India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசை தீர்மானிக்கும் அளவுக்கு மகத்தான வெற்றியை TDP பெற்றிருப்பது தெரிந்ததே. அரசின் முக்கிய முகமாக இப்போது சந்திரபாபு இருப்பதால், அவரது குடும்ப நிறுவனமான ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட்டின் மதிப்பு பங்குச்சந்தையில் எகிறி வருகிறது. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு 55% உயர்வு கண்டு, ஒரு பங்கின் விலை ₹661ஐ எட்டியுள்ளது. இதன் காரணமாக CBN-இன் மகன் லோகேஷின் சொத்து மதிப்பு ₹238 கோடியாக உயர்ந்துள்ளது.
நாட்டு மக்களிடையே ராகுல் காந்தியின் செல்வாக்கு உயரவில்லை என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றதால், அக்கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் இடையேதான் ராகுலுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறியுள்ள அவர், பாஜக வாக்கு வங்கியில் மாற்றம் ஏற்படவில்லை, மோடி மீதும் மக்களுக்கு பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்றும் தெரிவித்தார்.
எனது வழிகாட்டியும் நலம் விரும்பியுமான ராமோஜி ராவ் மறைவு செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன் என்று நடிகர் ரஜினி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகை, சினிமா, அரசியலில் சிறந்த கிங் மேக்கராக வரலாறு படைத்தவர் என்று புகழாரம் சூட்டிய அவர், ராமோஜி என் வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
சென்னை பனையூரில், வரும் 18ம் தேதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமனம், விஜய் பிறந்தநாளுக்கு செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள், பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராமோஜி பிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகை, திரைத்துறையில் ராமோஜி ராவின் அளப்பரிய பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும் என புகழாரம் சூட்டியுள்ள ஸ்டாலின், இந்த துயரமான நேரத்தில் ராமோஜி ராவின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் 100 ரன்கள் குவித்து ரோகித் ஷர்மா – விராட் கோலி இணை செய்த சாதனையை, ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் – இப்ராஹிம் ஜோடி சமன் செய்துள்ளது. உகாண்டா அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்களும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 103 ரன்களும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி, சாதனையை சமன் செய்துள்ளனர் ஆப்கானிஸ்தான் வீரர்கள்.
ஆபரணத் தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் மளமளவென்று குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4.50 குறைந்து ₹96க்கும், கிலோ வெள்ளி ₹4,500 குறைந்து ₹96,000க்கும் விற்பனையாகிறது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ₹2.50 உயர்ந்து ₹100.50 (கிலோவிற்கு ₹100,500) விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ₹4,500 குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியைக் கூட அதிமுக கைப்பற்றவில்லை. இந்த நிலையில், சேலம் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். ஓமலூர் கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனையில், தேர்தலில் சரியாக செயல்படாத நிர்வாகிகள், மறைமுகமாக பிறக் கட்சிகளுக்கு வேலை பார்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களின் வேகம் ஏறத்தாழ பாதியாக குறைக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட பதில் மூலம் தெரிய வந்துள்ளது. அதில், சராசரியாக 160 கி.மீ. வேகம் கொண்ட அந்த ரயில், தற்போது, 76.25 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுவதாகவும், வந்தே பாரத் ரயிலை அதிவேகமாக இயக்குவதற்கு வழித்தடங்கள் ஏற்ற வகையில் இல்லாததே வேக குறைப்புக்கான காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை பொறுப்பேற்க உள்ளார். தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் நாளை டெல்லியில் கூட உள்ளனர். அதனால், ஜி-20 மாநாட்டிற்கு வழங்கப்பட்டதை போல், டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள், ஸ்னைப்பர்கள், கமாண்டோக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் பறக்கவிடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.