News April 29, 2025

BREAKING: காலனி என்ற சொல் நீக்கம்: CM ஸ்டாலின்

image

காலனி என்ற சொல் அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும் என்றார்.

News April 29, 2025

தூங்கா நகரத்தை நோக்கி விஜய்!

image

தவெகவின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கை மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இடம் பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. மே மாதம் பூத் கமிட்டி கருத்தரங்கம் அங்கு நடைபெற உள்ளது. கோவையில் கடந்த 26 மற்றும் 27-ம் தேதிகளில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

News April 29, 2025

ஐநா-வில் பாக்., முகத்திரை கிழித்த இந்தியா

image

பாக்., செயல்பாட்டை வன்மையாக கண்டித்து ஐநா-வுக்கான இந்தியாவின் நிரந்தர துணை பிரதிநிதி யோஜ்னா படேல் பேசியுள்ளார். பாக்., அமைச்சரே பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டிய அவர், காட்டுத்தனமாக அந்நாட்டின் செயல்பாடுகள் உள்ளதாகவும் ஐநா-வில் சாடினார்.
உலகளாவிய மன்றத்தை பயன்படுத்தி இந்தியா மீது பாக்., ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

மர்மமான முறையில் ‘Family Man 3’ நடிகர் மரணம்!

image

நடிகர் ரோஹித் பாஸ்போர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அசாமைப் சேர்ந்த இவர், ஞாயிறு மதியம் நண்பர்களுடன் அருகிலுள்ள காட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு, அவர் விபத்தில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். விரைவில் வெளிவர இருக்கும் ரோஹித் சமந்தாவுடன் ‘Family man 3′-ல் ரோஹித் நடித்துள்ளார்.

News April 29, 2025

இந்திய பொருளாதாரத்தை TN மிஞ்சியுள்ளது: CM ஸ்டாலின்

image

இந்திய பொருளாதாரத்தைவிட TN பொருளாதாரம் உயர்ந்து இருப்பதாக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் TN கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்ததாக குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் தேசிய சராசரியை விட TN-ன் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளதாகக் கூறினார். மேலும், சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 சதவீதத்துடன் TN முதலிடத்தில் இருப்பதாகவும் CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

News April 29, 2025

பாஜகவின் தெலங்கானா புளூபிரிண்ட் இதுதான்..

image

தெற்கில் பாஜக, தனது அடுத்த இலக்காக தெலங்கானாவை டிக் செய்துள்ளது. ஹைதராபாத் உள்ளாட்சி எம்எல்சி தேர்தலில் ஓவைசி கட்சியிடம் பாஜக தோற்ற போதும், அதன் வியூகம் முக்கிய கட்சியான பிஆர்எஸ்-க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. AIMIM-ஐ வீழ்த்துவதற்கு கட்சி சார்பின்றி எல்லா இந்துக்களும் பாஜகவை ஆதரிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தது. இதே வியூகம் 2028 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்கிறார்கள்.

News April 29, 2025

ஏப்ரல் மாதத்தில் ஏறுமுகத்தைக் கண்ட தங்கம்!

image

தங்கம் விலை இம்மாதம் கடும் உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 1-ம் தேதி 22 கேரட் 1 கிராம் ₹8,510-க்கும், சவரன் ₹68,080-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் (28 நாள்களில்) கிடுகிடுவென உயர்ந்து <<16251745>>இன்று<<>> (ஏப்.29) ஒரு சவரன் ₹71,840-ஆக விற்பனையாகிறது. அதாவது இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹3,760 உயர்ந்துள்ளது. நாளை(ஏப்.30) அட்சய திருதியை என்பதால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 29, 2025

பார்லிமெண்ட் கூடுமா?.. PM மோடிக்கு கார்கே கடிதம்

image

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வலியுறுத்தி PM மோடிக்கு காங். தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில், ஒற்றுமை அவசியமான இந்த நேரத்தில், நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவது முக்கியம் என எதிர்க்கட்சிகள் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கேற்ப கூட்டத்தொடர் கூட்டப்படும் என நம்புவதாகவும் கார்கே தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

வைபவ் சூர்யவன்ஷியின் வியக்க வைக்கும் சாதனைகள்!

image

14 வயதிலேயே சதமடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் தொடரில் மேலும் பல அசைக்க முடியாத சாதனைகளையும் படைத்துள்ளார். அறிமுகமாகி குறைந்த போட்டிகளிலேயே (3) சதம் விளாசிய இந்திய வீரர் அவர்தான். நேற்றைய போட்டியில் அவர் அடித்த 101 ரன்களில் 93% சிக்சர், பவுண்டரி மூலம் குவித்துள்ளார். இது ஐபிஎல் தொடரில் எவரும் செய்யாத சாதனை. அதிவேக சதமடித்த இந்திய வீரரும் வைபவ் சூர்யவன்ஷிதான். 14 வயசுல இவ்வளவு சாதனைகளா..!

News April 29, 2025

ஏழாவது முறையும் திமுக ஆட்சி அமையும்: CM ஸ்டாலின்

image

இந்த ஆட்சியின் சாதனைகளால் திமுக ஆட்சி ஏழாவது முறை அமையும் என CM ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானிய கோரிக்கைக்கு அவர் பதிலுரை அளித்தார். அப்போது, கடந்த ஆட்சியாளர்களால் தமிழ்நாட்டில் நிர்வாக சீர்கேடு இருந்ததாக குற்றஞ்சாட்டினார். தற்போது, மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்பதாகவும் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

error: Content is protected !!