News August 21, 2025

இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பாப்போம்!

image

நியூஸ் படிச்சி படிச்சி டயர்ட் ஆகிட்டீங்களா.. வாங்க உங்க மூளையை சுறுசுறுப்பாக்குவோம். சட்டென பார்த்தால், கடினமாக தெரியும். ஆனால், ஒரே ஒரு டிரிக் தெரிந்து விட்டால் போதும், இது ரொம்ப ஈசி. ஒரே ஒரு சின்ன Hint தரோம். 11 = 20, 12 = 31 என்ற வரிசையில் இந்த எண்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை கவனித்து பாருங்க. பதில் தெரியும். எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்க என பார்ப்போம்? SHARE IT.

News August 21, 2025

சத்தமில்லாமல் சாதனை செய்த விஜய்: N.ஆனந்த்

image

வடமாவட்டங்களில் மட்டும்தான் விஜய்க்கு செல்வாக்கு எனக் கூறியவர்களுக்கு, மதுரை மாநாட்டின் மக்கள் கூட்டம் பதிலடி கொடுத்துள்ளதாக N.ஆனந்த் கூறியுள்ளார். சத்தமில்லாமல் சாதித்து, கோடிக்கான தாய்மார்களின் அன்பை பெற்ற விஜய், 2026 தேர்தலில் வெற்றிவாகை சூடி, CM நாற்காலியில் அமர்வது உறுதி என சூளுரைத்தார். மேலும், வரும் நாள்களில் தவெகவினர் வியர்வை சிந்தி கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

News August 21, 2025

தவெக கொள்கை தலைவர்களுக்கு மரியாதை

image

தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு மாநாட்டில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதியின் பெயரில் உறுதிமொழியேற்பு நடைபெற்றது. மாநாட்டை நேரலை காண இந்த <<17473670>>லிங்கை<<>> கிளிக் செய்யுங்கள்.

News August 21, 2025

இந்தியாவை இழக்காதீங்க… முன்னாள் அமெரிக்க தூதர்

image

இந்தியாவுடனான வர்த்தக உறவை அமெரிக்கா இழக்க கூடாது என முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி வலியுறுத்தியுள்ளார். இந்தியா-அமெரிக்கா உறவை வலுப்படுத்துவது மிக அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். சீனாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவுக்கு தேவையான ஜவுளி, சோலார், செல்போன்களை இந்தியாவிடம் இருந்து எளிதில் வாங்க முடியுமென்றும் கூறினார். மேலும் வரி விதிப்பில் PM மோடியிடம் அதிபர் ட்ரம்ப் பேச வேண்டும் என்றார்.

News August 21, 2025

மாநாட்டில் ‘வேட்டைக்காரன்’ கெட்டப்பில் விஜய் ரேம்ப் வாக்

image

மதுரை மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள ரேம்ப்பில் நடந்து சென்ற விஜய் தொண்டர்கள் வீசிய கட்சியின் துண்டு, மாலைகளை அன்புடன் கேட்ச் பிடித்து தனது கழுத்தில் அணிந்து கொண்டார். உங்கள் விஜய், பெரியாரின் பேரன், தமிழகத்தின் அடையாளம் என்ற வரிகள் அடங்கிய பாட்டுக்கு இடையே ரேம்ப் வாக் செய்த விஜய், தனது வேட்டைக்காரன் படத்தில் வருவதுபோல் தொண்டர் ஒருவர் வீசிய துண்டை தலையில் கட்டி தொண்டர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.

News August 21, 2025

Online Gaming மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது

image

ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேறிய நிலையில், இன்று ராஜ்யசபாவில் நிறைவேறியது. இது, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி சட்டமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு ஏற்கெனவே அபராதம், 7 ஆண்டு சிறை தண்டனை உள்ள நிலையில், புதிய மசோதா சட்டமானால் ஆன்லைன் சூதாட்டத்துக்கும் அபராதம், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். உங்கள் கருத்து என்ன?

News August 21, 2025

குங்குமம் கொட்டினால் அபசகுணமா?

image

குங்குமம் கொட்டினால், பெரிய அபசகுணம் என அலறுவார்கள். மேலும் வீட்டுப் பெண்களுக்கு தாலிக்கு ஆபத்து என்றும் நம்பப்படுகிறது. திருமணமான பெண்களின் அடையாளமாக குங்குமம் இருப்பதால், இவ்வாறான கருத்து நிலவுகிறது. குங்குமம் கொட்டுவதால், தீங்கு நடந்ததாக சிலர் சொன்னாலும், அதெல்லாம் Coincidence மட்டுமே. கைதவறினாலும், பசங்க விளையாடும் போது குங்கும சிமிழி கீழே விழுந்தாலும், மனம் சஞ்சலப்பட வேண்டாம்!

News August 21, 2025

BREAKING: தவெக மாநாடு.. விஜய்யின் தொண்டர் மரணம்

image

மதுரை தவெக மாநாட்டுக்கு சென்ற சென்னையை சேர்ந்த பிரபாகர் என்பவர் சக்கிமங்கலம் அருகே மாரடைப்பால் உயிரிழந்தார். ஏற்கெனவே மாநாட்டு அரங்கில் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநாட்டு அரங்கில் 40-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 21, 2025

மக்கள் மன்னன், பெரியாரின் பேரன் விஜய் என புகழாரம்

image

மதுரை, தவெக மாநாட்டு அரங்கில் அக்கட்சியின் சார்பில் 2-வது பாடல் வெளியிடப்பட்டது. அதில், மக்களின் மன்னனே.. பெரியாரின் பேரனே என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன. 2026 தேர்தலில் தமிழகத்தின் வரலாற்றை மாற்றும் ‘எங்கள் அண்ணன்’ உங்கள் விஜய், உங்கள் விஜய் வரவா என பெரியார், விஜயகாந்த் உள்ளிட்டோரை ஹைலைட் செய்யும் வரிகள் இடம் பெற்றுள்ளன.

News August 21, 2025

தவெக மாநாடு: 10 பேர் ஹாஸ்பிடலில் அனுமதி

image

மதுரையில் தவெக மாநாட்டுக்குச் சென்ற தொண்டர்கள் வெயில் தாங்க முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுவரை சுமார் 50 பேர் மயக்கமடைந்துள்ளனர். இதில், உடல்நலக் கோளாறு ஏற்பட்ட 9 பேர் வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ஒருவர் மதுரை அரசு ஹாஸ்பிடலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொண்டர்கள் பாதுகாப்பாக இருக்க விஜய் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ட்ரோன் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!