India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எலான் மஸ்க் போல டீப் ஃபேக்கால் உருவாக்கப்பட்ட போலி வீடியோவுடன் ரொமான்ஸ் செய்த தென்கொரிய பெண் ₹41 லட்சத்தை இழந்துள்ளார். ஜியாங் ஜி சன்னின் இன்ஸ்டாகிராம் கணக்கு, மஸ்க் பெயரில் இருந்த போலி கணக்குடன் சேர்க்கப்பட்டுள்ளது. உண்மை என நம்பி, அதிலிருந்து வந்தது டீப் ஃபேக் வீடியோ என தெரியாமல் சேட் செய்துள்ளார். காதலிப்பதாக கூறியதால், வங்கிக் கணக்கில் ₹41 லட்சம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, வாக்குகளுடன் 5% விவிபேட் சீட்டை ஒப்பிட்டு பார்க்க வேட்பாளர்கள் கோரலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவின்படி 2 மற்றும் 3ஆவது இடத்திலுள்ள வேட்பாளர்கள், 7 நாள்களில் கோரிக்கை வைக்கும்பட்சத்தில், செலவினத் தொகையை பெற்றுக்கொண்டு அதை சரி பார்க்க வேண்டும். இதில் முறைகேடு உறுதியானால், அந்தத் தொகையை திருப்பி வழங்குமாறும் தெரிவித்தது.
மக்களவைத் தேர்தலில் பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுத்த பணத்தை பகிர்வது தொடர்பாக பல இடங்களில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஏஜென்ட்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மாவட்ட நிர்வாகிகளே எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், கோபத்திற்கு ஆளான பூத் ஏஜெண்டுகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டி அதிருப்தி வெளிப்படுத்தி வருகின்றனர். ஒருசில இடங்களில் இவ்விவகாரம் அடிதடியிலும் முடிந்துள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி உள்ளிட்டோர் மீதான வழக்கின் தீர்ப்பை ஏப்.29ஆம் தேதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக நிர்மலா தேவிக்கு எதிராக 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், மாணவிகள், பெற்றோர் என 120 பேரிடம் விசாரணை நடந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட இருந்த நிலையில், நிர்மலா தேவி ஆஜராகததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பை இந்தியாவில் நடத்த இந்திய செஸ் சம்மேளனம் முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்போட்டியை இந்தியாவில் நடத்த சர்வதேச செஸ் சம்மேளனம் அனுமதித்தால், தமிழ்நாட்டில் போட்டி நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவிருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரனுடன் கேன்டிடேட் செஸ் போட்டியில் வென்ற தமிழக வீரர் குகேஷ் மோதவுள்ளார்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினில் பெரியார் படம் பதித்த வடிவமைப்பில் வெளியான ‘தீட்டு’ என்கிற பாடல் ஆல்பத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. உடலியல் காரணங்களுக்காக பெண்களை ஒதுக்கி வைக்கும் சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கையை விமர்சித்து, ‘தீட்டு’ பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது. இதற்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவிஎம்மில் சின்னங்களை பதிவேற்றம் செய்யும் SLU இயந்திரங்களை சீலிட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு குறைந்தது 45 நாள்களுக்கு பாதுகாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூறிய உச்சநீதிமன்றம், SLU இயந்திரங்கள் வைக்கப்பட்ட பெட்டிக்கு சீல் வைக்கவும், அதில் வேட்பாளர்களும், பிரதிநிதிகளும் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவித்தது. இவிஎம்முடன் 45 நாள்களுக்கு பாதுகாக்கவும் ஆணையிட்டது.
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உ.பியில் பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட்டபோது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், கடவுளை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததாக கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், நீதிபதி விடுமுறை எடுத்ததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மே மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மே மாதம் மொத்தம் 7 நாள்களுக்கு வங்கிகள் செயல்படாது. மே 1 உழைப்பாளர்கள் தினம் விடுமுறையாகும். இத்துடன் (மே 5, 12, 19, 26) ஞாயிற்றுகிழமைகள், 2வது (மே 11), 4வது (மே 25) சனிக்கிழமைகளில் விடுமுறையாகும். இதற்கேற்ப உங்கள் நிதி தேவையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக மலையாள நடிகர் பிஜு மேனன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இப்படத்திற்காக 1 வருடத்திற்கு கால் ஷீட் கொடுத்துள்ளேன் என்றும், படம் முழுக்க தனது கதாபாத்திரம் பயணிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 2010இல் ‘போர்க்களம்’ படத்தில் நடித்த அவர், 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.