News April 25, 2024

படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள்

image

‘ரத்னம்’ படத்தை வெளியிட விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ளார். ரத்னம் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் படத்தை வெளியிடக் கூடாது என திரையரங்க உரிமையாளர் சங்கத்தில் அடையாளம் தெரியாத நபர் கடிதம் கொடுத்து முடக்குவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பேச மறுப்பதாக விஷால் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

image

பிரதமர் மோடி, ராகுல் ஆகியோரின் சர்ச்சை பேச்சு குறித்து 29ஆம் தேதி காலை 11 மணிக்குள் பதிலளிக்க பாஜக மற்றும் காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மோடிக்கு எதிராக காங்கிரசும், ராகுலுக்கு எதிராக பாஜகவும் புகார் அளித்தன. இதை பதிவு செய்து கொண்ட தேர்தல் ஆணையம், 2 கட்சிகளின் தலைவர்களும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

News April 25, 2024

ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்பு

image

உ.பி.யின் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 1952 முதல் காங்கிரஸ் கோட்டையாக திகழும் ரேபரேலி தொகுதி எம்பியாக இருந்த சோனியா காந்தி, மாநிலங்களவை எம்பியாக தேர்வானார். இதனால் ரேபரேலியில் பிரியங்கா போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு பின், இது குறித்தான அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

News April 25, 2024

BREAKING: தமிழக காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்

image

காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி “இந்திய ஜனநாயக புலிகள்” என்ற புதிய கட்சியை தொடங்கி, மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணையவுள்ளார்.

News April 25, 2024

104 நம்பிக்கை மையங்களை மூட திட்டம்

image

தமிழகத்தில் எச்.ஐ.வி தொற்று பாதிப்பு குறைந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் 104 நம்பிக்கை மையங்களை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த இடங்களில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் எச்.ஐ.வி & பால்வினை நோய் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 2,163 நம்பிக்கை மையங்கள், 64 சிகிச்சை மையங்கள், 34 ஆற்றுப்படுத்துதல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

News April 25, 2024

பட்டினியால் தவித்த 28.20 கோடி மக்கள்

image

2023 ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு நகரங்களில் 28.20 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்பட்டதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், போர், காலநிலை & பொருளியல் நெருக்கடி ஆகிய காரணங்களால் பட்டினியால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து 5ஆவது ஆண்டாக அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023இல் 2.40 கோடியாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 25, 2024

IPL: இன்று 300 ரன்கள் குவிக்குமா ஹைதராபாத்?

image

பெங்களூருவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் அணி 300 ரன்கள் குவிக்குமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் 4 முறை 200+ ரன்களுக்கு மேல் குவித்துள்ள ஹைதராபாத் அணி, 10 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பெங்களூருவுக்கு எதிராக நடந்த போட்டியில், 287/3 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது. இன்றைய போட்டியில் 300-ஐ கடக்குமா?

News April 25, 2024

வயநாட்டைத் தொடர்ந்து அமேதியிலும் ராகுல் போட்டி?

image

உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் ராகுல் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 தேர்தலில் அமேதி, வயநாட்டில் போட்டியிட்ட ராகுல், அமேதியில் தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலில் வயநாட்டில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள அவர், அமேதியிலும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும், 26ஆம் தேதிக்கு பிறகு இதுகுறித்து அறிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

News April 25, 2024

தகுதி நீக்கம் குறித்து ஒரு வாரத்தில் முடிவு

image

விருதுநகர் தொகுதி காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. மாணிக்கம் தாகூர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகக் கூறி மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் ஒருவாரத்தில் முக்கிய முடிவெடுப்பதாகக் கூறியுள்ளது.

News April 25, 2024

வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 8.8% வீழ்ச்சி

image

2023 ஏப்ரல் – 2024 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் வேளாண் பொருள்களின் ஏற்றுமதி 8.8% சரிந்துள்ளது. வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மதிப்பீட்டு காலகட்டத்தில் இந்திய வேளாண் பொருள்களின் GDP மந்தநிலையைக் கண்டது. முந்தைய ஆண்டில் 4,790 கோடி டாலராக இருந்த வேளாண் பொருள்களின் ஏற்றுமதி தடை உள்ளிட்ட காரணங்களால் கடந்த நிதியாண்டில் 4,370 கோடி டாலராக சரிந்தது.

error: Content is protected !!