India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சண்டிகர் ஏர்போர்ட்டில் நடிகை கங்கனாவை, பெண் காவலர் கன்னத்தில் அறைந்தது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக பிறரை தாக்குவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல, காவலர்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாகப் பேசுபவர்களை தாக்கினால் நாட்டின் பாதுகாப்பு என்னவாகும் என்ற வாதத்தையும் சிலர் முன்வைத்து வருகின்றனர்.
*1783 – இஸ்லாந்தில் உள்ள லாக்கி எரிமலை வெடித்த 8 மாதங்களில் வறட்சி, வறுமை ஏற்பட்டதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி உள்ளிட்ட நகரங்கள் மீது குண்டுவீசி தாக்கின.
*1992 – முதலாவது உலகப் பெருங்கடல்கள் நாள் கொண்டாடப்பட்டது.
*2004 – 1882 ஆம் ஆண்டிற்குப் பிறகு வெள்ளிக் கோள் சூரியனைக் கடந்தது அவதானிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான தனது கணிப்பு தவறாகி விட்டதாக பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டுள்ளார். தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், எண்களின் அடிப்படையில் தனது கணிப்பு 20% தவறாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2 ஆண்டுகளாக, எண்ணிக்கை அடிப்படையில் பேசி தவறு செய்துவிட்டதாகவும், இனிமேல் சீட் எண்ணிக்கை குறித்து எப்போதும் பேசப்போவது இல்லை எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மூலம் தேர்தலை நடத்த வேண்டாம் என்று காங்கிரஸ் கூறவில்லை என ப.சிதம்பரம் கூறியுள்ளார். EVM முறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எனக் கூறிய அவர், VVPAT எந்திரத்தில் வரும் ஒப்புகைச் சீட்டை வாக்காளர்கள் தங்கள் கையால் எடுத்து மற்றொரு பெட்டியில் போட வேண்டும் என்பது தான் தங்களது கோரிக்கை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: நட்பியல்
▶அதிகாரம்: பெண்வழிச்சேறல்
▶குறள்: இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர்.
▶பொருள்: அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.
பருவமழையின்போது தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சாரத் துறைக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார். தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குமாறு அறிவுறுத்தினார். மேலும், பராமரிப்புக்காக மின்சாரம் நிறுத்தப்படும் தகவலை முன்கூட்டியே SMS மூலம், மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் யோசனை வழங்கினார்.
பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான X பதிவில், “இந்திய நாட்டின் பிரதமராக 3ஆவது முறையாக பதவியேற்க உள்ள மோடிக்கு, அதிமுக மற்றும் தனது சார்பில் வாழ்த்து” எனத் தெரிவித்துள்ளார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் அந்தக் கூட்டணி முறிந்து இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன.
இன்று (ஜூன் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், NDA கூட்டணியின் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்ற 293 எம்.பிக்களும் அவரை ஒருமனதாக தேர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, மோடியை தேர்வு செய்ததற்கான கடிதத்தை, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் ஜெ.பி.நட்டா, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் நேரில் வழங்கினர்.
‘ஹமாரே பாரா’ என்ற இந்தி படத்திற்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. கமல் சந்ரா இயக்கத்தில் அனு கபூர், அஷ்வினி உள்ளிடோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், சமூக நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு, மறு உத்தரவு வரும் வரை இப்படத்தை திரையரங்குகளில் திரையிட தடை விதிப்பதாக கர்நாடக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.