News April 26, 2024

மே 1ஆம் தேதி முதல் வர உள்ள மாற்றங்கள்

image

மே 1ஆம் தேதி முதல் தனியார் முன்னணி வங்கிகளில் ஏற்பட உள்ள மாற்றங்கள்.
*ICICI வங்கியின் சேமிப்புக் கணக்குக்கான சேவைக் கட்டணம் மாறுகிறது.
*ICICI டெபிட் கார்டுக்கான ஆண்டு சேவைக் கட்டணம் நகரங்களில் ₹200, கிராமங்களில் ₹99ஆக மாற உள்ளன. *YES வங்கி தனது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள சேமிப்புக் கணக்கிற்கான சேவைக் கட்டணத்தை மாற்றி அமைக்க உள்ளது.
*IDFC FIRST வங்கி கிரெடிட் கார்டு சேவைக் கட்டணம் மாறுகிறது.

News April 26, 2024

உலகக் கோப்பை டி20 தூதராக யுவராஜ் சிங் நியமனம்

image

உலகக் கோப்பை டி20 தூதராக யுவராஜ் சிங்கை ஐசிசி அறிவித்துள்ளது. முதல் டி20 உலகக் கோப்பையில் 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்த யுவராஜ் சிங், 2007இல் டி20 மற்றும் 2011இல் 50 ஓவர் உலக் கோப்பையை இந்தியா வாங்குவதற்கு காரணமாக இருந்தார். உசேன் போல்ட், கிறிஸ் கெயில் ஆகியோருடன் யுவராஜ் சிங்கும் இந்தப் போட்டியின் தூதராக
அறிவிக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை டி20 போட்டி ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ளது

News April 26, 2024

கொல்கத்தா அணி ரன் குவிப்பு

image

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 261 ரன் எடுத்துள்ளது. முதலில் விளையாடி துவங்கிய கொல்கத்தா அணியின். சுனில் நரைன் மற்றும் சால்ட் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். நரேன் 71, சால்ட் 75 மற்றும் வெங்கடேஷ் ஐயர் 39 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் நிறைவடைந்த நிலையில், 6 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 261 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

News April 26, 2024

மீண்டும் வருகிறார் ‘இந்தியன்’ தாத்தா

image

‘கில்லி’ படத்தின் ரீரிலீஸுக்கு கிடைத்த வரவேற்பு பல வெற்றி படங்களை மீண்டும் பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை உருவாகியுள்ளது. அந்த வகையில், கமல்ஹாசனின் ‘இந்தியன்’ படத்தை ரீரிலீஸ் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஜூன் மாதம் இப்படத்தின் 2ஆம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், மே மாதத்தில் முதல் பாகத்தை வெளியிட ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

News April 26, 2024

சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

image

கோடை வெயிலின் தாக்கத்தால் மக்களிடையே சர்க்கரை நுகர்வு அதிகரித்து வருகிறது. இதனால், அதன் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4.9% வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில், விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதத்திற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு 2 லட்சம் டன் அதிகரித்து, 23 லட்சம் டன்னில் இருந்து 25 லட்சம் டன்னாக உயர்த்தியுள்ளது.

News April 26, 2024

சர்க்கரை விலை கிடு கிடுவென உயர்ந்தது

image

சர்க்கரை விலை கடந்த ஒரு மாதத்தில் 4.5% உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள், வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், பழச்சாறுகளின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இதன் காரணமாக தேவை அதிகரித்துள்ளதால் சர்க்கரை விலை மளமளவென உயர்ந்துள்ளது. குறிப்பாக சில்லரை விலையில் சர்க்கரை கிலோ ₹50 தாண்டியுள்ளது. வரும் நாட்களில் தேவைக்கேற்ப விலை உயரும் எனவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

News April 26, 2024

15 பந்துகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றுவார்

image

டி20 உலகக் கோப்பையில் முக்கிய வீரராக சூர்ய குமார் யாதவ் இருப்பார் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 15 பந்துகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் அவரிடம் இருப்பதாகக் கூறிய யுவராஜ், இந்திய அணி கோப்பையை வெல்ல அவர் முக்கியக் காரணமாக இருப்பார் என்றார். மேலும், விராட் மற்றும் ரோகித் மீது சிலர் விமர்சனங்களை வைத்தாலும் அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.

News April 26, 2024

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘அமரன்’

image

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘அமரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகளைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் சகோதரர்கள் உருவாக்கி வருகின்றனர்.

News April 26, 2024

சொம்பைக் காட்டி மோடியை விமர்சித்த ராகுல்

image

மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுக் காலிச் சொம்பைப் பிரதமர் கொடுத்துள்ளதாக ராகுல் விமர்சித்துள்ளார். பாஜகவை, பாரதிய ஜனதா கட்சி என்பதற்குப் பதில் மோடியின் பாரதிய சொம்பு கட்சி என்று அழைக்கலாம் என்று அவர் விமர்சித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா வந்த மோடிக்கு எதிராக காலி சொம்பைக் காட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தற்போது ராகுலும் சொம்பைக் கையில் எடுத்துள்ளார்.

News April 26, 2024

19 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசும்

image

தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்பட 19 மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் பகல் 12-3 மணி வரை தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!