News April 26, 2024

மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த அவலம்

image

திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பட்டியலின மாணவிகள் இருவரை தலைமை ஆசிரியர் கழிவறையை சுத்தம் செய்ய நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் பேசும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் இளமதி ஈஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News April 26, 2024

மாணவிகள் ஹிஜாப் அணியத் தடையில்லை

image

ஜேஎன்யூ மாணவிகள் ஹிஜாப் அணியத் தடையில்லை எனப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிதர் தெரிவித்துள்ளார். உடை அணிவது மாணவர்களின் தனிப்பட்ட உரிமை என்ற அவர், உணவு, உடை, ஆடை விவகாரத்தில் மாணவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது.

News April 26, 2024

பாஜகவின் வெற்றிக்கு உதவிய காங்., வேட்பாளர் சஸ்பெண்ட்

image

சூரத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வேண்டுமென்றே வேட்புமனுவை தவறாக நிரப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கட்சி அவரை 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நீலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இந்நிலையில் கும்பானி பாஜகவுடன் இணைந்து சதி செய்திருக்கலாம் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி விசாரணையை தொடங்கியுள்ளது.

News April 26, 2024

கொல்கத்தா அணி பேட்டிங்

image

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள KKR அணி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது. இதேபோல, 8 போட்டிகளில் விளையாடிய PBKS அணி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?

News April 26, 2024

உலகின் ஆதிக்கனி மாம்பழம்?

image

மாம்பழம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய ஆதிக்கனி எனக் கூறப்படுகிறது. 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே மாமரங்கள் இருந்ததற்கான படிமங்கள் கிடைத்துள்ளன. வடகிழக்கு இந்தியா, மியான்மர், வங்கதேசப் பகுதிகள் மாம்பழத்தின் பிறப்பிடமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனப் பயணி யுவான் சுவாங், மாம்பழங்களை எடுத்துச் சென்றதற்கான குறிப்புகள் உள்ளன.

News April 26, 2024

9 ஆண்டுகளாக வாக்களிக்க முடியாமல் தவிக்கும் பெண்

image

கேரளாவில் கைவிரலில் வைக்கப்பட்ட மை அழியாததால் கடந்த 9 ஆண்டுகளாக வாக்களிக்க முடியாமல் உஷா என்பவர் பாதிக்கப்பட்டுள்ளார். 2016இல் வாக்களித்த போது அவருக்கு கைவிரலில் மை வைக்கப்பட்டது. ஆனால், அது பல ஆண்டுகளாக அழியாததால் அவரால் அடுத்து வந்த தேர்தல்களில் வாக்களிக்க முடியவில்லை. அவரது கையில் வைக்கப்பட்ட மை அழியாமல் போனதற்கான காரணம் புரியாமல் முழிக்கிறது தேர்தல் ஆணையம்.

News April 26, 2024

₹4 கோடி பறிமுதலான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6ஆம் தேதி ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக கைதான மூவரிடம் விசாரணை நடத்தியபோது, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணம் கொண்டு சென்றதாக வாக்குமூலம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கில் நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

News April 26, 2024

மாலை 5 மணி நிலவரம்: 60% வாக்குப்பதிவு

image

2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி, 60% வாக்குப்பதிவு நடந்துள்ளது. அசாம் – 70.7%, பீஹார் – 53%, சத்தீஷ்கர் – 72.1%, ஜம்மு காஷ்மீர் – 67.2%, கர்நாடகா – 63.9%, கேரளா – 64%, ம.பி. – 54.8%, மகாராஷ்டிரா – 53.5%, மணிப்பூர் – 76.1%, ராஜஸ்தான் – 59.2%, திரிபுரா – 76.2%, உத்தரப் பிரதேசம் – 52.6%, மேற்கு வங்கம் – 71.8% வாக்குகள் பதிவாகியுள்ளன.

News April 26, 2024

சினிமா பெரிய விஷயமில்லை

image

வீட்டில் பேசும் அளவுக்கு சினிமா பெரிய விஷயமில்லை என நடிகர் ஃபகத் பாசில் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், தியேட்டரில் படங்களைப் பார்த்து விட்டு அங்கேயே படம் பற்றிய கருத்தைப் பேசுங்கள் எனக் கூறியுள்ளார். வீட்டுக்குள் உட்கார்ந்து நடிகர்கள் குறித்துப் பேச வேண்டியமில்லை எனத் தெரிவித்துள்ள அவர், அதைத் தாண்டி வாழ்க்கையில் நிறையக் கடமைகள் இருப்பதாக அறிவுறுத்தியுள்ளார்.

News April 26, 2024

2ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது

image

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவுபெற்றது. 6 மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

error: Content is protected !!