India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
SRH அணிக்கு எதிரான போட்டியில் RCB அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய கோலி 51, பட்டிதார் 50 ரன்கள் அடித்தனர். கடைசியில் சிறப்பாக ஆடிய க்ரீன் 37 ரன்கள் விளாசினார். SRH தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டும், நடராஜன் 2 விக்கெட்டும், கம்மின்ஸ், மார்க்கண்டேய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து SRH அணிக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெப்பம் சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்தத் தேவையான மருந்துகள் மற்றும் சிகிச்சை வழங்குவதற்காக மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கோடை வெயிலிலிருந்து மக்கள், வனவிலங்குகளை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள அவர், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர்ப் பந்தல்களை அமைக்க உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் வலியுறுத்தியுள்ளார்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 827 பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் (CMS) தேர்வுக்கு, விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள், <
கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாா். அடிக்கடி தண்ணீர் குடிப்பதுடன் நீர்ச்சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிட அறிவுறுத்திய அவர், குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்களை வெப்பத்திலிருந்து காக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனக் கூறிய அவர், அரசு நிர்வாகம் கவனத்துடன் செயல்பட ஆணையிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
SRH அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி அரை சதம் கடந்துள்ளார். தொடக்கத்தில் அதிரடியாக ஆடிவந்த அவர், பின் விக்கெட்டுகள் சரிந்ததால் சற்றுப் பொறுமையாக ஆடிவருகிறார். தற்போது கோலி 50*, கிரீன் 1* ரன்களுடன் களத்தில் உள்ளனர். SRH தரப்பில் நடராஜன், உனத்கட், மார்க்கண்டேய தலா 1 விக்கெட் வீழ்த்தினர். RCB இதே வேகத்தில் ஆடினால் இன்று 250 ரன்களை நெருங்க வாய்ப்புள்ளது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான IPL போட்டியில் அதிரடியாக ஆடிவரும் RCB வீரர் ரஜத் படிதார் அரை சதம் கடந்துள்ளார். 19 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசி வாணவேடிக்கை காட்டினார். இவரது அதிரடியால் RCB அணி 12 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. டு ப்ளஸி 25, ஜாக்ஸ் 6 ரன்னில் ஆட்டமிழந்தனர். கோலி 45* ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்று RCB எவ்வளவு ரன்கள் எடுக்கும்?
இந்தியாவில் ட்விட்டருக்குப் போட்டியாக 2019ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட ‘Koo’ செயலி, தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டில் இருந்து மொத்த பணியாளர்களில் 80% பேரை நீக்கம் செய்த நிலையில், தற்போது சுமார் 50 பேர் மட்டுமே பணியில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கும் 40% சம்பளமே வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தற்போது அதையும் நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி, கடவுள்களின் பெயர்களை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. அதன் மீதான விசாரணை நாளை தொடங்கவுள்ளது. இந்த மனுவில், பிரதமர் மோடி அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு நாட்டின் அரசியல் நகர்வையே மாற்றும் என்பதால் பலரும் இதனை உற்று நோக்கி வருகின்றனர்.
காதலன் சாந்தனுவை நடிகை ஸ்ருதி ஹாசன் பிரேக்அப் செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டாட்டூ கலைஞர் சாந்தனுவைக் காதலித்த ஸ்ருதி, மும்பையில் அவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இன்ஸ்டாவில் அவரை Unfollow செய்த ஸ்ருதி, அவருடன் எடுத்த போட்டோஸை நீக்கிவிட்டு, “சிலரது உண்மை முகம் இப்போது தெரிகிறது” எனப் பதிவிட்டுள்ளார். இதனால் பிரேக்அப் ஆகிவிட்டதா என ஸ்ருதியிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவு டெலிவரி செய்யும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்வதற்கான சோதனையில் சொமட்டோடோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தச் சேவை தற்போது பெங்களூரு மற்றும் மும்பையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 16 முதல் 21 நிமிடத்திற்குள் உங்களின் ஆர்டர் கைக்கு வர ரூ.29 கூடுதலாகச் செலுத்த வேண்டும். இந்தக் கூடுதல் கட்டணம் ‘சொமட்டோ கோல்ட்’ சப்ஸ்கிரைபருக்கும் பொருந்தும்.
Sorry, no posts matched your criteria.