India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுகவை வாரிசு கட்சி என அதிமுகவும், பாஜகவும் கடுமையாக விமர்சித்தன. ஆனால் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் வென்ற நிலையில், அக்கட்சிகள் தோல்வியடைந்துள்ளன. விஜயபிரபாகரனை முன்னிறுத்திய தேமுதிகவுடன் அதிமுகவும், சவுமியாவை வேட்பாளராக களமிறக்கிய பாமகவை பாஜகவும் கூட்டணி வைத்து கொண்டு, திமுகவை விமர்சனம் செய்ததை மக்கள் ஏற்காததே தோல்விக்கு காரணமெனக் கூறப்படுகிறது.
அமமுக எனும் தனிக்கட்சியை டிடிவி தினகரன் நடத்தி வந்தாலும், அதிமுக மீதான விருப்பத்தை இன்னும் கைவிடவில்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். இதை புரிந்து கொண்டதால்தான், ஜுன் 4க்கு பிறகு டிடிவி தினகரன் வசம் அதிமுக செல்லும் என அண்ணாமலை பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதை மனதில் வைத்துள்ள டிடிவி, பாஜக உதவியுடன் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியை விரைவில் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது.
நடிகர் சுரேஷ் கோபியின் வெற்றியின் மூலம், கேரளாவில் இருந்து, மக்களவை பிரதிநிதித்துவத்தை பாஜக தொடங்கியுள்ளது. திருச்சூரில் அவர் வெற்றி பெற்ற நிலையில், அம்மாநிலத்தில் அதன் வாக்கு வங்கி தற்போது 17% ஆக உள்ளது. சினிமா நட்சத்திரமான அவருக்கு, பெண் ரசிகர்கள் அதிகமுள்ளனர். தேர்தல் வெற்றியில், பெண் வாக்காளர்கள் மற்றும் சிறுபான்மையினரில் ஒரு பிரிவினருக்கு பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை (ஜூன் 8) இந்த பதவியேற்பு நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆட்சியமைக்க உரிமை கோரி இன்றே குடியரசுத் தலைவரை பாஜக அணுக இருப்பதாகவும், அவருடைய ஒப்புதல் கிடைத்தவுடன் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 4,379 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். அதேபோல், போட்டியிட்ட மேலும் 4 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியடைந்தது. பிரேமலதா தேமுதிக தலைவரான பிறகு நடந்த முதல் தேர்தலே முற்றும் கோணலாகியுள்ளது. இத்தேர்தலில் வென்று சட்டப்பேரவைத் தேர்தலில் பேரம் பேசலாம் என்ற அவரின் எதிர்பார்ப்பில் மண் விழுந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசும் நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்கள் வாக்களிப்பது மிகவும் ஆபத்தானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். நாதகவுக்கு மாநில அந்தஸ்து கிடைத்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியலில் ஏமாந்து போன விரக்தி அடைந்த இளைஞர்கள்தான் சீமானுக்கு வாக்களிக்கிறார்கள். பிரிவினைவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை எதிர்ப்போம்” என்றார்.
2019 தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி, இம்முறை 62 இடங்களில் போட்டியிட்டு, 37 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் வாக்கு வங்கியை உயர்த்திய கட்சிகளில், பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது. 33.59% வாக்குகளுடன் வாக்கு வங்கி 7 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் உ.பி.,யில் தனிப்பெரும் கட்சியாகவும், மக்களவையில் 3ஆவது பெரிய கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.
டெல்லியில், பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், நடப்பு மக்களவையை கலைப்பது என்றும், அதற்கான பரிந்துரை கடிதத்தை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதன்பின் புதிய அரசு அமையும். புதிதாக தேர்வான எம்.பிக்கள் பதவியேற்றுக் கொள்வர்.
தேர்தல் முடிவுகள் அதிமுக எதிர்பார்த்தது போல அமையவில்லை. போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது. அதேப்போல் தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றி பெறுவோம் எனக் கூறிய பாஜகவும் ஏமாற்றம் அடைந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள அதிமுக, பாஜக அலுவலகங்கள் களையிழந்து காணப்படுகின்றன. கட்சித் தொண்டர்கள் சிலரே தென்படுகின்றனர். அவர்களின் முகத்திலும் ஏமாற்றமே காணப்படுகிறது.
பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் உ.பி.,யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் INDIA கூட்டணி 43 இடங்களை கைப்பற்றியது. இங்கு பிரசாரத்தில், தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை முன்னிறுத்தி அகிலேஷ் மற்றும் ராகுல் பேசியிருந்தனர். மேலும், INDIA கூட்டணி வெற்றி பெற்றால் ராணுவத்தில் அக்னி வீரர் முறை ரத்து செய்யப்படும் என ராகுல் பேசியதும் வெற்றிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.