India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சண்டிகர் விமான நிலையத்தில் பெண் CISF வீரர் நடிகை கங்கனாவை கன்னத்தில் அறைந்த நிலையில், தான் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறி கங்கனா வீடியோ வெளியிட்டுள்ளார். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி அவர் தன்னை அறைந்ததாகக் கூறிய கங்கனா, பஞ்சாப்பில் தீவிரவாதம் வளர்ந்து வருவது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக, பஞ்சாப்பில் போராடிய விவசாயிகளை தீவிரவாதிகள் என கங்கனா குறிப்பிட்டிருந்தார்.
வீட்டில் இருக்கும் மின் சாதனங்களை பாதுகாக்க MCB பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலான வீடுகளில் தற்போது பொருத்தப்படுகிறது. அதுபோல, Current ஷாக் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் சாதனம்தான் RCD. இதை வீடுகளில் கட்டாயம் பொருத்த வேண்டும் என அரசு பரிந்துரைக்கிறது. வயர்களில் சேதம் ஏற்படும் போது, அதை நாம் தெரியாமல் தொட்டால், RCD ட்ரிப்பாகி Current ஷாக்கில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
கனிமொழி பாஜகவிற்கு வர தயார் என்றால் தான் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிப்பதாக சமீபத்தில் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கனிமொழி, பாஜகவை வளர்ப்பது எனது வேலை இல்லை என்றும், நான் பாஜகவுக்கு வரவேண்டும் என்றால் பெரியார் வாழ்க என அண்ணாமலை கூற வேண்டும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, அண்ணாமலை பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியிருந்தார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் என பலர் விண்ணப்பிக்க தயாராக உள்ளனர். அதேபோல், புதிய ரேஷன் கார்டு அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளதால், அவர்களும் விண்ணப்பிக்கலாம். தற்போது தேர்தல் நடத்தை விதி வாபஸ் பெறப்பட்டதால், ஒருசில நாள்களில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகுதியான நபர்களுக்கு ஜூலை முதல் ₹1000 வழங்கப்படும் என தெரிகிறது.
பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்கள், கடன் பத்திரங்களில் சாதாரண குடிமகனை போல அரசு ஊழியர்கள் முதலீடு செய்வதில் எந்த தடையும் இல்லை. ஆனால், குறுகிய காலத்தில் பங்குகளை வாங்கி, விற்று வர்த்தகம் செய்ய முடியாது. இதற்கு முக்கிய காரணம், வேலை நேரத்தில் ஊழியர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டால், வேலையின் மீதான கவனம் குறையும் என அரசு நினைக்கிறது. அதே போல, அரசு ஊழியர்களின் அசையும் சொத்துக்களை கண்காணிப்பதும் சிரமம்.
தேர்தலில் வென்ற 543 வேட்பாளர்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள் (93%) என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தம் 475 எம்.பி-க்கள் (88%) கோடீஸ்வரர்களாக இருந்தனர். 2014 தேர்தலில் வெற்றி பெற்ற கோடீஸ்வர எம்.பி-க்களின் எண்ணிக்கை 443 (82%). 2024 தேர்தலில் ஆந்திராவின் குண்டூர் தொகுதியில் வென்ற தெலுங்கு தேசம் கட்சியின் சந்திர சேகர் (5,705 கோடி), நாட்டின் பெரும் பணக்கார எம்பியாக உள்ளார்.
கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 79 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும், சில சுயேட்சை வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது. 13 சுயேச்சைகளும், 5 இடங்களில் பாமஐ கட்சியும் போட்டியிட்டது. கரும்பு விவசாயி சின்னத்துக்கு மட்டும் 79,203 வாக்குகள் கிடைத்தது. கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்ட நாதக 8.13% வாக்குகளை பெற்றுள்ளது.
தருமபுரியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சவுமியாவை, திமுக வேட்பாளர் மணி 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை தொகுதிகளில் பாமகவும், அதை போல மேட்டூர், பாலக்கோடு தொகுதிகளில் திமுகவும் முன்னிலை பெற்றன. ஆரூர் தனி தொகுதியில் மட்டும் திமுக வேட்பாளருக்கு 40 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக கிடைத்ததே சவுமியா தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் விலக்கிக் கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், கடந்த இரண்டரை மாதமாக அமலில் இருந்த விதிமுறைகள் இன்று இரவுடன் விலக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சிலமணி நேரம் முன்கூட்டியே தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் வென்ற திமுக எம்பிக்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். இதற்காக அண்ணா அறிவாலயத்திற்கு வந்த முதல்வருக்கு, திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 22 வேட்பாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து கூட்டணி கட்சி எம்பிக்கள் அவரை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.