India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் ராஜஸ்தான் அருகே விழுந்து நொறுங்கியது. ஆளில்லா விமானங்கள் மூலம் எல்லைப் பாதுகாப்பு, கண்காணிப்புகளை விமானப் படை மேற்கொள்கிறது. அந்த வகையில் ஜெய்சால்மர் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஆளில்லா விமானத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறால் விழுந்து நொறுங்கியது. சம்பவ இடத்திற்கு சென்ற விமானப் படை அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஓவைசியின் வகுப்புவாத அரசியலை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் மூலமாகப் பரப்புரை செய்யும் வேலையை ராகுல் செய்கிறார் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார். ஹைதராபாத்தில் பேசிய அவர், ராகுல் காந்தி ஓவைசியின் B அணியா அல்லது ஓவைசி ராகுலின் B அணியா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. மாட்டிறைச்சி தின்போருக்கு இவிஎம்மின் ‘பீப்’ ஒலி பதிலளிக்கும் எனத் தெரிவித்தார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திருப்பதி, தாய்லாந்து ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் எனத் தெரிகிறது. இப்படத்திற்குப் பிறகு, இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது. இருப்பினும் பிற மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும் எனத் தெரிவித்துள்ளது. இதன்படி பிஹார், கர்நாடகா, ஒடிசா மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மேற்கு வங்கம், சிக்கிம் மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் தொடரும் என குறிப்பிட்டுள்ளது.
நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான செரிலாக்கில் அதிகச் சர்க்கரை சேர்க்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, புகார் தொடர்பாக விசாரிக்க FSSAI-க்குக் குழந்தைகள் உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் செரிலாக் மாதிரிகளை FSSAI சோதிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் 15 – 20 நாள்களில் ஆய்வுகள் முடிந்து அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தானம் ₹3.20 கோடி மதிப்புடைய பழைய ₹2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றியுள்ளது. கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் ₹3.20 கோடி அளவிற்கு பழைய ₹2000 நோட்டுகள் இருந்துள்ளது. ஆறு தவணையாக இதை வங்கியில் கொடுத்து மாற்றியுள்ள தேவஸ்தானம், தேவஸ்தான லாக்கரில் ₹49.70 கோடி அளவிற்கு பழைய ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
*நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
*குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம்.
*வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும்.
*லேசான, வெளிர் நிறம் மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம்.
*தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
*வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இரவில் ஜன்னல்களைத் திறந்து வைக்கலாம்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் காஞ்சி பட்டு சேலைகளின் விலை 30% வரை உயர்ந்துள்ளது. மத்திய அரசின் புவிசார் குறியீட்டை பெற்ற காஞ்சி பட்டு சேலைகள், ஆண்டுதோறும் ₹300 கோடி அளவுக்கு விற்பனையாகிறது. இந்நிலையில் தங்கம், வெள்ளி விலை உயர்வால், ஒரே ரகத்தில் நெய்யப்பட்ட பட்டு சேலைகளின் விலை ₹10,000லிருந்து ₹15,000ஆக உயர்ந்துள்ளது. மேலும், அனைத்து ரக பட்டு சேலைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
விஜய்யின் கடைசிப் படமான ‘தளபதி 69’ படத்தைக் கைப்பற்றப் பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாகத் திரை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. முதலில் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியானாலும் உறுதியாகவில்லை. இந்நிலையில், செவன் ஸ்க்ரீன், பேஷன் ஸ்டுடியோஸ், ஏஜிஎஸ் ஆகிய நிறுவனங்களும் இப்படத்தைக் கைப்பற்ற ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள வயநாடு தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. 2019ஆம் ஆண்டுத் தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிட்டு ராகுல் எம்பியானார். அதேபோல் இந்த முறையும் அங்கு அவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கூட்டணி சார்பில் அன்னி ராஜாவும், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர். இதனால் அங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.