News April 26, 2024

ஆட்டநாயகன் விருது வென்ற ரஜத் படிதார்

image

SRH-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB வீரர் ரஜத் படிதார் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். டு பிளசி, வில் ஜாக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, படிதார் விராட் கோலியுடன் இணைந்து சிறப்பாக விளையாடி வந்தார். ஸ்பின் ஓவர்களில் சிக்சர், பவுண்டரி என விளாசிய அவர், அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 19 பந்துகளில் அரை சதம் கடந்த அவர், SRH வீரர் உனத்கட் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

News April 26, 2024

வேட்பாளர் மறைவால் தேர்தல் தள்ளிவைப்பு

image

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில், 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மத்தியப் பிரதேசத்தின் பேதுல் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் அசோக் பஹலவி, ஏப்.9 ஆம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1952இன் படி, பேதுல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு, மே 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News April 26, 2024

விஷாலின் ‘ரத்னம்’ திரைப்படம் இன்று வெளியீடு

image

ஹரி இயக்கத்தில் விஷால் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ரத்னம்’ திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்களும், ட்ரைலரும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தாமிரபரணி மற்றும் பூஜை படங்களைப் போல, இந்தப் படமும் விஷாலுக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 26, 2024

Apply Now: மத்திய அரசில் 1,113 பணியிடங்கள்

image

தென்கிழக்கு மத்திய ரயில்வே 1,113 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. Trade Apprentice பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, 12 ஆம் வகுப்பு, ITI. வயது வரம்பு: 15-24. விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 1. தேர்வு: நேர்காணல். ஊதியம்: SECRஇன் நிபந்தனைகளின்படி வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு <>SECR<<>> இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

News April 26, 2024

மேலும் 8 சிவிங்கிப் புலிகளை வாங்கும் இந்தியா

image

தென்னாப்பிரிக்காவிடம் இருந்து மேலும் 5 முதல் 8 சிவிங்கிப் புலிகளை இந்தியா வாங்கவுள்ளது. இந்தியாவில் அழிந்துவிட்ட சிவிங்கிப் புலி இனத்துக்கு புத்துயிர் அளிக்க நமிபியா, தென்னாப்பிரிக்காவிடம் இருந்து 20 சிவிங்கிப் புலிகளை இந்தியா வாங்கியது. இதில் 7 இறந்துவிட்ட நிலையில், 12 குட்டிகள் பிறந்துள்ளன. இதைத் தொடர்ந்து 8 சிவிங்கிப் புலிகள், தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தாண்டு வரவுள்ளன.

News April 26, 2024

வரத்து குறைந்ததால் பழங்கள் விலை கிடுகிடு உயர்வு

image

வரத்து குறைந்திருப்பதால், தமிழகத்தில் பழங்களின் விலை உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக இருப்பதால், நீர்ப்பாசனத்திற்கு தண்ணீர் குறைந்து பழங்கள் விளைச்சல் சரிந்து, தமிழகத்தின் முக்கிய சந்தைகளுக்கு பழ வரத்து குறைந்துள்ளது. இதனால் அனைத்து வகை பழங்கள் விலையும் கிலோவுக்கு ₹25 வரை அதிகரித்துள்ளது.

News April 26, 2024

சுப காரியங்கள் கைகூட சுதர்சனரை வணங்குங்கள்!

image

‘ஹரியின் சுதர்சனத்தை உபாசிப்பவர்கள் ஆனந்த வாழ்வை வாழ்வார்கள்’ என்கிறது பாகவதம்.
மகாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களிலும் உடன் இருந்து தீமைகளை அழித்தவர் சுதர்சனர். எனவே சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று சுதர்சனருக்கு நெய் தீபமேற்றி, துளசி இலை மாலை அணிவித்து, பன்னிரு முறை அவரை வலம் வந்து, ‘ஜய ஜய ஶ்ரீசுதர்ஸனா’ என்ற மந்திரத்தைச் சொல்லி வணங்கினால், சுப காரியங்கள் கைகூடும் என்பது ஐதிகம்.

News April 26, 2024

முக்கிய வழக்குகளில் மட்டுமே அரசு அதிகாரிகளுக்கு சம்மன்

image

முக்கிய வழக்குகளில் மட்டுமே அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப வேண்டுமென்று நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை எதிர்த்து, மேற்கு வங்க அரசு தொடுத்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முதலில் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் விசாரிக்க வேண்டும், பிறகு தேவை ஏற்பட்டால் சம்மன் அனுப்பலாமென கூறி, உயர்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்தனர்.

News April 26, 2024

ஹைதராபாத்தை வீழ்த்திய பெங்களூரு

image

SRH-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 35 ரன்கள் வித்தியாசத்தில் RCB அணி அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத ஹைதராபாத் அணி, சென்னை, மும்பை, டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகளை அவர்களுடைய மைதானத்திலேயே வீழ்த்தியது. ஹைதராபாத்தைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் தங்கள் சொந்த மண்ணில் தோல்வி அடைந்துள்ள நிலையில், RCB அணியுடனான நேற்றைய போட்டியில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

News April 26, 2024

2ஆம் கட்ட வாக்குப்பதிவு எங்கெல்லாம் நடக்கிறது?

image

மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.19ம் தேதி நடந்து முடிந்தது. தொடர்ந்து, இன்று 2ஆம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், கேரளா 20, கர்நாடகா 14, ராஜஸ்தான் 13, மகாராஷ்டிரா 8, உ.பி 8, ம.பி 6, பிஹார் 5, அசாம் 5, மேற்குவங்கம் 3, சத்தீஷ்கர் 3, காஷ்மீர் 1, மணிப்பூர் 1, திரிபுரா 1 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.

error: Content is protected !!