News April 26, 2024

கோலி இல்லாத டி20 அணியை அறிவித்த சஞ்சய் மஞ்ச்ரேகர்

image

சஞ்சய் மஞ்ச்ரேகர் தேர்வு செய்துள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கோலிக்கு இடம் இல்லை. ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார், ரிஷப் பந்த், கே.எல் ராகுல், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, சிராஜ், அவேஷ் கான், ராணா, மயங்க் யாதவ், குருணால் பாண்டியா அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். 2 ஆண்டுகளாக கோலி டி20 இந்திய அணியில் விளையாடாததால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

News April 26, 2024

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால்…

image

*வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ரத்தச் சோகையை நீக்கி, ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
*உடலுக்கு ஆற்றலையும், சுறுசுறுப்பையும் உடனடியாகக் கொடுக்கும்.
*தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்னைகள் சரியாகும்.
*இதய ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
*வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம் எலும்புகளை உறுதியாக்கும்.

News April 26, 2024

தொழிலாளர்களுக்கு வசதி செய்து கொடுங்கள்

image

கோடை வெயிலைச் சமாளிக்கத் தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு பணி நிறுவனங்களுக்குத் தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தொழிற்சாலைகள், கட்டுமானப் பணி போன்ற வெப்பம் அதிகமாக இருக்கும் துறையில் பணிபுரிபவர்களுக்குச் சுழற்சி முறையில் வேலை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணிக்கத் துணை இயக்குநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News April 26, 2024

ரூ.1.25 லட்சம் கோடி செலவில் ரோப்வே திட்டம்

image

சுற்றுலாத் துறையை மேம்படுத்த ரோப் கார் சேவைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.25 லட்சம் கோடி செலவில் 200க்கும் மேற்பட்ட ரோப்வே திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இத்திட்டத்தில், மலைப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.

News April 26, 2024

மோடி கண்ணீர் விடத் தயாராகி விட்டார்

image

பிரதமர் மோடியின் பேச்சுக்களைப் பார்க்கும் போது அவர் மிகவும் பதற்றமாக இருப்பது தெரிவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற பிரதமர் முயல்வார் என்று கூறிய அவர், மக்கள் மோடியிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றார். முன்னதாக, இடஒதுக்கீடு, இஸ்லாமியர்கள் விவகாரங்களில் பிரதமரும், ராகுலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

News April 26, 2024

வாக்குப்பதிவு: 3 மணி நிலவரம்

image

நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது. அதில், பிற்பகல் மணி நிலவரப்படி கேரளாவில் 52 சதவீத வாக்குகளும், கர்நாடகாவில் 51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சத்தீஸ்கரில் 63.92%, ஜம்மு & காஷ்மீரில் 57.76% என வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. வெயிலின் தாக்கத்தால் இந்த ஆண்டு வாக்குப்பதிவு சற்று மந்தமாகவே உள்ளது.

News April 26, 2024

எனக்கு காதல் மீது நம்பிக்கை இருக்கிறது

image

காதலுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் உடனான காதல் குறித்துப் பேசிய அவர், தனக்குக் காதல் மீது எப்போதும் நம்பிக்கை இருப்பதாகக் கூறினார். தான் மிகவும் எளிமையாளவள் எனக் கூறிய அவர், காதலுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென நினைப்பேன் என்றார். இதே விஷயத்தைத்தான் தனது பார்ட்னரிடமும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

News April 26, 2024

கேரளாவில் வாக்களித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத்

image

ஜனநாயகத்தில் வாக்களிப்பு மிக முக்கியமானது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்களின் உரிமையைப் பயன்படுத்துவதில் சுணக்கம் காட்டக் கூடாது, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். சோம்நாத்துக்குக் கேரளாவில் வாக்கு இருந்த நிலையில், இதற்காகப் பெங்களூருவில் இருந்து இன்று கேரளா சென்ற அவர், தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளார்.

News April 26, 2024

வாக்கு எண்ணும் பணிகள் குறித்து ஆலோசனை

image

அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை செய்து வருகிறார். தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

News April 26, 2024

இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம்

image

தெலுங்கானாவில் காங்கிரஸ் & பி.ஆர்.எஸ் கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தடாலடியாகக் கூறியுள்ளார். அத்துடன் அந்த இட ஒதுக்கீட்டை எஸ்.சி, எஸ்.டி & ஓ.பி.சிகளுக்கு வழங்குவோம் என்றும் அவர் அறிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தொடர்ந்து பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

error: Content is protected !!