India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபேஸ்புக்கில் விளம்பரப்படுத்தப்பட்ட ஆன்லைன் முதலீடு மோசடியால் பணத்தை இழந்த 4 ஜப்பானியர்கள் 1,48,000 டாலர் நஷ்டஈடு கோரி வழக்கு தொடுத்துள்ளனர். பிரபலங்களின் படங்களைப் பயன்படுத்தி மோசடியான விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் பிரபலங்களின் புகைப்படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், மற்ற நாடுகளில் அவர்கள் பேசுவது போன்ற டீப்ஃபேக் வீடியோவை உருவாக்கி மோசடிக்குப் பயன்படுத்தியுள்ளனர்.
உ.பி. பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத் தேர்வுகளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாணவர் ஒருவர் RTI மூலம் பெற்ற தகவலில் இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது. இன்னும் பல மாணவர்கள் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை விடைத்தாளில் எழுதி மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். இது தொடர்பாக பேராசிரியர்கள் இருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சுபமுகூர்த்த தினத்தையொட்டி (ஏப்ரல் 26) தோவாளை சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகள், குமரி மாவட்டம் தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களை கொள்முதல் செய்வார்கள். இந்நிலையில், மல்லிகை நேற்று கிலோ ₹300க்கு விற்பனையான நிலையில், இன்று ₹600ஆக உயர்துள்ளது. இதேபோல, பிச்சிப்பூ ₹1500, முல்லை ₹1400, அரளி ₹400, சம்பங்கி ₹300, ரோஸ் ₹200க்கு விற்பனையாகிறது.
பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் நினைவு நாளையொட்டி, அவரது மகனும் நடிகருமான பாபில் கான் உருக்கமாக பதிவிட்டுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக 2020ஆம் ஆண்டு இர்ஃபான் கான் உயிரிழந்தார். இந்த நிலையில், “சில சமயங்களில் தந்தையிடம் செல்ல வேண்டும் எனத் தோன்றுவதாக” அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு, பின்னர் உடனடியாக அதனை நீக்கிவிட்டார். இதைப் பார்த்து அதிர்ந்த ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனம் வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் கார்கள் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கார்கள் விலையை 2% உயர்த்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவினம் அதிகரிப்பு காரணமாக கார்கள் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டு இருப்பதாகவும் ஆடி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் SRH, RCB அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள RCB கேப்டன் டு ப்ளஸி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து SRH இன்னும் சற்று நேரத்தில் பவுலிங் செய்ய உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிபெற்றுள்ள SRH புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ள RCB கடைசி இடத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
பிரதம மந்திரியின் இலவச லேப்டாப் திட்டம் என வாட்ஸ்அப்பில் பரவும் தகவல் போலியானது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) விளக்கமளித்துள்ளது. PMYP திட்டத்தில் இலவச லேப்டாப் பெற, https://laptop.2eqqg.site/?free=39 இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்ற தகவல் வேகமாக பரவியது. இது குறித்து விளக்கமளித்துள்ள AICTE, இதுபோன்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையில் செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ED வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில், அவர், ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறிய ED, செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணையை ஜூன் 21க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.
பாகிஸ்தானின் கராச்சியில் காவலரின் மகனான டேனியல் என்பவர் தனது காதலி, அவரது நண்பரும் நீதிபதியின் மகனுமான அலி கீரியோ மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது, டேனியல் தனக்கும், காதலிக்கும் சேர்த்து 2 பர்கரை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அலி கீரியோ அதை எடுத்துச் சாப்பிட்டதால் தகராறு ஏற்பட்டது. இதில், டேனியல் துப்பாக்கியால் சுட்டதில் அலி கீரியோ படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு 890 சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தென் தமிழகத்திற்கு நாளை 280 பேருந்துகளும், நாளை மறுநாள் 355 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து ஏப்.26, 27இல் நாகை, வேளாங்கண்ணி, ஓசூருக்கு 55 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோட்டுக்கு 200 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.