India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு பின் புதிய போப் யார் என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுந்துள்ளது. கார்டினல் எனப்படும் கர்தினால்கள் கூடி இதுகுறித்து ஆலோசனை நடத்தினர். அதில் புதிய போப்பை மே 7-ம் தேதி தேர்வு செய்வது என முடிவாகியுள்ளது. உலகம் முழுவதும் 135 கர்தினால்கள் உள்ள நிலையில் அவர்கள் தங்களுக்குள் ஒருவரை போப் ஆண்டவராக தேர்வு செய்வர்.
நைஜீரியாவில் கண்ணி வெடியில் சிக்கிய டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். அங்குள்ள போர்னோ மாநிலத்தில் அரசுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. எதிரிப் படைகளை பழிவாங்க வைக்கப்பட்ட கண்ணி வெடியில் டேங்கர் லாரி சிக்கியதால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. 15 ஆண்டுகளில் இதுபோன்ற வெடி விபத்துகளில் அங்கு 40,000 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.
புள்ளிப் பட்டியலில் நான்காமிடத்தில் உள்ள DC, ஏழாம் இடத்திலுள்ள KKR அணியுடன் இன்றிரவு மல்லுக்கட்ட உள்ளது. டெல்லி மைதானத்தில் போட்டி நடைபெற இருப்பது DC அணிக்கு சாதகம். மேலும், அந்த அணி பேட்டிங்கிலும் வலுவாக உள்ளது. அதேநேரத்தில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு கட்டாய வெற்றியை பெற வேண்டிய நிலையில் KKR உள்ளது. இதனால், இன்றைய ஆட்டத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் ஜெயிப்பாங்க?
ATMகளில் பணம் எடுக்கும் போது, தற்போது ₹100, ₹200 நோட்டுகள் பெரிதாக கிடைப்பதில்லை. இது பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. இதனால், இனி அனைத்து ATMகளிலும் ₹100, ₹200 இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. செப். மாதத்திற்குள் நாட்டில் 75% ATMகளிலும், மார்ச் 2026-க்குள் 90% ATMகளிலும் ₹100, ₹200 இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது. உங்களுக்கு ATMகளில் ₹100, ₹200 கிடைக்குதா?
பத்மபூஷன் விருது வாங்கிய நடிகர் அஜித்குமாருக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். X பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன் திரைத்துறை சாதனைகளுக்காக பத்ம பூஷன் விருது பெற்றுள்ள அன்பு சகோதரர் அஜித்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்தப் பதிவை அஜித் ரசிகர்களும், அதிமுக தொண்டர்களும் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 11-ம் தேதி உயிரிழந்த, பிரபல நடிகர் ஜீனி ஹேக்மேனின் உடற்கூராய்வு தகவல்கள் ஹாலிவுட்டை அதிரவைத்துள்ளது. இறப்பதற்கு முன் அவர், நீண்ட காலமாக சாப்பிடவில்லை எனவும் அவருக்கு அல்சைமர் நோய் இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அவரின் உடலில், நெயில் பாலிஷை அகற்ற பயன்படுத்தும் அசிட்டோன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜீனி ஹேக்மென் இரண்டு முறை ஆஸ்கர் வென்றுள்ளார்.
காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த சீமா ஹைதர் நாடு கடத்தப்படமாட்டார். அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றாலும், இந்தியரை திருமணம் செய்து கொண்டதால், அவர் இந்திய நாட்டின் பிரஜையாகி விட்டார். இதன் காரணமாக சீமா இந்தியாவிலேயே இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு பிரச்னையில் பாகிஸ்தானியர்களை வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
9 செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது, வாழ்வில் செல்வத்தை பெருக்கி, செவ்வாய் தோஷம் பாதிப்புகளை குறைக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் நீராடி, முருக பெருமானை வழிபடுங்கள். மாலை வரை பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதமிருந்து முருகனின் பெயரை உச்சரியுங்கள். மாலையில், பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் படைத்து முருகனை வழிபட்டு விரதத்தை முடியுங்கள்.
பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது X தளத்தில், தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் அஜித், பல்துறை நடிகர்களில் ஒருவராக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சினிமாவைத் தாண்டி பப்ளிசிட்டி இல்லாமல் பல தொண்டு செயல்களை அஜித் செய்து வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தரக்கூடாது என்ற உத்தரவை TN மின்சாரத் துறை திரும்பப் பெற்றுள்ளது. ஏப்.8-ல் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் இடையே எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து, அந்த சுற்றறிக்கையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.