India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த மார்ச்சில் கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டு) மூலம் ₹1.64 லட்சம் கோடியை மக்கள் செலவிட்டுள்ளனர். 2023 மார்ச்சில் கடன் அட்டைகள் மூலம் மக்கள், ₹1.37 லட்சம் கோடியை செலவிட்டிருந்தனர். அதை விஞ்சும் வகையில், இந்த ஆண்டு மார்ச்சில் ₹1.64 லட்சம் கோடிக்கு செலவிட்டுள்ளனர். இதில் ஆன்லைனில் மட்டும் ₹1.04 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது 2023 மார்ச்சுடன் ஒப்பிடுகையில் 20% அதிகமாகும்.
தமிழக மின்சார வாரியத்தில் ரூ.397 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அறப்போர் இயக்கம் தனது மனுவில், 2021-23ஆம் ஆண்டுக்கு இடையில் 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,182.88 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டது. இதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுக்கு இருமுறை நடக்கும் இந்த தேர்வில், ஜனவரியில் 23 பேரும், ஏப்ரலில் 33 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனால், 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது.
ஜூன் 3இல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதே தேதியில் தான் மற்ற மாவட்டங்களில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது. அதாவது ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறந்தாலும், மறுநாளே வாக்கு எண்ணிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே பள்ளிகளை திறக்கலாம் என பெற்றோர், கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
GT-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், DC கேப்டன் ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அவர், 5 Four, 8 Six என விளாசி 88*(43) ரன்கள் குவித்து அசத்தினார். மேலும், GT வீரர்கள் ஷாருக்கான் மற்றும் திவாட்டியாவின் கேட்சுகளை பிடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். நடப்பு ஐபிஎல் தொடரில், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக வாங்கும் 2ஆவது ஆட்டநாயகன் விருது இதுவாகும்.
மணல் குவாரி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், திருச்சி, தஞ்சை, வேலூர், கரூர், அரியலூர் ஆட்சியர்களுக்கு E.D. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் 5 ஆட்சியர்களுக்கும் E.D. கடந்த நவம்பரில் சம்மன் அனுப்பியது. உச்சநீதிமன்றமும் விசாரணையில் ஆஜராக உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து E.D. மீண்டும் சம்மன் அனுப்பியது. அதையேற்று 5 பேரும் இன்று நேரில் ஆஜராவார்கள் என கூறப்படுகிறது.
நேற்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை, வெயில் போன்ற காரணங்களால் பள்ளித் திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜூன் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதே நாளில் தான் மற்ற மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் 41ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியுடன், பெங்களூரு அணி மோதுகிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவிப்பில் தொடர் சாதனை படைத்து வரும் ஹைதராபாத் அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் வலுவாக உள்ளது. ஏற்கெனவே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பெங்களூரு அணி இன்றைய போட்டியிலும் சறுக்கினால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று, சில இடங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வேலூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாகும். தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
▶ஏப்ரல் – 25 | ▶ சித்திரை – 12 ▶கிழமை: வியாழன்| ▶திதி: பிரதமை ▶நல்ல நேரம்: காலை 10:30 – 11:30 வரை ▶கெளரி நேரம்: காலை 12:30 – 01:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை ▶ராகு காலம்: 01:30 – 03:00 வரை ▶எமகண்டம்: காலை 06:30 – 07:30 வரை ▶குளிகை: காலை 09:00 – 10:30 வரை ▶சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
Sorry, no posts matched your criteria.