத் தொடர்ந்து, சைபீரியாவில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை படமாக்க உள்ளனர்.

News April 25, 2024

காங்., தேர்தல் அறிக்கையைக் கண்டு பிரதமருக்கு பயம்

image

ராமர் கோயில், புதிய நாடாளுமன்றம் திறப்பின்போது பட்டியலின, பழங்குடியினருக்கு அழைப்பில்லை என பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு ராகுல் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைக் கண்டு மோடி பயந்துவிட்டார். 90% இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறியதால் பிரதமர் என்னை விமர்சிக்கிறார். எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை; நியாயத்தின் மீதுதான் ஆர்வம் எனத் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு

image

ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளது. விவிபேட் கருவிகளை கட்டுப்படுத்தும் மைக்ரோ கன்ட்ரோலர்கள், இவிஎம் இயந்திரத்தில் உள்ளனவா அல்லது விவிபேட் இயந்திரத்தில் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒப்புகைச் சீட்டு தொடர்பான அனைத்து தகவல்களையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

error: Content is protected !!