News June 8, 2024

ஸ்ருதி ஹாசன் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

image

பானா காத்தாடி படத்தின் மூலம் அதர்வா மற்றும் சமந்தாவை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். இவரது பெற்றோரை நேரில் சந்தித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். இதுபற்றி பேசிய பத்ரி வெங்கடேஷ், என் பெற்றோர் ஒரு முறை கூட சினிமா பிரபலங்களை அழைத்து வரும்படி சொன்னதில்லை. ஆனால் ஸ்ருதியுடன் மட்டும் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினர். அதை நிறைவேற்றிய ஸ்ருதிக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

News June 8, 2024

லட்சியத்துடன் களமிறங்கும் ஹர்திக் பாண்டியா

image

பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டுமென்ற ஒரே லட்சியத்துடன் தான் களமிறங்கவுள்ளதாக இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா சூளுரைத்துள்ளார். பொதுவாகவே இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றால் எதிர்பார்ப்பு எகிறும் எனக் கூறிய அவர், அத்தகைய போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம் என்றார். இந்த ஸ்பெஷல் வாய்ப்பை பயன்படுத்தி, வரலாறு படைக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.

News June 8, 2024

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஜூன் 12ஆம் தேதி வரை வெப்பநிலை 1- 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News June 8, 2024

உ.பி.யில் பாஜக பின்னடைவுக்கு அமித் ஷா காரணமா?

image

கடந்த 2 மக்களவைத் தேர்தல்களில் உ.பி.,யில் வெற்றிக் கொடி நாட்டிய பாஜக, இந்த முறையும் நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், 80 தொகுதிகளில் 33இல் மட்டுமே பாஜக வென்றது. சமாஜ்வாதி 37, காங்கிரஸ் 6இல் வென்று அதிர்ச்சியளித்தன. இந்த பின்னடைவுக்கு, தேர்தலுக்கு முன்பு அனுபவம் வாய்ந்த 35 தலைவர்களை வேட்பாளராக்க ஆதித்யநாத் பரிந்துரைத்ததாகவும், அதை அமித் ஷா நிராகரித்ததும் காரணமாகக் கூறப்படுகிறது.

News June 8, 2024

மேஜிக் கலைஞரிடம் பயிற்சி பெற்ற யோகிபாபு

image

சிறிய பட்ஜெட் படங்களில் நாயகனாகவும், பெரிய நடிகர்களின் படங்களில் காமெடியனாகவும் நடித்துவருகிறார் யோகிபாபு. அந்த வகையில், வினீஸ் மில்லேனியம் இயக்கத்தில் ‘ஜோரா கைய தட்டுங்க’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதில், மேஜிக் கலை நிபுணர் கதாபாத்திரத்தில் நடிக்கும் யோகிபாபு, அதற்காக பிரபல மேஜிக் கலைஞர் ஒருவரிடம் பல நாள்கள் பயிற்சி எடுத்த பின்பு நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News June 8, 2024

2026இல் பாஜகவுடன் கூட்டணி தொடரும்: தினகரன்

image

மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்கும் என்று முதல் ஆளாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 2026இல் வலுவான கூட்டணியை அமைத்து, பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், டிடிவி இவ்வாறு அறிவித்துள்ளார்.

News June 8, 2024

பெண்ணுக்கு தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் நோய்

image

இங்கிலாந்தைச் சேர்ந்த கெல்லி நிப்ஸ் (42) என்ற பெண்ணுக்கு தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் பாராசோம்னியா எனும் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தூக்கத்தில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்து, 3 லட்சம் ரூபாய் வரை அவருக்கு கடன் ஏற்பட்டுள்ளது. 3 குழந்தைகளுக்கு தாயான கெல்லி, தனது முதல் குழந்தை பிறந்த 2018ல் இருந்து இந்த வியாதி இருப்பதாகவும், இதற்காக பெறப்படும் சிகிச்சை பலனளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் தேர்தல் பணியாற்றவில்லையா?

image

பாஜகவின் முன்னோடியாக ஆர்எஸ்எஸ் கருதப்படுகிறது. ஜெ.பி. நட்டா பிரசாரக் கூட்டமொன்றில் ஆர்எஸ்எஸ் உதவி பாஜகவுக்கு தேவையில்லை என பேசியதாகவும், இது ஆர்எஸ்எஸ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அதனால் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தேர்தல் பணியில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுவே, நாடு முழுவதும் தேர்தலில் பாஜக பின்னடைவைச் சந்தித்ததற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

News June 8, 2024

பாஜகவால் அதிமுகவுக்கு ஆபத்து: மாணிக்கம் தாகூர்

image

விருதுநகர் தொகுதியில் வென்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பத்திரிகைக்கு மக்களவைத் தேர்தல் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு விகிதத்தை பார்க்கையில், அதிமுக வாக்குகளை அக்கட்சி கபளீகரம் செய்யத் தொடங்கி விட்டது என்பதை காட்டுவதாகவும், இதனால், அதிமுக இனி சுதாரித்து கொள்ள வேண்டும், இல்லையெனில் ஆபத்து என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

News June 8, 2024

தொகுப்பூதியத்தை உயர்த்தியது தமிழக அரசு

image

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணினி உதவியாளர்களுக்கு தொகுப்பூதியம் ₹16 ஆயிரத்தில் இருந்து ₹20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு வரை மாதம் ₹14 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் இருந்து ₹16 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தொகுப்பூதியத்தை ₹4000 உயர்த்தி ₹20000ஆக வழங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!