India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சண்டிகர் விமான நிலையத்தில் நடிகை கங்கனா ரனாவத்தை பெண் காவலர் அறைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், அவர் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், கங்கனாவை அறைந்த அந்த காவலருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் ஒன்றைப் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் இந்தியா 6 முறையும், பாக்., ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. டி20 WCல் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகளில் விளையாடி, 4 அரை சதம் அடித்துள்ளார். குறிப்பாக அவர் 4 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். அவர் ஆட்டமிழந்த அந்த ஒரு போட்டியில் தான் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.
வெற்றி பெறுவதற்கு சிறப்பாக விளையாடுவது தான் முக்கியமே தவிர, எதிரணியோ, ஆடுகளமோ இல்லை என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். நாளைய போட்டி குறித்துப் பேசிய அவர், “பாகிஸ்தானுக்கு எதிராக ஆசியக் கோப்பை, ODI உலகக் கோப்பையில் விளையாடினோம். நாளை டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ளோம். பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சவாலாக இருக்கும்” எனக் கூறினார்.
* மேஷம் – மகிழ்ச்சி ஏற்படும், * ரிஷபம் – போட்டிக்கு தயாராகுங்கள், *மிதுனம் – பணம் தேடி வரும், *கடகம் – லாபம் கிட்டும், * சிம்மம் – மேன்மை அடைவீர்கள், *கன்னி – நிறைவு காண்பீர், *துலாம் – கோபத்தை கட்டுப்படுத்துங்கள், *விருச்சிகம் – பயத்தை தவிர்த்திடுங்கள், *தனுசு – பெருமையான நாளாக அமையும், *மகரம் – இன்பம் ஜொலிக்கும், *கும்பம் – பதவி உயர்வு கிடைக்கும், *மீனம் – நஷ்டம் ஏற்படலாம்.
தமிழிசை, அண்ணாமலை இடையே மோதல் நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், தான் தலைமையை குறை கூறவில்லை என தமிழிசை கூறியுள்ளார். தேர்தலில் பலமான கூட்டணி அமைத்திருந்தால் வெற்றிபெற்றிருக்கலாம் என்ற அவர், அப்படிப்பட்ட கூட்டணி அமைக்காதது மாநில தலைமையின் தவறு எனக் கூறவில்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றிபெறாத நான் மத்திய அமைச்சர் பதவியை உரிமையுடன் கேட்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
‘கில்லி’ திரைப்படம், ரீ-ரிலீஸில் 50 நாள்களை கடந்துவிட்டதாக சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், கடந்த ஏப்.20ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இப்படம், முதல் நாளில் நல்ல வசூலை ஈட்டியது. இதனைத் தொடர்ந்து, விஜய் பிறந்தநாளையொட்டி, போக்கிரி, துப்பாக்கி படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளன.
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து மாநில கட்சி அந்தஸ்தைப் பெறக் காரணமான மக்களுக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். வெற்றி இலக்கை அடைய முடியாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், இந்த அங்கீகாரத்தை தக்கவைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க உறுதியேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் பதவிக்கு மாத சம்பளமாக ₹1.66 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் அடிப்படை சம்பளம் ₹50,000, இதர செலவுகள் ₹3000, நாடாளுமன்ற உதவித் தொகை ₹45,000, அன்றாட உதவித் தொகை ₹60,000 (நாளொன்றுக்கு ₹2000) ஆகியவை அடங்கும். இருப்பிடம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ளும். SPG பாதுகாப்பு செலவுகளை பாதுகாப்புத் துறை ஏற்றுக் கொள்ளும்.
அக்னிவீரர் திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு, 4 ஆண்டுகள் வரை மாதம் ரூ. 40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 4 ஆண்டுகள் முடிந்த பிறகு, அதிலிருந்து 25% பேர் மட்டும் திறமையின் அடிப்படையில் நேரடியாக இந்திய ஆயுத படைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், நீண்டகால பணி, ஓய்வூதியம், சலுகைகள் என எதுவுமே இத்திட்டத்தில் கிடையாது. இத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே பாஜக அரசு கொண்டு வந்தது.
அக்னிவீர் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தும், பாஜக அரசு அதை ரத்து செய்யவில்லை. உ.பி., பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் பாஜக தோல்வியடைந்ததற்கு இத்திட்டமும் ஒரு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. பிஹாரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென பாஜகவுக்கு நிதிஷ் குமார் அழுத்தம் தருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.