News June 5, 2024

மோடியின் வாக்குகள் சரிந்தது ஏன்?

image

மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி காங்., வேட்பாளர் அஜய் ராயை 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த முறை 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இந்த முறை அவரது வாக்கு வித்தியாசம் குறைந்துள்ளது. அதே சமயம் கடந்த முறையை விட இந்த முறை 60,000 வாக்குகள் குறைவாகவே பெற்றுள்ளார். வாக்குகள் சிதறாமல் காங்.,க்கு சென்றதே இதற்கு காரணமாக் கூறப்படுகிறது.

News June 5, 2024

வெற்றி பெற்ற கட்சிகளுக்கு ரஜினி வாழ்த்து

image

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அருமை நண்பர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறிய அவர், மத்தியில் 3ஆவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ள NDA கூட்டணிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஆந்திராவில் அமோக வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கும் அவர் வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

News June 5, 2024

காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயலுமா?

image

காங்கிரஸிடம் 99 தொகுதிகளே கைவசம் இருக்கும் சூழலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைப்பதும் சிரமம். நிதிஷ், சந்திரபாபு நாயுடு ஆகியோரை கூட்டணியில் சேர்த்து ஆட்சி அமைத்தாலும், அது மக்களின் முடிவுக்கு எதிரானதாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும், அரசியல் சித்து வேலையில் ஈடுபடுவது காங்கிரசுக்கு நல்லதல்ல, வலுவான எதிர்க்கட்சியாக இருப்பதே நல்லது என்றும் அறிவுறுத்துகின்றனர்.

News June 5, 2024

பாஜக ஆட்சி அமைப்பதில் சிக்கல்?

image

தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்க ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை நிதிஷ்குமாரும், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகள், போலாவரம் திட்டத்திற்கு அனுமதி மற்றும் ஆந்திர தலைநகராக அமராவதியை அறிவிக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடுவும் நிபந்தனை விதித்துள்ளனர். இந்த நிபந்தனைகளுக்கு பாஜக கட்டுப்பட்டாக வேண்டும். இல்லையென்றால், ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல் எழும் என தெரிகிறது.

News June 5, 2024

மோடியின் தேர்தல் வெற்றிக்கு சீனா வாழ்த்து

image

பாஜக தலைமையிலான NDA கூட்டணி, தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மோடிக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, இந்தியாவுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை, இரு நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டும், எதிர்காலத்தை மனதில் வைத்தும், இருநாடுகளுக்கு இடையான உறவை மேம்படுத்த விரும்புவதாக கூறியுள்ளது.

News June 5, 2024

மத்திய அமைச்சரவையில் இடம் கேட்டும் தெலுங்கு தேசம்?

image

தேர்தலில் 240 இடங்களை வென்ற பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் இடத்தில் தெலுங்கு தேசம் உள்ளது. பாஜகவுக்கு அடுத்தபடியாக 16 எம்.பிக்களை கொண்டுள்ள TDP, NDA கூட்டணிக்கு ஆதரவளிக்க பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, நிதித்துறை, வெளியுறவு, கல்வி, விவசாயம், நீர்வளம், சாலை, கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய இலாக்காக்களில் ஐந்தை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News June 5, 2024

பாஜக கூட்டணி தலைவர்களுடன் மோடி ஆலோசனை

image

NDA ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள மோடியின் இல்லத்தில் துவங்கியது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கேபினெட் அமைச்சர் பதவிகள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

News June 5, 2024

ஜூலை 21இல் முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு

image

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.dge.tn.gov.in-இல் ஜூன் 11 முதல் 26க்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையாக ஆண்டுக்கு ₹10,000 (மாதம் ₹1000 வீதம் 10 மாதங்களுக்கு) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

News June 5, 2024

தமிழ்நாடு திராவிட பூமி என்பதை உணர்த்தியிருக்கிறது

image

இந்துத்துவா சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என தேர்தல் மூலம் மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்த INDIA கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்று தமிழ்நாடு திராவிட பூமி என்பதை உணர்த்தியிருக்கிறது என்றவர், பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கான INDIA கூட்டணி தலைவர்களின் முயற்சி வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News June 5, 2024

டி20 உலகக்கோப்பையே எனது கடைசி தொடர்: டிராவிட்

image

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் தனது பணி ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார். இந்த பணி இனிதாக அமைந்ததாகவும், சிறப்பான இந்த பணியை தான் நேசித்ததாகவும் கூறியுள்ளார். பல்வேறு காரணங்களால் இந்த பதவியை தொடர முடியவில்லை என்பதால், மீண்டும் விண்ணப்பிக்கவில்லை எனவும், டி20 உலகக்கோப்பையே தனது கடைசி தொடர் என்ற காரணத்தால், தனது பணியில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!