News April 25, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: வான் சிறப்பு
▶குறள் எண்: 12
▶குறள்: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
▶பொருள்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

News April 25, 2024

அடிக்கடி கை, கால்கள் மரத்து போகிறதா ?

image

நமது உடல் உறுப்புகள் சீராக இயங்க ரத்த ஓட்டம் மிகவும் அவசியம். ரத்தம் மூலமாக தான் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எடுத்து செல்லப்படுகிறது. வைட்டமின் B12 குறைபாடு இருந்தால் கால்கள் மரத்து போவது, கை, கால்கள் குளிர்ந்து போகலாம். இதற்கு உணவில் மீன், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, முந்திரி, பாதாம், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகளவில் சேர்த்துக் கொள்வது ரத்த ஓட்டம் சீராக உதவும்.

News April 25, 2024

ஜேஇஇ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது

image

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுக்கு இருமுறை நடக்கும் இந்த தேர்வில், ஜனவரியில் 23 பேரும், ஏப்ரலில் 33 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனால், 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது.

News April 25, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஏப்ரல் 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 25, 2024

முதல்வர் பதவியை மம்தா ராஜினாமா செய்ய வேண்டும்

image

மேற்கு வங்க முதல்வர் பதவியை மம்தா ராஜினாமா செய்ய வேண்டுமென பாஜக வலியுறுத்தி உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 24,000 பேரின் பணி நியமனத்தை ஒரே உத்தரவில் அதிரடியாக ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை வரவேற்றுள்ள பாஜக, மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசின் வெட்கக்கேடான ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

News April 25, 2024

அது என் ஹோட்டல் செலவுக்குக் கூட போதாது

image

மில்லியன் டாலர்கள் தருவதாக இருந்தால் பிக்பேஷ் போன்ற வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட தான் சம்மதிப்பதாக சேவாக் கூறியுள்ளார். ஆடம் கில்கிறிஸ்டுடனான நேர்காணலில், பிக்பேஷ் தொடரில் விளையாட 100,000 டாலர்கள் தருவதாக சொன்னார்கள். அது என் சுற்றுலா பயணம் & ஹோட்டல் செலவுக்குக் கூட போதாது. நாங்கள் பணக்கார மக்கள். எனவே ஏழை நாடுகளுக்கு நாங்கள் செல்ல வேண்டியதில்லை எனக் கூறினார்.

News April 25, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*பிரதமர் மோடி தன் கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்திருப்பதாக ராகுல் குற்றச்சாட்டு *ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை *ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும்? என இளையராஜா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி *ஐபிஎல்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

News April 25, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஏப்ரல் 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 25, 2024

இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 9.67% உயர்வு

image

கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த ஏற்றுமதி 3% சரிந்த நிலையில், மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதி 9.67% அதிகரித்து 2,700 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் மருந்து ஏற்றுமதி 2,540 கோடி டாலராக இருந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அதிகப்படியான மருந்துகள் ஏற்றுமதியாகியுள்ளன.

News April 25, 2024

‘தல’அஜித்தை புகழ்ந்த துஷார் தேஷ்பாண்டே!

image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே, நடிகர் அஜித்குமாருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் அதில், ‘புத்திசாலித்தனமும், எளிமையும் நிறைந்தவர் அஜித்’ என புகழாரம் சூட்டியிருந்தார். நடிகர் அஜித் இன்று தனது 24ஆவது திருமண நாளை கொண்டாடும் வேளையில், அவருடன் துஷார் தேஷ்பாண்டே எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!