India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத் தயாரிப்பாளர்கள் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். பரவா பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி, படத்தின் லாபத்தில் 40% தருவதாகக் கூறி தன்னிடம் ₹7 கோடி வாங்கி ஏமாற்றியதாக அரூரைச் சேர்ந்த சிராஜ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி, படத் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதிகபட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் இந்தியாவிலேயே 3ஆவது இடத்தை (42.3 டிகிரி செல்சியஸ்) சேலம் பிடித்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் அனந்தபூர் முதலிடமும், ஒடிசாவின் பரலாகிமுண்டி 2ஆவது இடமும் பிடித்துள்ளன. சேலத்தில் இன்றும் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்கவும். நேற்று கரூர் 3வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்களின் தாலியை காங்., பறித்ததாக பேசிய பிரதமர் மோடிக்கு காங்கிரசார் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, நாட்டிற்காக இந்திரா காந்தி தனது நகைகளைக் கொடுத்தார். வெறுப்பைக் கக்கும் பிரதமர் மோடிக்கு இது தெரிய வாய்ப்பில்லை என விமர்சித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனமான ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், சிவில், எலக்ட்ரிக்கல், ஐடி உள்ளிட்ட 490 இளநிலைப் பொறியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வம் உள்ள இளைஞர்கள், வரும் மே 1ஆம் தேதிக்குள் www.aai.aero என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ரூ.40,500 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி, இடஒதுக்கீட்டை மத அடிப்படையில் பிரித்து, அதனைப் பறிக்க காங்., திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கியபோதே, மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என அம்பேத்கர் தலைமையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், காங்., மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டுவந்து அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறது என விமர்சித்துள்ளார்.
தேர்தல் பரப்புரைகளில் ராகுலும், மோடியும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதாக மோடி குற்றம் சாட்டிய நிலையில், எந்தப் பக்கத்தில் அப்படி உள்ளது எனக் கூற முடியுமா? என ராகுல் பதில் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு விவகாரங்களிலும் ஒருவருக்கொருவர் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப் பொருட்களை விற்கக்கூடாது என்று உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. குழந்தைகளுக்கு டிரை ஐஸ் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக்கூடாது. உணவு விடுதிகளிலும் விற்பனை செய்யக் கூடாது. இதை சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம் என எச்சரித்த அதிகாரிகள், உணவாக டிரை ஐஸ் பயன்படுத்தியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
மம்தா பானர்ஜியை சிபிஐ கைது செய்து விசாரிக்க வேண்டும் என பாஜக தலைவர் அக்னிமித்ரா தெரிவித்துள்ளார். கடந்த 2016இல் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டதில் முறைகேடு நடந்ததாக கூறி, 26 ஆயிரம் ஆசிரியர் பணிநியமனங்களை மே.வங்க உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த விவகாரத்தில் மம்தாவின் உதவி இல்லாமல் எதுவும் நடந்திருக்காது, அவர் கைது செய்து விசாரிக்கப்பட வேண்டியவர் என அக்னிமித்ரா பால் குற்றம் சாட்டியுள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டுமென காங்., எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார். சஞ்சு சாம்சனை, ஐசிசி போட்டிகளில் விளையாட விடாமல் பிசிசிஐ பலமுறை புறக்கணித்துள்ளது. நான் அவருக்காக பல வருடங்களாக குரல் கொடுத்து வருகிறேன். நடப்பு ஐபிஎல் தொடரில், பேட்ஸ்மேன் + கீப்பராக சிறப்பாக செயல்பட்டு வரும் அவரை, உலகக் கோப்பையில் நிச்சயம் சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
பிரதமர் நேரத்திற்கு தகுந்தாற்போல் நிலைப்பாடுகளை மாற்றுவதாக ராகுல் விமர்சித்துள்ளார். மக்கள் அனைவரும் ஓபிசி என்று கூறிவந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய பேச்சு வந்ததும் சாதியே இல்லை என பிரதமர் மாற்றிப் பேசினார். பிறகு, ஏழை, பணக்காரன் என்ற சாதி மட்டுமே உள்ளதாக அதையும் திரித்துக் கூறினார். அரசியல் நோக்கத்திற்காக மாற்றிப் பேசி மக்களைத் தொடர்ந்து குழப்புவதாக ராகுல் குற்றம்சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.