News June 7, 2024

சாத்தானை விரட்ட பாலியல் உறவு: மதகுரு கைது

image

கர்நாடகாவில் சகோதரனையே தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து, அதை வீடியோ எடுத்த மதகுருவை போலீசார் கைது செய்துள்ளனர். சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள மசூதியில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மதகுரு ஒருவர், குரான் படிக்க வந்த சிறுமிக்கு பேய் பிடித்ததாகக் கூறி இக்கொடிய செயலை செய்துள்ளார். பாலியல் உறவால் தான் சாத்தானை விரட்ட முடியும் என அவரும் வன்கொடுமை செய்ததால் இருவர் மீதும் போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.

News June 7, 2024

வெள்ளத்துரை விவகாரத்தில் தேவையில்லாத சலசலப்பு

image

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை ஓய்வுக்கு ஒருநாள் முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 2013 கொக்கி குமார் என்கவுண்டர் வழக்கில் விசாரணை நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, அவரை உள்துறை செயலாளர் அமுதா சஸ்பெண்ட் செய்தார். இது சர்ச்சையாகவே சஸ்பெண்டை ரத்து செய்தார். இந்த முடிவை அமுதா தன்னிச்சையாக எடுத்ததால், உள்துறையில் தேவையில்லாத சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

News June 7, 2024

Bad Touch குறித்து சிபிஎஸ்இ பள்ளிகள் விழிப்புணர்வு

image

சிபிஎஸ்இ கூட்டமைப்பு சாா்பில் 340 பள்ளிகளில் பயிலும் சுமார் 24,000 மாணவ – மாணவியருக்கு Bad Touch குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் அடங்கிய பென்சில் பாக்ஸ் அளிக்கப்பட்டுள்ளன. அந்த பாக்ஸ்களின் உள்பக்கம் ஸ்டிக்கர்கள் உள்ளன. அதில் Bad Touch நேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. மேலும் அத்தகைய நேரத்தில் அழைக்க வேண்டிய உதவி எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News June 7, 2024

கூட்டணி ஆட்சியை நடத்திக் காட்டுகிறேன்: மோடி

image

பிரதமர் மோடி ஆட்சியமைத்த இரு தேர்தல்களிலுமே பாஜக மெஜாரிட்டி எம்பிக்களை பெற்றிருந்தது. ஆனால், இந்தமுறை போதிய எம்பிக்கள் பலம் இல்லாததால் கூட்டணியாட்சியை அமைக்கவிருக்கிறார் மோடி. இதுகுறித்து நேற்று அமைச்சரவையில் பேசிய அவர், “எனக்கு கூட்டணியாட்சியை வழிநடத்த தெரியாது என்று விமர்சிக்கின்றனர். 5 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்திக் காட்டுகிறேன்” என்று சூளுரைத்ததாக தெரிய வந்துள்ளது.

News June 7, 2024

அதிமுகவின் கோட்டை கை நழுவி செல்கிறதா?

image

சென்னை எப்படி திமுகவுக்கு கோட்டையாக திகழ்கிறதோ, அதுபோல அதிமுகவின் கோட்டையாக தென்மாவட்டங்கள் இருந்தது. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் என அடுத்தடுத்து அங்கு அதிமுக தோல்வியடைந்துள்ளது. அதற்கு அப்பகுதி அதிமுக சீனியர் தலைவர்கள், இபிஎஸ்-சை தங்கள் தலைவராக இன்னும் ஏற்கவில்லை, இதனால் அவர்கள் உள்ளடி வேலை பார்த்ததே தோல்விக்கு காரணமெனத் தகவல் வெளியாகியுள்ளது.

News June 7, 2024

ஒய்யாரமாக விரிந்து கிடக்கின்ற குக் தீவுகள்

image

தென் பசிபிக் பெருங்கடலில் பச்சைப் பசேல் என்று ஒய்யாரமாக விரிந்து கிடக்கின்றன குக் தீவுகள். 240 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கும் 15 தீவுகளை உள்ளடக்கிய இங்கு சுமார் 18 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். ஆனால், வருடந்தோறும் 2-3 லட்சம் மக்கள் சுற்றுலாப் பயணிகளாக இங்கு வருகை தருகிறார்கள். இதன் பாதுகாப்பு, வெளியுறவு போன்றவை நியூசிலாந்தின் பொறுப்பில் இருந்தாலும் குக் தீவுகள் தனித்து இயங்குகின்றன.

News June 7, 2024

BE – 2ம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பு

image

பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. டிப்ளோமா பட்டயப்படிப்பு, பி.எஸ்சி. தேர்ச்சி பெற்றவர்கள் நாளை முதல் விண்ணபிக்கலாம். அதேபோல் முதலாமாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 2.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

News June 7, 2024

மோடியை சந்திக்க நேரம் கேட்ட ஓபிஎஸ்

image

மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விரும்பிய போது, அவர் நேரம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மோடியை சந்திக்க நேரம் பெற்றுத் தரும்படி பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலிடம் அவர் தரப்பு கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காக சந்திக்க விரும்புகிறார் எனத் தெரியவில்லை.

News June 7, 2024

14 ஆண்டுகளுக்கு பிறகு பதிலடி கொடுத்த சவுரப்

image

PAK-க்கு எதிரான 11ஆவது லீக் போட்டியில் USA அணியின் வெற்றிக்கு இந்திய வம்சாவளி வீரர் சவுரப் நேத்ராவால்கர் முக்கிய பங்காற்றினார். 2010 ஐசிசி U-19 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடிய சவுரப் 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும், இறுதிப்போட்டியில் இந்தியா அணி PAK-அணியிடம் தோல்வியடைந்தது. 14 ஆண்டுகள் கழித்து அதற்கு பழிவாங்கும் விதத்தில், PAK அணியை சூப்பர் ஓவரில் அவர் வீழ்த்தினார்.

News June 7, 2024

உள்ளாட்சித் தேர்தல்: விசிக புதுத் திட்டம்

image

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடிய விசிக, உள்ளாட்சித் தேர்தல் குறித்து புதுத் திட்டம் வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக என எந்த கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டாலும், அதிக இடங்களை கேட்க வேண்டும் என்றும், குறிப்பாக வடதமிழகத்தில் அதிக இடங்களை கேட்க அக்கட்சி திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

error: Content is protected !!