News April 29, 2025

PM கிஷான் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்க முடிவு!

image

மத்திய அரசின் ‘PM கிஷான்’ உதவித்தொகையின் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். 19-வது தவணை ₹2000 கடந்த பிப்.24-ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்ட நிலையில், 20-வது தவணையை ஜூன் மாதம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 18-வது தவணை அக்டோபரிலும், 17-வது தவணை ஜூன் 2024லும் வழங்கப்பட்டது.

News April 29, 2025

PM மோடியை சந்தித்த நயினார் நாகேந்திரன்

image

டெல்லியில் PM மோடியை TN பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இந்த முதல் சந்திப்பின்போது, தமிழக அரசியல் சூழல், கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மோடியிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் நயினார் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

News April 29, 2025

வெற்றிமாறனுக்கு கண்டிஷன் போட்ட சூர்யா!

image

அறிவிக்கப்பட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இன்னும் சூர்யா – வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் தொடங்கவில்லை. இந்த ஆண்டில் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், வெற்றிமாறனுக்கு சூர்யா ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம். இவரு பாட்டுக்கு வருஷ கணக்குல ஷூட்டிங் எடுத்துட்டு இருக்க போறாரு என்ற பயத்தில், வெற்றிமாறனிடம் முழு ஸ்கிரிப்ட் கேக்கிறாராம் சூர்யா. அவருக்கும் விடுதலை சம்பவம் தெரிஞ்சிருக்கும்ல!

News April 29, 2025

558 காலி பணியிடங்கள்… ₹78,800 வரை சம்பளம்

image

Employees State Insurance Corporation(ESIC)-ல் ஸ்பெஷலிஸ்ட் கிரேட் II பதவிக்கான 558 காலி பணியிடங்கள் உள்ளன. சம்மந்தப்பட்ட மருத்துவ படிப்பில் முதுகலை டிகிரி பெற்று, 5 வருட அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும். மாதம் ₹67,000 – ₹78,800 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

News April 29, 2025

7 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: IMD

image

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. வேலூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் மற்றும் காரைக்காலில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

News April 29, 2025

நம்மூரிலும் வந்தாச்சு ரோபோ காப்..!

image

போலீஸ் இல்லாத நேரத்தில் தனியாக போகும் போது, யாராவது பிரச்னை கொடுப்பாங்க என இனி பெண்களுக்கு பயம் வேண்டாம். வந்தாச்சு ரெட் பட்டன்-ரோபோட்டிக். சென்னையின் 200 இடங்களில் இவர்கள் களமிறக்கப்படவுள்ளனர். 24 மணி நேரமும் ஆன் டூட்டிதான். ஏதாவது பிரச்னை என்றால், இவரிடம் இருக்கும் ரெட் பட்டனை அழுத்தினால் போதும், காவல் கட்டுபாட்டு அறையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இவரிடம், வீடியோ கால் வசதியும் உண்டு.

News April 29, 2025

3-வது குழந்தைக்கு சலுகை வேண்டும்: MLA கோரிக்கை

image

3-வது குழந்தை பெற்றுக் கொள்ள அரசு சலுகை வழங்க வேண்டும் என திமுக பர்கூர் MLA மதியழகன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகை குறைவதால் தொகுதி மறுசீரமைப்பின் போது பிரச்னை எழும் என சுட்டிக் காட்டி இந்த கோரிக்கையை அவர் சட்டமன்றத்தில் வைத்துள்ளார். ஏற்கனவே தொகுதி மறுசீரமைப்புக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை கவனம் பெற்றுள்ளது.

News April 29, 2025

உற்பத்தி பாதிப்பு.. முட்டை விலை அதிகரிக்குமா?

image

நாமக்கல் மண்டலத்தில் வெயில் தாக்கம் காரணமாக முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தால் முட்டையிடும் கோழிகள் நாள்தோறும் உயிரிழந்து வருவதாக பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கோழிகள் உணவு உண்ணும் அளவும் குறைந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால், முட்டை விலை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. தற்போது முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக உள்ளது.

News April 29, 2025

மத்தியஸ்தத்திற்கு வந்துள்ள இஸ்லாமிய நாடுகள்

image

இந்தியா-பாக். இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு இஸ்லாமிய நாடுகள் முன்வந்துள்ளன. பஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதிநீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என இந்தியா உக்கிரமாக உள்ளது. இந்நிலையில், சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல், இந்தியா-பாக். வெளியுறவுத்துறை அமைச்சர்களிடம் பேசியுள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்க தயார் என ஈரானும் முன்வந்துள்ளது.

News April 29, 2025

மே தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே 1 தொழிலாளர்கள் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனை இருக்காது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!