News August 9, 2025

விவாதமாக மாறிய திருமாவின் சர்ச்சை பேச்சு

image

MGR குறித்து திருமா விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. உண்மையில் MGR பார்ப்பனர்களுக்கு ஆதரவாக செயல்பட்டாரா அல்லது எம்ஜிஆரை முன்னிறுத்தி அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த திட்டமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். இத்தனை ஆண்டுகள் கழித்து MGR குறித்து திருமா விமர்சனம் செய்ய வேண்டியது ஏன்; திருமாவின் விமர்சனம் ஏற்புடையதா என சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது.

News August 9, 2025

எம்ஜிஆரை விமர்சித்த திருமாவளவன்

image

திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தவர் MGR என்ற விமர்சனம் உண்டு என திருமா தெரிவித்துள்ளார். ஒரு பார்ப்பனிய பெண் (ஜெயலலிதா) திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர் MGR என விமர்சித்த திருமா, கருணாநிதிக்கு பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என கூறுகிறார்கள், எம்ஜிஆர், ஜெ., குறித்து பேசுவது கிடையாது. தமிழக அரசியலின் மையமாக இருப்பது கருணாநிதி எதிர்ப்பு மட்டும்தான் என சாடினார்.

News August 9, 2025

நெசவாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்: EPS

image

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என EPS கூறியுள்ளார். அருப்புக்கோட்டையில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி கொள்கை கொண்டுவரப்பட்டது என்றார். மேலும், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், பசுமை வீடு வழங்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். அத்துடன், ஒவ்வொரு தீபாவளிக்கும் பெண்களுக்கு புடவை வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

News August 9, 2025

டிராபிக் போலீஸ் ஸ்பாட் ஃபைன் கட்ட சொல்லி மிரட்டினால்..

image

சரியான டாக்குமெண்ட் இல்லாமல் சென்று டிராபிக் போலீசிடம் சிக்கினால், உடனடியாக ஸ்பாட் ஃபைன் கட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களிடம் E-challan பெற்றுக் கொண்டு, அடுத்த 60 நாள்களில் ‘mParivahan’ செயலி மூலம் ஃபைன் கட்டலாம். டிராபிக் போலீஸ் அடாவடித்தனமாக நடந்துக் கொண்டால், அவர்கள் குறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். அடிக்கடி போலீஸ்கிட்ட சிக்கும் Friends-க்கு இத ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

BREAKING: எல்லையில் மீண்டும் மோதல்.. 2 வீரர்கள் மரணம்

image

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் நமது ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். குல்காம் மாவட்டத்தில் தொடர்ந்து 8-வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இன்று அதிகாலையில் நடந்த பயங்கர மோதலில் இந்த துயரம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

News August 9, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹200 குறைந்தது

image

இந்த வாரம் தொடங்கியது முதலே ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று(ஆக.9) சவரனுக்கு ₹200 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,445-க்கும், சவரன் ₹75,560-க்கும் விற்பனையாகிறது. இதனால் நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

News August 9, 2025

திருப்புமுனையை ஏற்படுத்தும் இன்றைய பாமக பொதுக்குழு

image

மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னும் இருவரும் சமாதானம் ஆகவில்லை. இதற்கிடையில், தானே பாமக தலைவர் என்று ராமதாஸ் கூறிவரும் நிலையில், இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியே தலைவர் என்று தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

News August 9, 2025

அவசரகால மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயம்

image

மூச்சுத்திணறல், இருமலுக்கு பயன்படுத்தும் இப்​ராட்​ரோபி​யம் உள்ளிட்டவை அவசரகால மருந்துகளாக உள்ளன. இதன் விலை உச்சவரம்பு 1 ML ₹2.96 ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. மேலும், BP-க்கு பயன்படுத்தும் சோடியம் நைட்​ரோபுரஸைடு 1 ML ₹28.99, நெஞ்சு வலி சிகிச்சைக்கு பயன்படுத்தும் டில்​டி​யாசெம் 1 காப்சூல் ₹26.77-க்கு விற்பனை செய்ய கூறியுள்ளது. இதோடு, 37 மருந்துகளின் விலையை குறைக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

News August 9, 2025

₹10,000 செலுத்தி திருமணத்தில் பங்கேற்கலாம்!

image

ஃபிரான்ஸ் Startup நிறுவனமான Invitin, ஒரு புதிய ஐடியாவுடன் வந்துள்ளது. அந்நிறுவனம் மூலம் நடைபெறும் திருமணங்களில் ₹10 ஆயிரம் செலுத்தி யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். விருந்து, புதிய உறவுகளை உருவாக்குதல் என அனைத்து வசதிகளையும் பெறலாம். மணமக்களின் திருமண செலவுகளை குறைக்கும் வகையில் இந்த ஸ்டார்ட்அப் செயல்படுகிறது. இந்தியாவிலும் ‘Join My Wedding’ எனும் இந்த நடைமுறை அறிமுகமாகியுள்ளது.

News August 9, 2025

அதிமுகவுக்கு நோ! கூட்டணி பேச்சை தொடங்கிய விஜய்

image

தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையும் தீவிரமாகியுள்ளது. இதற்கிடையில், விஜய்க்கு துணை முதல்வர் பதவி, 75+ சீட் என்ற அடிப்படையில், அதிமுக கூட்டணியில் எந்த நேரத்திலும் தவெக இணையலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அதிமுக கூட்டணியில் இணைய மறுத்துவிட்ட விஜய், தமிழ்நாட்டின் முக்கிய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!