News June 7, 2024

இந்தியாவா? அமெரிக்காவா?

image

பாகிஸ்தானுக்கு எதிரான T20 உலகக் கோப்பை போட்டியில், சூப்பர் ஓவரில் 5 ரன் வித்தியாசத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு இந்தியாவுக்கு பெரும் பங்குண்டு. ஆம், அமெரிக்க அணியின் கேப்டன் மோனங் பட்டேல் உள்பட ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், நொஷ்டுஷ் கெஞ்சிக், சவுரப் நேத்ராவால்கர் ஆகிய 5 பேரும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். இதனால், அமெரிக்க அணியை மினி இந்திய அணி என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

News June 7, 2024

எம்.பிக்களுக்கான சலுகைகள் என்னென்ன? (2/2)

image

பதவிக் காலத்தில் எம்.பிக்களுக்கு பிரதான பகுதிகளில் வாடகையில்லா தங்குமிடங்கள் வழங்கப்படும். ஒருவேளை இவை வேண்டாமென்றால், மாதம் ₹2,00,000 வீட்டுக் கொடுப்பனவைப் பெறலாம். ஒரு முறை எம்.பி பதவி வகித்தாலும், பதவிக் காலத்துக்குப் பிறகு ஓய்வூதியமாக மாதந்தோறும் ₹25,000 வழங்கப்படும். பதவிக் காலத்தைப் பொறுத்து, இது அதிகரித்து வழங்கப்படும். இலவச தொலைபேசி வசதி, இணைய வசதி, இலவச மின்சாரம் அளிக்கப்படும்.

News June 7, 2024

எம்.பிக்களுக்கான சலுகைகள் என்னென்ன? (1/2)

image

எம்.பிக்களுக்கு மாத சம்பளமாக ₹1 லட்சம் வழங்கப்படுகிறது. தொகுதி செலவுக்காக ₹70,000, நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலக செலவுக்காக ₹60,000 வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, தங்குமிடம் மற்றும் உணவுக்காக நாளொன்றுக்கு ₹2,000 வழங்கப்படுகிறது. எம்.பிக்கள் தங்கள் குடும்பத்தோடு ஆண்டுக்கு 34 முறை இலவசமாக உள்நாட்டு விமானங்களில் பயணிக்க முடியும். இலவச முதல் வகுப்பு ரயில் பயணமும் மேற்கொள்ளலாம்.

News June 7, 2024

BREAKING: ஜூன் 17ஆம் தேதி பொதுவிடுமுறை

image

துல்ஹஜ் பிறை இன்று தென்பட்டதால் ஜூன் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 17ஆம் தேதி தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதன்காரணமாக அன்று, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 7, 2024

அமைச்சரவை குறித்து NDA கூட்டணி ஆலோசனை

image

டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் NDA தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் துறைகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. அமித் ஷா, ராஜ்நாத் சிங், அஜித் பவார், தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆட்சியமைக்க உரிமை கோரும் முன், அமைச்சரவைக்கான இலாகா ஒதுக்கீட்டை முடிக்க NDA தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

News June 7, 2024

நாட்டின் தலைவர்களை மோடி அவமதிக்க கூடாது: முத்தரசன்

image

நாட்டின் புகழ்மிக்க தலைவர்களை மோடி அவமதிக்க கூடாது என சிபிஎம் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பராமரிப்பு என்று நாடு போற்றும் தலைவர்களான காந்தி, அம்பேத்கர் சிலைகள் அகற்றப்படுவதை ஏற்க முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி, அம்பேத்கர் சிலைகள் அகற்றப்பட்டு, அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

News June 7, 2024

முதல்வரை சந்தித்த நடிகர் பிரசாந்த்

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இயக்குநர் தியாகராஜன் மற்றும் அவரது மகன் நடிகர் பிரசாந்த் நேரில் சந்தித்தனர். மக்களவைத் தேர்தலில் திமுக பெற்றதை முன்னிட்டு, முதல்வரை சந்தித்து அவர்கள் மலர்கொத்து வழங்கி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும், இயக்குநர் தியாகராஜனும் நீண்டகால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

காங்கிரஸுக்கு வெற்றி, மோடிக்கு தோல்வி: ப.சிதம்பரம்

image

தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சிகளுக்கும் படிப்பினை என காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சில மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி தங்களுக்கு படிப்பினையாக இருப்பதாக கூறினார். மேலும், காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்திருப்பதாகவும், தோல்வி மோடிக்கு தான் என்றும் தெரிவித்த அவர், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்றார்.

News June 7, 2024

‘ரெட்ட தல’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

image

அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். இதில், இரட்டை வேடங்களில் நடிக்கும் அருண் விஜய்க்கு ஜோடியாக, சித்தி இட்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், இது அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகவுள்ளது.

News June 7, 2024

வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல்

image

திருச்சூரில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டதில், ரயிலின் சி2 மற்றும் சி4 பெட்டிகளின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. இதற்கு முன்பும், கேரளாவில் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசிய சம்பவம் நடந்துள்ளது.

error: Content is protected !!