News April 27, 2024

RCB அணிக்கு ஆலோசனைக் கூறிய கிப்ஸ்

image

ஐபிஎல் 2024 தொடரில் 9 போட்டிகளில் 7இல் தோல்வியை கண்ட RCB அணி குறித்து முன்னாள் வீரர் ஹெர்சல் கிப்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். பயிற்சியாளர்கள் முதல் வீரர்கள் வரை பல மாற்றங்களை செய்தாலும் RCB அணி கோப்பையை வெல்ல முக்கியமான ஒன்றை செய்ய தவறிவிட்டதாகக் கூறிய கிப்ஸ், மற்ற அனைத்தையும் மாற்றுவதை விட சின்னசாமி மைதானத்தின் பிட்ச்சை மாற்றுவது மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.

News April 27, 2024

பாஜக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு

image

மேற்கு வங்கம் பிர்பூம் தொகுதி பாஜக வேட்பாளர் தேபாசிஷ் தாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அவர், பாஜகவில் இணைந்து தேர்தலில் சீட் பெற்றார். இந்நிலையில், உரிய சான்றிதழ் இணைக்காததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்த தேப்தனு பட்டாச்சார்யா, அத்தொகுதி பாஜக வேட்பாளராகியுள்ளார்.

News April 27, 2024

மக்களுக்கு உதவி செய்ய பிரேமலதா வேண்டுகோள்

image

தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பாக தண்ணீர் பந்தல் திறக்குமாறு நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாலும், அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதாலும் அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், மோர், இளநீர், குளிர்பானம் போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கி அவர்களின் தாகத்தை தணிக்குமாறு அறிவுறுத்தினார்.

News April 27, 2024

ஐபிஎல்லில் 2ஆம் இடத்துக்கு சுனில் நரைன் முன்னேற்றம்

image

ஐபிஎல் ரன் குவிப்பில் கொல்கத்தா வீரர் சுனில் நரைன், 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பஞ்சாப்புக்கு எதிராக நேற்று 71 ரன்கள் குவித்த அவர், ஏற்கெனவே டெல்லிக்கு எதிராக 85, ராஜஸ்தானுக்கு எதிராக 109 ரன்கள் விளாசியுள்ளார். இதையும் சேர்த்து 8 போட்டிகளில் 357 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்தார். முதலிடத்தில் கோலி (430 ரன்) உள்ளார்.

News April 27, 2024

சசிகுமாரை இயக்கவுள்ள ராஜூ முருகன்

image

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் கதாநாயகனாக சசிகுமார் நடிக்கவுள்ளார். அவருக்கே உரித்தான எளிய மக்களின் வாழ்வியல் கதையை சிறிய பட்ஜெட்டில் எடுக்க ராஜூ முருகன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் சசிகுமாரிடம் அந்தக் கதையைச் சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறாராம். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை வந்தவாசி எம்.எல்.ஏ அம்பேத்குமார் தயாரிக்க உள்ளார்.

News April 27, 2024

IPL: 523 ரன்கள், 42 சிக்சர்கள் விளாசி சாதனை

image

பஞ்சாப், கொல்கத்தா அணிகள் கூட்டாக 523 ரன்கள், 42 சிக்சர்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, 18 சிக்சர்களுடன் 261 ரன்கள் குவித்தது. சுனில் நரேன் 71 ரன்களும், பில் சால்ட் 75 ரன்னும் விளாசினர். பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி, 24 சிக்சர்களுடன் 262 ரன்கள் குவித்து சேசிங் செய்தது. ருத்ரதாண்டவமாடிய பேர்ஸ்டோ 108, சஷாங் 62, சிம்ரன் 54 ரன்கள் விளாசினர்.

News April 27, 2024

முதல்வர் ஸ்டாலின் குறித்து தவறான தகவல் : திமுக

image

முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு செல்வதாக வெளியான தகவல் மிகவும் தவறானது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 39 தொகுதிகளுக்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், சில இடங்களில் திமுகவுக்கு வாக்குச்சதவீதம் மாறுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதால், அவர் மாலத்தீவு செல்லவில்லை என தெரிகிறது.

News April 27, 2024

அரசுப் பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு

image

தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும், முறையாக பராமரிக்கவும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். பேருந்து இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் புதிய பேருந்துகள், காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை, பராமரிப்பில் உள்ள பேருந்துகள் குறித்து ஆய்வு செய்ய அவர் அறிவுறுத்தினார்.

News April 27, 2024

3ஆவது பெரும் பொருளாதார நாடாக உயருவோம்

image

இந்தியாவை சுமார் 200 வருடங்கள் ஆட்சி செய்த இங்கிலாந்தை விடவும் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பரப்புரையில் பேசிய அவர், முன்னணி நாடுகளின் பொருளாதாரம் சரிந்து வரும்போது, இந்தியா மட்டும் பிரகாசமான நட்சத்திரத்தைப் போல் முன்னேறி வருவதாக கூறினார். மோடி மீண்டும் பிரதமரானால் 3ஆவது பெரும் பொருளாதார நாடாக உயருவோம் எனவும் தெரிவித்தார்.

News April 27, 2024

அபிஷேக் ஷர்மா இந்திய அணியில் இடம் பிடிக்கலாம்

image

அபிஷேக் ஷர்மா இன்னும் ஆறு மாதத்தில் இந்திய அணிக்காக விளையாட தயாராகிவிடுவார் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். பவர்பிளேவில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் அவரிடம் இருப்பதாகக் கூறிய யுவராஜ், இருப்பினும் இன்னும் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை என்றார். மேலும், அவர் சரியான பயிற்சியை மேற்கொள்ளும் பட்சத்தில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு மத்தியில் எளிதாக விளையாடுவார் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!