India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்தியபிரதேசத்தில் பிரியால் யாதவ் என்ற விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண், மாநில பணியாளர் தேர்வாணைய தேர்வில் 6ஆவது இடம் பிடித்து துணை ஆட்சியராக தேர்வாகியுள்ளார். இதில், கவனிக்கத்தக்க சாதனை என்னவெனில், அவர் 11ஆவது வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர். எனினும், விடாமுயற்சியால், 2019இல் மாவட்ட பதிவாளர், 2020இல் கூட்டுறவு துணை ஆணையராக தேர்வான அவர், தற்போது துணை ஆட்சியராகவும் தேர்வாகியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தியை தேர்வு செய்துள்ளது காங்கிரஸ் எம்பிக்கள் குழு. டெல்லியில் இன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் சோனியாவின் பெயரை மல்லிகார்ஜுன கார்கே முன் மொழிந்தார். இதனை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டதால் சோனியா ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையேயான டி20 உலகக் கோப்பை லீக் போட்டி, இன்றிரவு 10.30 மணிக்கு பார்படாஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. 2007ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த எந்தவொரு டி20 உலகக் கோப்பை போட்டியிலும், ஆஸி., அணி இங்கிலாந்தை வீழ்த்தியது கிடையாது. நடப்பு உலகக் கோப்பையில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்ற ஆஸி., அணி, 17 வருட வரலாற்றை இன்று மாற்றி அமைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். யார் வெற்றி பெறுவார்?
அதிமுகவுடன் பாஜக கூட்டணியமைத்திருந்தால் சில தொகுதிகளை வென்றிருக்கலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை டெல்லியில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அண்ணாமலை இல்லாமல் தன்னிச்சையாக தமிழிசை செயல்படுவது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தினை X தளத்தில் பதிவிட்டு ஆலோசனை நடத்தியதை குறிப்பிட்டிருக்கிறார் தமிழிசை.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் வென்ற திமுக கூட்டணி, சட்டமன்றத் தொகுதி வாரியாக 221 இடங்களில் அதிக வாக்குகள் பெற்றுள்ளது. ADMK (எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்திவேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை) 8 தொகுதிகளிலும், PMK (பெண்ணாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி) 3 தொகுதிகளிலும், DMDK திருமங்கலம், அருப்புக்கோட்டையிலும் அதிக வாக்குகள் பெற்றுள்ளது.
ஆங்கிலேயே ஆதிக்கத்தை பற்றிய மிகைப்படுத்தல்களும், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களே தமிழகத்தில் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், தமிழகத்தில் தேசிய அளவிலான சுதந்திர போரட்ட தலைவர்கள் பற்றிய பாடங்கள் இல்லை எனவும், இந்தியா என்பது அந்நியர்கள் அடையாளப்படுத்திய வார்த்தை என்றும், இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல எனவும் கூறியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். போயிங் ஸ்டார்லைனர் மூலம் விண்ணுக்கு புறப்பட்ட அவர், 27 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு பத்திரமாக சென்றடைந்தார். இதுகுறித்து பேசிய அவர், விண்வெளி நிலையத்தை தன் வீடு போல் நினைத்துக் கொள்வதற்காக, ஒரு விநாயகர் சிலை மற்றும் சூடான மீன் குழம்பை தன்னுடன் எடுத்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தோல்விக்கு வி.கே.பாண்டியன் காரணமல்ல என, ஒடிஷா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உறுதிபட தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி குறித்து முதல்முறையாக பேட்டி அளித்த அவர், வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லையென்றும், அவர் மீதான விமர்சனம் துரதிஷ்டவசமானது என்றும் கூறினார். கொரோனா பெருந்தொற்று, புயல் போன்ற நெருக்கடியான காலங்களில் பாண்டியன் ஒரு அதிகாரியாக சிறப்பாக பணியாற்றியதாகவும் பாராட்டினார்.
சின்னத்திரை தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று ‘எதிர்நீச்சல்’. இத்தொடரில் நடித்துவந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் காலமானதால், இத்தொடரின் டிஆர்பி சரியத் தொடங்கியது. அதன்பின் மாரிமுத்துவுக்குப் பதிலாக வேல ராமமூர்த்தி நடித்துவந்த நிலையில், தற்போது இத்தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இத்தொடரின் க்ளைமேக்ஸ் காட்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்
விடாமுயற்சி, கங்குவா, விடுதலை 2 ஆகிய 3 படங்களையும், வரும் அக்டோபர் 29ஆம் தேதி தீபாவளி அன்று வெளியிட படக்குழுக்கள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை 2 மற்றும் கங்குவா படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.