India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜம்மு காஷ்மீரில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் 5-வது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாக்., இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே எல்லை கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவும் குப்வாரா மற்றும் பாரமுல்லா பகுதியில் பாக் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கனடா இன்னும் பாரம்பரியமான வாக்குச் சீட்டு முறையில்தான் தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் PM மார்க் கார்னியின் லிபரல் கட்சியே முன்னிலையில் உள்ளது. அக்டோபரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வேண்டிய நிலையில் PM நாடாளுமன்றத்தை கலைத்ததால் தேர்தல் முன்கூட்டியே நடந்துள்ளது.
ரன் மழை பொழியும் IPL தொடரில் அதிவேகத்தில் சதமடித்து பலர் சாதனை படைத்துள்ளனர். நேற்று ‘இளஞ்சிங்கம்’ வைபவ் சூர்யவன்ஷி அதிரடி காட்டியதால் அந்த பட்டியலை சற்று புரட்டிப் பார்க்கலாம். இதில், 30 பந்துகளில் சதமடித்து கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். வைபவ் சூர்யவன்ஷி(35), யூசுஃப் பதான்(37), டேவிட் மில்லர்(38), ஹெட்(39), பிரியன்ஷ் ஆர்யா(39), அபிஷேக் சர்மா(40) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி என்.கருண் (73) காலமானார். ஒளிப்பதிவாளராகவும் தனது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியுள்ள இவர் இயக்கிய ‘பிறவி’ படம் 70 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. வனஸ்பிரதம், குட்டி ஸ்ரங்க் உள்ளிட்ட 7 படங்களுக்கு தேசிய விருதுகளையும் வென்று அசத்தியவர். இவரது சேவையைப் பாராட்டும் விதமாக மத்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. #RIP
வாழ்வில் நினைத்ததை எட்டிப்பிடித்து வெற்றிபெற சில பழக்கங்களை நாம் வழக்கமாக்கி கொள்ள வேண்டும் ➣எதிர்மறை சிந்தனையை கைவிடுங்கள் ➣முதலில் யாருடனும் உங்களை ஒப்பிட்டு கொள்ளும் பழக்கம் வேண்டாம் ➣சோம்பேறித்தனத்தால் வேலையை தள்ளிப்போடாதீர்கள் ➣பொறாமைப்பட்டு, எதுவும் செய்துவிட முடியாது ➣நான் இதை முடிப்பேன் என நம்பிக்கை மட்டும் போதும். Over-confidence வேண்டாமே ➣பிறர் விமர்சனத்தால் சட்டென துவண்டுவிட வேண்டாம்!
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதை அடித்த 4 வீரர்களும் இந்தியர்கள்தான். அதிலும் அனைத்து பேட்ஸ்மேன்களும் லெஃப்ட் ஹேண்ட் என்பது தான் இதில் கூடுதல் சிறப்பு. பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் 141 ரன்களும், ராஜஸ்தானுக்கு எதிராக கிஷன் 106, சென்னைக்கு எதிராக பிரியான்ஷ் 103 மற்றும் குஜராத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் சூர்யவன்ஷி 101 ரன்களையும் அடித்துள்ளனர்.
கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களில் 282 நிமிடங்கள் UPI வேலை செய்யாத நிலையில், இனி இதுபோன்ற இடையூறு இருக்கக் கூடாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டிப்பு காட்டியுள்ளார். டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை செயலாளர், RBI, NPCI அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் பேசிய அமைச்சர், அடுத்த 3 ஆண்டுகளில் நாளொன்றுக்கு 100 கோடி UPI பரிவர்த்தனைகள் நடக்க நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளார்.
மே தினம், வார விடுமுறையையொட்டி 2,119 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு நாளை 565 பஸ்களும், வெள்ளி, சனிக்கிழமை 375 பஸ்களும் இயக்கப்படவுள்ளது. கோயம்பேட்டிலிருந்து நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு 100 பஸ்களும், கோவை, திருப்பூர், ஈரோட்டுக்கு 250 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 715 பஸ்களும் இயக்கப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடமாநிலத்தவர் வருகை அதிகரித்து வருவதாகவும், வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல, கண்காணிக்கும் முறையை கொண்டு வர வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் வேல்முருகன் MLA கோரிக்கை விடுத்தார். அதற்கு, ID கார்டு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.
கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் டிரம்ப் அந்நாட்டு மக்களுக்கு பல ஆஃபர்களை வழங்கியுள்ளார். அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா மாறினால், மக்களின் வரிச் சுமை வெகுவாக குறையும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். உங்கள் வரிகளை பாதியாக குறைக்க போகும் நபரை தேர்ந்தெடுங்கள் என தெரிவித்துள்ள அவர் US-யுடன் இணைந்தால் மக்களுக்கு பல இலவசங்கள் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.