India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும் எனப் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதனால், எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாத சூழல் பாஜகவுக்கு உருவாகியுள்ளதால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை சாத்தியமாகுமா என்பது இனிமேல் தான் தெரியவரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருந்தால், தமிழகத்தில் வென்றிருக்கலாம் என்ற கருத்து இரு கட்சியினரிடமும் எழுந்துள்ளது. இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறி வருகிறார். இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள பாஜக நிர்வாகிகள், மோடி, அமித்ஷா போன்ற மேல்மட்டத் தலைவர்களே அதிமுக கூட்டணியை விரும்பும்போது, அண்ணாமலை மட்டும் முரண்டு பிடிப்பது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஜூன் கடைசி அல்லது, ஜூலை முதல் வாரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளது. திமுக MLA புகழேந்தி ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தலுக்கும் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தேர்தல் ஆணையம் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரனின் அருளை ஒருங்கே பெறலாம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரதம் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இதனால், நாள்பட்ட துன்பங்கள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என நம்பப்படுகிறது.
*தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின்சாரக் கட்டணம் உயர உள்ளதாக தகவல்
*டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என ஆம் ஆத்மி அறிவிப்பு
*சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தை தாக்கிய பெண் காவலர் சஸ்பெண்ட்
*T20 WC: பாகிஸ்தானை வீழ்த்தியது அமெரிக்க அணி; மற்றொரு போட்டியில் நமீபியாவை வீழ்த்தியது ஸ்காட்லாந்து.
*அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு ஜூன் 20இல் தொடங்க உள்ளதாக தகவல்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, திருச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே நடக்கும் வார்த்தைப் போர் ஒரு நாடகம் என ஜோதிமணி விமர்சித்துள்ளார். அதிமுக-பாஜக இடையிலான மறைமுகக் கூட்டணியை மறைக்கவும், அப்பாவி அதிமுக தொண்டர்களை ஏமாற்றவுமே இதுபோன்ற நாடகம் அரங்கேற்றப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்கு பயந்து, அதிமுக தனது களத்தை விட்டுக்கொடுத்தது என்பதே உண்மை எனத் தெரிவித்தார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு, ஜூன் 20இல் மீண்டும் தொடங்க உள்ளது. அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், சில மாதங்களாக சூட்டிங் நிறுத்தப்பட்டது. இதனால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் இன்று முடியும் நிலையில், மீண்டும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் போபண்ணா ஜோடி தோல்வியை தழுவியது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், இத்தாலியின் சிமோன் ஜோடியை போபண்ணா ஜோடி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 5-7, 6-2, 2-6 என்ற செட் கணக்கில் சிமோன் போலெலி ஜோடி போபண்ணா ஜோடியை வீழ்த்தியது.
காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் இன்று டெல்லி செல்கின்றனர். மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட்ட 10 இடங்களிலும் காங்., வேட்பாளர்கள் வென்றனர். இந்த நிலையில், நாளை காலை 11 மணிக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்ள மற்றும் சோனியா, ராகுலை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக புதிய MP-க்கள் டெல்லிக்குச் செல்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.