News April 25, 2024

பதவி பறிபோகும் பதற்றத்தில் அதிமுக நிர்வாகிகள்

image

தேர்தல் முடிந்து 6 நாள்கள் கடந்த நிலையில், அடுத்து என்னாகும்? என்கிற பதற்றம் அதிமுக நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணிக் கட்சிகளிடமிருந்து வந்த புகார்களைக் கேட்ட இபிஎஸ் அது குறித்து உண்மையை அறிய முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் மூலமாக ரிப்போர்ட் பெற்றாராம். தேர்தல் முடிவு வெளியான பிறகு அக்கட்சியில் சிலரது பதவிகள் பறிபோகும் எனக் கூறப்படுகிறது.

News April 25, 2024

₹20 கோடியை கடந்தது ‘கில்லி’

image

விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் ரீ ரிலீசாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 5 நாள்கள் முடிவில், உலகம் முழுவதும் ₹20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரீ ரிலீசாகி ₹20 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பை பார்க்கும் போது, இன்னும் ஒரு வாரத்திற்கு படம் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

News April 25, 2024

மண்ணெண்ணெய் தருவதை மத்திய அரசு குறைத்துவிட்டது

image

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடியாத்தம் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு என செய்து வெளியானது. இதற்கு விளக்கமளித்த அவர், 2021இல் 8500 கிலோ லிட்டர், 2022இல் 4500 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கிய மத்திய அரசு, தற்போது 2300 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்குவதாக குற்றம்சாட்டினார்.

News April 25, 2024

இப்போது செய்து என்ன பயன்?

image

தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை சசிகலா ஆதரவாளர்கள் வழங்கி வருகின்றனர். அமைப்பின் பெயர், முகவரி ஏதுமில்லாத அந்தப் படிவத்தில் ‘2017இல் என்ன பொறுப்பில் இருந்தீர்கள்?’ போன்ற கேள்விகள் இடம்பெற்றுள்ளன. கட்சி, சின்னம் என எல்லாம் கைமீறிப் போன பிறகு, சிறையில் இருந்து வந்தபோது செய்திருக்க வேண்டிய வேலைகளை இப்போது செய்து என்ன பயன் என அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்துள்ளனர்.

News April 25, 2024

சொந்த மண்ணில் வீழுமா ஹைதராபாத்?

image

RCB-SRH அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 40 போட்டிகளில், ஹைதராபாத் அணியைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் தங்களது சொந்த மண்ணில் வீழ்ந்துள்ளன. ஏப். 5ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த CSK-க்கு எதிரான போட்டியில், SRH அணி வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல் தொடரில் சொந்த மண்ணில் தோற்காத ஒரே அணி என்ற பெருமையைக் கொண்டுள்ளது. RCB பதிலடி கொடுக்குமா?

News April 25, 2024

இந்திரா சொத்துக்காக வரியை ரத்து செய்தார் ராஜீவ் காந்தி

image

இந்திராவின் சொத்து அரசுக்கு செல்வதை தடுக்கவே பரம்பரை வரியை ராஜீவ் காந்தி ரத்து செய்ததாக மோடி சாடியுள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் முன்பு அமலில் இருந்த பரம்பரை வரியின்படி, யாரேனும் உயிரிழந்தால் அவர் சொத்தின் ஒரு பகுதியை அரசு எடுத்து கொள்ளும் என்று தெரிவித்தார். இந்திரா மறைவுக்குப் பிறகு அவர் சொத்து அரசிடம் செல்வதைத் தடுக்கவே, அந்த வரியை ராஜீவ் ரத்து செய்தார் என்று அவர் கூறினார்.

News April 25, 2024

தமிழ்நாட்டின் ‘வெப்ப அலை’க்கு புதிய பெயர்

image

தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிர வெப்ப அலை வீசுவதாக இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தற்போதைய நிலைக்கு “Hot and humidity weather” என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகிறது. தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வெப்பநிலை உணரப்பட காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதே காரணம் எனத் தெரிவித்தார்.

News April 25, 2024

மோடி ஆட்சியில் இருக்க மாட்டார்

image

மக்களவைத் தேர்தலில் மோடி தோல்வியடையப் போவதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, பிரதமர்களாக நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி, மன்மோகன்சிங் சிறப்பாக செயல்பட்டதாகவும், அவர்கள் காலத்தில் கட்டமைத்த அரசு நிறுவனங்களை மோடி ஏலத்தில் விற்று வருவதாகவும் சாடினார். ஜூன் 4 தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜகவும், மோடியும் ஆட்சி அதிகாரத்தில் இருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

News April 25, 2024

6ஆவது இடத்தைப் பிடித்த சென்னை

image

இந்திய அளவில் அதிகமான உள்நாட்டுப் பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. AAI ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023இல் அதிக பயணிகளைக் கையாண்டதில் பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய இரு விமானங்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. 2022இல் 1.37 கோடியாக இருந்த சென்னை விமான நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கை 2023இல் 1.53 கோடியாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 25, 2024

தேர்வாணையத்தை காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும்

image

டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். யு.பி.எஸ்.சியை பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சியும் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!