India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு ஓய்வூதியம் என்பது கனவுதான். பெரும்பாலானவர்கள் பணத்தைச் சேமித்து வைத்து விரைவாக ஓய்வுபெற நினைக்கிறார்கள். அப்போது, எவ்வளவு தொகை இருந்தால் பணியில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற கேள்வி எழும். இதற்குப் பொருளாதார வல்லுநர்கள் 25X ஓய்வூதிய விதியைப் பயன்படுத்தக் கூறுகிறார்கள். அதாவது, ஆண்டுச் செலவில் 25 மடங்குத் தொகை கையில் இருந்தால் நீங்கள் ஓய்வு பெறலாம்.
பஞ்சாப் அணிக்கு எதிராகக் கொல்கத்தாவின் சுனில் நரைன், பிலிப் சால்ட் ஆகியோர் அரைச் சதம் அடித்துள்ளனர். ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய இருவரும், பஞ்சாப் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். குறிப்பாக சுனில் நரைன் அதிரடி சிக்சர்களை அடித்துப் பஞ்சாப் வீரர்களுக்கு கிலி ஏற்படுத்தினார். 10 ஓவர் முடிவில் KKR அணி விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் எடுத்துள்ளது. நரேன் 71, சால்ட் 59 ரன்கள் எடுத்துள்ளனர்.
சென்னையில், சுதந்திர தின அருங்காட்சியகம் அமைப்பதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக, சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், போட்டோக்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் மக்கள் அதை நன்கொடையாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு அளிப்பவர்களின் பொருட்கள், அவர்களது பெயருடன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் எனவும் அரசு கூறியுள்ளது.
சென்னை மெரினா அருகே உள்ள ஹுமாயூன் மஹால் கட்டடத்தில், 80,000 சதுர அடி பரப்பளவில் சுதந்திர தின அருங்காட்சியம் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் தியாகம், பங்களிப்பை போற்றும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. முன்னதாக விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பை போற்ற, அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
தேர்தல் பரபரப்பால் இம்மாதம் வெளியாக இருந்த பல படங்கள் தள்ளிப்போனது. இந்நிலையில், பிரபாஸ் நடிப்பில் ‘கல்கி 2898 ஏடி’, சுந்தர்.சி.யின் ‘அரண்மனை 4’, பார்த்திபனின் ‘டீன்ஸ்’, சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’, கவினின் ‘ஸ்டார்’, சாய் தன்ஷிகாவின் ‘தி ஃபுரூப்’ ஆகிய படங்கள் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிஷ்கினின் ‘பிசாசு 2’, அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படங்களும் வெளியாக வாய்ப்புள்ளது.
நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் அந்தத் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கக் கோரிய மனு தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எழுத்தாளரும், பேச்சாளருமான ஷிவ் கேரா இது தொடர்பாக பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். தற்போது நிலவரப்படி, ஒரு தொகுதியில் 99.99% சதவீத வாக்குகளை நோட்டா பெற்று, ஒரே ஒரு வாக்கினை வேட்பாளர் ஒருவர் பெற்றாலும் அவரே வெற்றி பெற்றவராகிறார்.
மங்கோலியாவுக்கு எதிரான மகளிர் T20 போட்டியில், 1 ரன் கூட கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தோனேசிய வீராங்கனை புதிய சாதனை படைத்துள்ளார். அபாரமாக பந்துவீசிய இந்தோனேசிய வீராங்கனை ரோமாலியா, 4 ஓவர்களில் 3 மெய்டன் & 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் மங்கோலியா அணி 24 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சர்வதேச T20 கிரிக்கெட்டில், இதுவரை எந்தவொரு (ஆண்/பெண்) பவுலரும் இந்த சாதனையை படைத்ததில்லை.
‘காதல் தி கோர்’ படத்தில் மம்மூட்டியின் நடிப்பைப் பார்த்து வியந்த நடிகை வித்யா பாலன், பாலிவுட் சூப்பர் ஸ்டார்களால் மம்மூட்டியைப் போல நடிக்க முடியாது என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். தன்பால் ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் நடித்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாகத் தெரிவித்த அவர், துல்கர் சல்மானுக்கு மெசேஜ் செய்து தந்தையிடம் தனது பாராட்டைத் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.
2ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று கேரளா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்றது. இதில், கேரளாவில் மொத்தம் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்டது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 69.04% வாக்குப்பதிவு நடந்ததாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கேரளாவில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2.77 கோடியாகும்.
பள்ளிக் மாணவர்களை எந்த விதத்திலும் தண்டிக்கக் கூடாது என அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்த விதிகளைக் கட்டாயம் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக மாணவர்களை அடிப்பது போன்ற தண்டனைகளைத் தடுக்க வேண்டும் என ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது.
Sorry, no posts matched your criteria.