News April 29, 2025

தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்

image

அட்சய திருதியை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம் தான். ஏனெனில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. இன்று மாலை 5.31 மணி முதல் நாளை மதியம் 2.12 மணி வரை அட்சய திருதியை நடைபெறவுள்ளது. குறிப்பாக, நாளை அதிகாலை 5.41 மணி முதல் மதியம் 12.18 மணி வரை சுப முகூர்த்தமாகும். இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் கொழிக்கும்.

News April 29, 2025

வலுக்கட்டாய கடன் வசூலுக்கு 5 ஆண்டுகள் சிறை

image

கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. துணை முதலமைச்சர் தாக்கல் செய்த இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு இன்று பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு தவாக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அடாவடி கடன் வசூலால் தற்கொலைகள் அதிகரிக்கும் நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

News April 29, 2025

சல்மான் கானுக்கு நானி கொடுத்த பதில்

image

தென்னிந்தியாவில் பாலிவுட் படங்களை பார்ப்பதில்லை என சல்மான் கான் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த நானி அப்படி ஒன்றும் இல்லை பாலிவுட் படங்களுக்கு தென்னிந்தியாவில் எப்போதும் வரவேற்பு உள்ளதாக கூறியுள்ளார். அமிதாபச்சன் தொடங்கி சல்மான் கான் வரை அனைவரின் படமும் தெற்கில் பார்க்கப்படுவதாகவும், பல ஹிந்தி பாடல் இங்கு ஹிட்டாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

பாக்., விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை?

image

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாக்., விமானங்களுக்கு வான்வெளியை மூடுவது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது. இதனால், பாக்., விமானங்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சீனா, இலங்கை வழியாக செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை முன்கூட்டியே யூகித்த பாக்., சில நாள்களாக இந்திய வான்வெளியை தவிர்த்து வருகிறது. பாக்., கப்பல்களுக்கும் இந்தியாவில் தடைவிதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

News April 29, 2025

QR code-ஐ கண்டுபிடித்தவரை பற்றி தெரியுமா..?

image

டிஜிட்டல் உலகின் புரட்சிக்கு காரணமான QR code-ஐ கண்டுபிடித்தவர் ஜப்பானின் மாசாஹிரோ ஹரா என்பவர். கார் கம்பெனியில் வேலை பார்த்த இவர், கார் உதிரிகள் குறித்த தகவல்களை கூடுதலாக, சேமிக்க வடிவமைத்ததே QR code. ஜப்பானின் ‘Go’ என்ற போர்ட் கேமின் டிசைன்தான் இவருக்கு inspiration. 1994-ல் QR code-ஐ வடிவமைத்த ஹரா, உலக முழுக்க தற்போது இது பயன்படுத்தப்பட்டாலும், இதற்காக காப்புரிமையோ, பணமோ கேட்டதில்லையாம்.

News April 29, 2025

இணையத்தில் டிரெண்டாகும் #ByeByeStalin

image

2026-ல் திராவிட மாடல் அரசின் ‘2.0’ லோடிங் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் பேசியிருந்தார். இந்நிலையில், 2026-ல் தமிழக மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்புவார்கள் என்பதோடு #ByeByeStalin என அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது. இதனால், X பக்கத்தில் #ByeByeStalin ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதில், ‘2026-ல் ஒரே Version தான் அது TN AIADMK Version’ என அக்கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.

News April 29, 2025

வைபவ் சூர்யவன்ஷிக்கு பம்பர் பரிசு.. பிஹார் CM அறிவிப்பு

image

ஓவர் நைட்டில் பாப்புலராகி இருக்கும் RR வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பாராட்டுகளுடன் பணமழையும் கொட்டத் தொடங்கியுள்ளது. IPL-ல் அதிவேக சதமடித்த இந்திய வீரர் என சாதனை படைத்த அவரை பிஹார் CM நிதிஷ் குமார் வாழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக வருங்காலத்தில் புதிய சாதனைகளை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நிதிஷ், வைபவுக்கு ₹10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

News April 29, 2025

செந்தில் பாலாஜிக்கு புதிய பொறுப்பு வழங்க திமுக திட்டம்!

image

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது என SC அறிவித்துவிட்டதால், கட்சிப் பணிகளில் அவர் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இந்நிலையில், மேற்கு மண்டல அமைப்புச் செயலாளர் பதவி செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படலாம் என்று திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. திமுகவில் இந்தப் பதவி, தென்மண்டல அமைப்புச் செயலாளராக Ex மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இருந்தபோது கவனம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

News April 29, 2025

எல்லாத்தையும் அடமானம் வச்சிட்டேன்.. நடிகர் நானி

image

ஹிட் 3 படத்திற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் அடமானம் வைத்துவிட்டதாக நடிகர் நானி தெரிவித்துள்ளார். படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நானி, இந்தப் படத்திற்காக நான் தயாரித்த கோர்ட் படம் உள்பட எல்லாவற்றையும் அடமானம் வைத்துவிட்டேன்; இனியும் வேண்டுமென்றால் ராஜமௌலி-மகேஷ்பாபு படத்தை தான் அடமானம் வைக்க வேண்டும் என்று நகைச்சுவையாக பேசினார். இதைக்கேட்டு இயக்குனர் ராஜமௌலி சிரித்தார்.

News April 29, 2025

அமெரிக்கா யார் பக்கம்? நிபுணர்கள் கணிப்பு

image

இந்தியா-பாக். இடையே போர் மூண்டால், USA இந்தியாவுக்கு ஆதரவாக நிற்குமென ராஜீய நிபுணர்கள் கணித்துள்ளனர். 1971 இந்தியா-பாக். போரின் போது USA, பாக்.-க்கு ஆதரவளித்தது. இந்நிலையில், இந்தியா குவாட் அமைப்பில் இருப்பதாலும், சீனா-பாக். இடையே நல்லுறவு நீடிப்பதாலும், USA இந்தியாவை பகைக்காது என்கின்றனர். அதேசமயம் தெற்காசியாவில் இந்தியா வலிமையடைவதை USA விரும்பாது என்றும் இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.

error: Content is protected !!