India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறுநீர் கழிப்பது இயற்கையின் அழைப்பு. ஆனால், பலரும் சோம்பலின் காரணமாகவோ, பிஸியாக இருப்பதாலோ சிறுநீர் கழிப்பதை தள்ளிப் போடுகின்றனர். இதனால் இதயம், மூளை, சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதிக நேரம் சிறுநீரை அடக்குவதால் இடுப்பு தசைகள் பாதித்து, குழந்தையின்மை பாதிப்பு ஏற்படலாம். ஆகவே, சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்போதே, உங்கள் சிறுநீர்ப்பையை காலி செய்துவிடுங்கள்.
திருச்சியை பொறுத்தவரை அமைச்சர் கே.என். நேரு வைத்ததே திமுகவில் சட்டமாகும். ஆனால் திருச்சி மாவட்டத்தில் அவருக்கு எதிராக செளந்தரபாண்டியன் எம்எல்ஏ, பழனியாண்டி எம்எல்ஏ ஆகியோர் அரசியல் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேர் மீதும் நேரு கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அல்சைமர் நோயாளியான வடிவேலு, ஏடிஎம்மில் இருந்து அதிகளவில் பணம் எடுப்பதை ஃபகத் ஃபாசில் பார்க்கிறார். எனவே, அந்த பணத்தை கொள்ளையடிக்க நினைக்கும் அவர், வடிவேலுவை நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலைக்கு பைக்கிலேயே அழைத்துச் செல்கிறார். இந்தப் பயணத்தில் என்ன நடக்கிறது? ஃபகத் கொள்ளையடித்தாரா, இல்லையா என்பதே மாரீசன் படத்தின் கதை என அதன் இயக்குநர் சுதீஷ் சங்கர் தெரிவித்துள்ளார். படம் பார்க்க ரெடியா?
தமிழகம் முழுவதும் 24 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தி.மலை மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் மதுராந்தகத்திற்கும், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி தி.மலைக்கும், கே. ஜெயந்தி (அறந்தாங்கி) ராமநாதபுரத்திற்கும், மாயகிருஷ்ணன் (ராமநாதபுரம்) அறந்தாங்கிக்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
வரும் 27, 28-ம் தேதிகளில் 2 நாள்கள் பயணமாக PM மோடி தமிழகம் வருகிறார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27-ம் தேதி நடக்கும் ஆடித் திருவாதிரை திருவிழாவில் பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு தொடர்பான விவகாரங்கள் குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அகமதாபாத்தில் கடந்த மாதம் 12-ம் தேதி 260 பேர் உயிரைப் பலி வாங்கிய விமான விபத்தின் முதற்கட்ட அறிக்கை இன்று வெளியாகிறது. முதல் முறையாக விமானத்தின் கருப்பு பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்பட்டது. கடந்த புதன்கிழமை AAIB, தனது அறிக்கையை நாடாளுமன்ற குழுவிடம் சமர்ப்பித்தது. உலகையே உலுக்கிய இந்த கோர விபத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இன்று வெளியாகவுள்ள அறிக்கைக்காக நாடே காத்திருக்கிறது.
20 தொகுதிகளை ஒதுக்கக்கோரி திமுகவை மதிமுக நெருக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரத்திற்கு 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் மதிமுக உள்ளது. இதை சுட்டிக்காட்டி அண்மைகாலமாக மதிமுக பேசி வருகிறது. மு.க. ஸ்டாலினிடம் 20 தொகுதிகள் பட்டியலை அளித்து, இரட்டை இலக்க தொகுதிகளை ஒதுக்கும்படி வைகோ வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இளம் வீரர் சுப்மன் கில் இந்திய ODI அணியின் கேப்டனாக பொறுப்பேற்க இருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. 2027 ODI உலக கோப்பையை மையப்படுத்தி இந்த முடிவு என்றும் கூறப்படுகிறது. இது குறித்து தற்போதைய ODI கேப்டன் ரோஹித் சர்மாவிடமும் BCCI பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அடுத்து நடைபெறும் இலங்கை தொடரில் கில் கேப்டனாக பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.
ஏர்டெல்லில் இன்டர்நெட்டுடன் சேர்த்தே குறைந்தபட்சமாக ₹211-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதனால், இன்டர்நெட் பயன்படுத்தாத பெரியவர்கள் ரீசார்ஜ் செய்யாமலே விட்டுவிடுகின்றனர். இதனால், சிம் inactive ஆகி விடுகிறது. இதற்கு தீர்வாக, யூஸர்களுக்கு புதிய ₹189 திட்டத்தை ஏர்டெல் அறிவித்துள்ளது. 21 நாள்களுக்கு 1 GB டேட்டாவுடன், Unlimited calls & 300 SMS இந்த பிளானில் வழங்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ஜாதி இல்லை என சொல்கிறார்கள். ஆனால் அது மிக மோசமாக இருக்கிறது. இயக்குநர் ரஞ்சித் உடன் இருப்பதால் எனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என கலையரசன் கூறியுள்ளது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. அவருக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். பல முற்போக்கு கருத்துக்களை பேசி பாடம் எடுக்கும் கோலிவுட்டிலும் இப்படியா என நெட்டிசன்கள் கேள்வி கேட்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
Sorry, no posts matched your criteria.