India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைக்கு இன்று நடைபெறும் 2ஆம் கட்டத் தேர்தலில் ஏராளமான பிரபலங்கள் போட்டியிடுகின்றனர். ராகுல் காந்தி வயநாட்டிலும், சசிதரூர் திருவனந்தபுரத்திலும் போட்டியிடுகின்றனர். மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்( திருவனந்தபுரம்), ஹேம மாலினி (மதுரா), கர்நாடக முன்னாள் குமாரசாமி (மாண்டியா) ராமாயணத்தில் ராமராக நடித்த அருண் கோவில் (மீரட்) ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
SRH-க்கு எதிரான தங்களது 250ஆவது ஐபிஎல் போட்டியில், RCB அணி வெற்றி பெற்றது. கடந்த மார்ச் 25ஆம் தேதி பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற RCB அணி, அடுத்து நடந்த 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து பிளே-ஆஃப் வாய்ப்பை தவற விடும் நிலைக்கு சென்றது. இந்நிலையில், ஒரு மாதம் கழித்து, SRH -க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்று, பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது RCB.
ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘டியர்’ திரைப்படம், நாளை மறுநாள் (ஏப்ரல் 28) நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது. ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்.11ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘குட் நைட்’ படத்தைப் போலவே, குறட்டை விட்டு தூங்கும் பெண்கள் பற்றிய இப்படமானது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
வார இறுதி விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று 280 பேருந்துகளும், நாளை (ஏப்.27) 355 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 55 பேருந்துகளும், பெங்களூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில், சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர். அந்த வகையில், கேரளாவில் நடிகர் சுரேஷ்கோபி தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். இதேபோல், கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினர்.
SRH-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 4 Four, 1 Six என விளாசி தனது 53ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் 400 ரன்களை கடந்த அவர், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (9 முறை) 400 ரன்களை கடந்த வீரர் மற்றும் ஓப்பனராக களமிறங்கி 4,000 கடந்த வீரர் என்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.
ஜி7 அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜூன் மாதம் பிரதமர் மோடி இத்தாலி செல்லவுள்ளார். இத்தாலியின் புகிலியா நகரில் ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஜி7 அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளும்படி இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியா அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அவருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் End to End Encryption-ஐ நீக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தினால், நாட்டை விட்டே வெளியேற நேரிடும் என டெல்லி ஐகோர்ட்டில் அந்நிறுவனம் வாதிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய IT விதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையில், இந்த வாதத்தை வாட்ஸ்அப் முன்வைத்தது. இவ்விதிகளின்படி, குற்றவழக்கு விசாரணைக்காக அரசு கேட்கும்பட்சத்தில் பயனரின் தகவலை வாட்ஸ்அப் வழங்க வேண்டும்.
கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் மலச்சிக்கல், செரிமான பிரச்னைகளுக்கு
நிவாரணம் தரக்கூடிய ஆற்றல் கொண்டது நாவல் பழம். உடலுக்கு குளிர்ச்சியை தரும் நாவல் பழ சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை, இஞ்சி, புதினா இலைகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் நாவல் பழ ஜூஸை ஊற்றி, சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் நேரில் ஆஜராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் மீண்டும் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அமித் ஷாவை அவதூறாக பேசியதாக சாய்பாசா சிறப்பு நீதிமன்றத்தில் பாஜக தொண்டர் தொடுத்த வழக்கில், ராகுல் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதற்கு மார்ச்சில் முதல்முறையும், நேற்று 2ஆவது முறையாகவும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.