News June 7, 2024

‘அமரன்’ படம் எப்போது ரிலீஸ்?

image

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம், வெளியீட்டிற்கு தயாராகி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படமானது, மறைந்த ராணுவ வீரர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம், வரும் செப்.27ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

News June 7, 2024

கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணம்

image

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்தின் 3ம் கட்ட பயணம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்து இன்று தொடங்குகிறது. 200 பேர் பயன்பெறும் இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் முதியோர்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகளுடன் பயணவழிப் பைகள் வழங்கப்படுகிறது. திருச்செந்தூரில் தொடங்கி திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, சுவாமிமலை, திருத்தணி, பழனிக்கு சென்று க்க்க்ம்ம்

News June 7, 2024

யார் இந்த நேத்ராவால்கர் ?

image

USA அணியில் இடம்பெற்றுள்ள சவுரப் நேத்ரவால்கர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரல்ல. அவர் பிறந்ததே மும்பையில் தான். 2010இல் U-19 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடிய அவர், 2013இல் மும்பையை பிரதிநிதித்துவப்படுத்தி ரஞ்சி போட்டியில் ஆடினார். பின்னர் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றார். ஆர்வத்தில் உள்ளூர் ஆட்டங்களில் விளையாடிய அவர் 2018இல் அமெரிக்க அணிக்கு நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

News June 7, 2024

தேவகவுடா மகன், மருமகன் இடையே போட்டி

image

NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற ஜனதா கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேவகவுடாவின் மகன் குமாரசாமியும், மருமகன் மஞ்சுநாத்தும் அப்பதவியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். தான் சுகாதாரத்துறை அமைச்சராக வேண்டுமென மக்கள் நினைப்பதாக மஞ்சுநாத் கூறியிருந்த நிலையில், தனக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

போட்டித் தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு ஜூலை 14ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நுழைவுத்தேர்வுக்கு wwww.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 8 முதல் 23 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள், வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி அல்லது SSC, ரயில்வே தேர்வுகளுக்கான பயிற்சி மேற்கொள்ள முடியும்.

News June 7, 2024

தேர்தல் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: அஜித் பவார்

image

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி தரவில்லை என்றும், அதற்கு தான் பொறுப்பேற்பதாகவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். அனைத்து தொகுதிகளை காட்டிலும் பாராமதி தொகுதியில் தனது மனைவி வெற்றி பெறுவார் என்று நினைத்தாக கூறிய அவர், இஸ்லாமிய வாக்குகள் எதிர்பார்த்த அளவு கிடைக்காததால் தோல்வி அடைந்ததாக தெரிவித்தார். சரத்பவார் மகள் சுப்ரியா சுலே அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

News June 7, 2024

தோல்வியின் வலி சுமந்த வெற்றி

image

அரசமைப்புச் சட்டமும், ஜனநாயகமும் தற்காலிகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பெரும்பான்மை இந்துக்கள் பாஜகவைப் புறக்கணித்துள்ளனர். பாஜக பெற்றுள்ள இவ்வெற்றியானது தோல்வியின் வலி சுமந்த வெற்றியே ஆகும். தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, பாஜகவிற்கு சரியான பாடம் புகட்டுவதாக அமைந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

News June 7, 2024

16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கரூர், அரியலூர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News June 7, 2024

தமிழக மக்களை கவர பாஜக மேற்கொண்ட வியூகங்கள்

image

*2020ஆம் ஆண்டு பாஜக மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன், வேல் யாத்திரை மேற்கொண்டார். *சட்டப்பேரவை முடிந்தவுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டார். *காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் வாரணாசியில் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. *நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செங்கோல் வைக்கப்பட்டது. *மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை புரிந்தனர்.

News June 7, 2024

பாஜகவை காட்டி திமுக ஏமாற்றுகிறது: தங்கர் பச்சான்

image

இறந்து போன பெரியாரையும், அண்ணாவையும் காட்டி திமுக மக்களை ஏமாற்றி வருவதாக இயக்குநர் தங்கர் பச்சான் விமர்சித்துள்ளார். திமுகவில் இன்றைக்கு இருப்பவர்கள் மன்னர்கள் போல வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், புலி வருகிறது என்ற கதை போல, பாஜக வந்துவிடும் என்று கூறியே திமுக மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டினார். கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர், மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

error: Content is protected !!