News June 7, 2024

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் சஞ்சய் தத்

image

லியோ திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இந்தநிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 23வது படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்து வருகிறார். இருவருக்கும் இடையிலான சண்டை காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். செப்டம்பர் மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

News June 7, 2024

இந்தியாவுக்கான தூதரை திரும்ப பெற்றது நேபாளம்

image

இந்தியாவுக்கான தூதரை நேபாள அரசு திரும்ப பெற்றுள்ளது. நேபாள காங்கிரஸ், ஜனதா சமாஜ்பாடி கட்சி ஆட்சியில் நியமிக்கப்பட்ட தூதர்களை புதிய பிரதமர் பிரசண்டா தலைமையிலான அரசு திரும்ப பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட 11 நாடுகளில் பணியாற்றிய தூதர்களை அந்நாட்டு அரசு திரும்ப அழைத்துள்ளது. விரைவில் புதிய தூதர்களை நேபாள அரசு நியமிக்க உள்ளது.

News June 7, 2024

நடிகர் தனுஷ் பெண்ணாக இருந்திருந்தால்…

image

நடிகர் தனுஷ் பெண்ணாக இருந்திருந்தால், தான் அவரை காதலித்து திருமணம் செய்திருப்பேன் என்று நடிகர் ஸ்ரீகாந்த் நகைச்சுவையாக கூறியுள்ளார். தனியார் எஃப்.எம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “நல்ல கதையை தேர்ந்தெடுப்பதில் நடிகர் தனுஷை யாராலும் விஞ்ச முடியாது. அவரது நடிப்பைப் பார்த்து நான் பொறாமைப்பட்டிருக்கிறேன். திறமைதான் அவரை பாலிவுட், ஹாலிவுட் வரை கொண்டு சேர்த்தது” எனத் தெரிவித்தார்.

News June 7, 2024

ஒரு வாரத்தில் மீண்டும் 3 நாள்கள் விடுமுறை

image

கோடை விடுமுறை முடித்து பள்ளிகள் 10ஆம் தேதி திறக்கப்படவுள்ளன. தொடர்ந்து, ஒரே வாரத்தில் மீண்டும் அரசு விடுமுறை வருகிறது. ஜூன் 17ஆம் தேதி பக்ரித் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் அன்றைய தினம் பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதனால், சனி, ஞாயிறு விடுமுறை இருப்பவர்களுக்கு அடுத்த வாரம் மீண்டும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது.

News June 7, 2024

சுதந்திர போராட்டத்தில் காந்தி ஈடுபட காரணமான ஜுன் 7

image

தென்னாப்பிரிக்காவில் 1893இல் சட்டப்படிப்பு படித்த காந்தி, ஜுன் 7இல் டர்பனில் இருந்து பிரிடோரியாவுக்கு ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணித்தார். அதில் இருந்த ஐரோப்பியர், காந்தியை கருப்பர் இனத்தவர் எனக்கூறி வேறு பெட்டிக்கு செல்லும்படி கூறினார். காந்தி மறுக்கவே, பெட்டி படுக்கையுடன் வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவமே பின்னாளில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தி ஈடுபட வழிவகுத்தது.

News June 7, 2024

இடி, மின்னலுடன் மழை பெய்யும்

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 7, 2024

சல்மான் கான் படத்தில் ரஷ்மிகா, கரீனா

image

தற்போது சிவகார்த்திகேயன் படத்தை இயக்கிவரும் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஏற்கெனவே ரஷ்மிகா மந்தனா நடிப்பது உறுதியாகியிருக்கும் நிலையில் தற்போது கரீனா கபூரும் இணைந்துள்ளார். இதனால், படத்தின் நாயகி யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

News June 7, 2024

எப்போது பதவியேற்கிறார் மோடி?

image

இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் மோடி பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவிப் பிரமாணம் நடைபெறவுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

News June 7, 2024

சட்டசபையுடன் சேர்த்து உள்ளாட்சி தேர்தல்?

image

நீதிமன்ற உத்தரவு வந்தால் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுடன், உள்ளாட்சி தேர்தலும் ஒன்றாக நடக்கக்கூடும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். ஆம்பூரில் பேசிய அவர், “வேலூர் மக்களவைத் தொகுதியில் டி.எம்.கதிர் வென்றதை திமுக அரசின் மக்கள் நலப் பணிகளுக்காக கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். இந்த வெற்றி இன்னும் 2 ஆண்டுகால அவகாசத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை & உள்ளாட்சி தேர்தலிலும் தொடர வேண்டும்” என்றார்.

News June 7, 2024

இன்று பிரதமர் ஆகிறார் மோடி

image

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில், மோடி மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்படவுள்ளார். அதனைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களுடன் இணைந்து அவர் குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளார். தன்னை ஆதரிக்கும் எம்பிக்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மோடி.

error: Content is protected !!